Archive For The “இது புதுசு” Category

புறா வரையக் கற்றுக் கொடுத்தவரும் பூசணி சாகுபடியும்

By |

புறா வரையக் கற்றுக் கொடுத்தவரும் பூசணி சாகுபடியும்

குறுநாவல்    ராத்திரி வண்டி   2 ஆ   சீவகன் பெஞ்ச் ஓரத்தில் உட்கார்ந்து கொண்டான். படத்தையும் வரைகிறவனையும் மாறிமாறிப் பார்த்தான்.   ஒரு பெரிய மண்டபம். சுருள் சுருளாக இருட்டும் வெளிச்சமும் மாறி மாறி நிறம் காட்ட, வளைந்து போகும் மாடிப் படிகள். அந்த மாய லோகத்தில் ஒரு பக்கம் ஓட்டை உடசல் நாற்காலி, பழைய கடியாரம், பெடஸ்டல் ஃபேன் என்று அம்பாரமாகக் குவிந்திருக்கிறது. உடம்பில் துணி இல்லாமல், ஒரு இளம்பெண் படிக்கட்டு அருகே தரையில் கால்…




Read more »

ரயில்வே ஸ்டேஷனில் ஓவியன் – சர்ரியலிச ஓவியம்

By |

ரயில்வே ஸ்டேஷனில் ஓவியன் – சர்ரியலிச ஓவியம்

ராத்திரி வண்டி    குறுநாவல்              இரா.முருகன்  பகுதி – 2 அ   ’அசிங்கமாப் படம் போட்டிட்டிருக்கார் சார்.. இங்கே கொஞ்சம் வாங்க..’   புக்கிங் கிளார்க் ராமசாமி குரல் முன்னால் வந்தது. அப்புறம் சங்கடமாகச் சிரித்துக் கொண்டே கலாசி கணபதி.   பெஞ்சில் யாரது?   அவன் கொஞ்சம் வித்யாசமாகத் தெரிந்தான். பிடிவாதம் பிடிக்கும் குழந்தையைப் போல் நாக்கைத் துருத்திக்கொண்டு சிமெண்ட் பெஞ்சின் விளிம்பில் தொக்கினாற்போல் உட்கார்ந்திருந்தான். முன்னால் விரித்து வைத்த பலகை. ஒரு முப்பது வயது….




Read more »

ராத்திரி வண்டி – குறுநாவல்

By |

ராத்திரி வண்டி – குறுநாவல்

ராத்திரி வண்டி  –  குறுநாவல்     ’கணையாழி’யில் தி.ஜானகிராமன் நினைவுக் குறுநாவல் போட்டியில் தேர்வாகி, ஜுன் 1992-ல் பிரசுரமானது.  அட்சரா பதிப்பகம் வெளியிட்ட என் முதல் குறுநாவல் தொகுப்பான ‘தகவல்காரர்’ நூலில் இடம் பெற்றது.   இந்தக் குறுநாவலின் கதையாடல் பற்றிக் குறிப்பிட வேண்டும். நனவோடை சற்றே மாற்றமடைந்து கதைப் போக்கில் அவ்வப்போது முன்னால் வந்து வந்து போகும் இந்தக் கதையாடல், இதற்கு அப்புறம் எழுந்த என் அரசூர் நாவல்களுக்கான நடையைத் தீர்மானிப்பதில் பெரும் பங்கு…




Read more »

நைஜீரிய உபசாரம்

By |

நைஜீரிய உபசாரம்

 உடைப்பு Things Fall Apart நாவல் கிடைத்தது. நைஜீரிய எழுத்தாளரான நோபல் பரிசு பெற்ற சினுவா அச்பெ எழுதிய இந்த நூல் சின்னச்சின்ன சம்பவங்கள் மூலம் நகரும் கதையமைப்பு கொண்டது. அவ்வப்போது நைஜீரியர்கள் பயணம் வைத்து நண்பர்களையும், உறவினர்களையும் சந்திக்கும்போது கோக்கோ கொட்டைகளைத் தின்னக் கொடுத்து உபசரிப்பது நாவலில் சீராக நடக்கிறது. ’காப்பி சாப்பிடுங்க’ மாதிரி ’கோக்கோகொட்டை தின்னுங்க’ உபசாரம் அங்கே பரவலானது. ஃபூ-ஃபூ என்ற வாழைக்காய்ப்பொடி கரைத்துச் சமைத்த பண்டத்தையும், சர்க்கரை வள்ளிக்கிழங்கு கூட்டையும் பரிமாறி…




Read more »

விடிவதற்கு வெகு முன்பே அவர்கள் புறப்பட்டார்கள். ஆடிஆடிப் போன காளை வண்டி

By |

விடிவதற்கு வெகு முன்பே அவர்கள் புறப்பட்டார்கள். ஆடிஆடிப் போன காளை வண்டி

மனை                        பகுதி 8   நடு இரவிலும் உறங்காத மனை.   மற்ற மனைக்காரர்கள் எல்லாம் வந்து பேசியபடி இருக்க, கார்த்தியாயினியின் உடலைப் பழந்துணியால் மூடி இருந்தது. குழந்தை நந்தினி அழுதழுது பகவதியின் மடியில் உறங்கிப் போயிருக்க, சித்ரனுக்காகக் காத்திருந்த பகவதி.   குரல்கள்..அடங்கி ஒலிக்கிற குரல்கள்.   ‘புழைக்கு அப்புறத்து மாப்ளாமாரைக் கூப்பிட்டால் அப்புறப்படுத்தி விடலாம்’.   ‘உள்ளூர்க்காரர்களே போதும்’.   ‘வேண்டாம்… சமயம் கிடைக்கும் போது சொல்லிக் காண்பிப்பார்கள்’.   ‘ஏதேது.. சம்பந்தம் வைத்துக்…




Read more »

அந்தத் தளிரை இழுத்துக் கொண்டு ஆடியாடிப் போன நம்பூத்ரி – மனை குறுநாவல் பகுதி 8

By |

அந்தத் தளிரை இழுத்துக் கொண்டு ஆடியாடிப் போன நம்பூத்ரி – மனை குறுநாவல் பகுதி 8

குறுநாவல்  மனை  இரா.முருகன்              பாகம் 8   ‘வா சனியனே’   அந்தப் பச்சைத் தளிரை இழுத்தபடியே ஆடியாடிப் போகிற மூத்த நம்பூதிரி.   நீலகண்டன் கார்த்தியாயியை எட்டி உதைத்துத் தள்ளினான்.   ‘ரான்.. ரான்.. தள்ளாதீர்கள்.. வல்லாத்த ஷீணம்.. நானே போகிறேன்.. குழந்தையையாவது தயவு செய்து..’   ‘உன் வம்சத்தின் நாற்றக் காற்றே இங்கே அண்ட வேண்டாம்.. ஒழிந்து போ..’   பலம் கொண்ட மட்டும் தள்ளிய நீலகண்டனின் கைகளும் கால்களும்… மதில் சுவரில் பலமாகத்…




Read more »