Archive For The “இது புதுசு” Category

போகம் தவிர் – சிறுகதை : நண்டுமரம் சிறுகதைத் தொகுப்பிலிருந்து

By |

போகம் தவிர் – சிறுகதை : நண்டுமரம் சிறுகதைத் தொகுப்பிலிருந்து

போகம் தவிர்                  பசித்தது.   காலையில் சாரங்கன் எழுந்திருக்கும்போது சிறு பொறி போல ஆரம்பித்து, வயிற்றில் அக்னியாக வளர்ந்து உடம்பையே வளைத்து எரிக்க முற்படும் பசி.   தட்டு நிறைய இட்லி. பொன் நிறத்தில் வடை. சுருட்டி வைத்த அதே நிற தோசைகள். அரிசிச் சோறு. புளிக் குழம்பு. தேங்காய் அரைத்து விட்ட அவியல். கிண்ணம் நிறைய பால் பாயசம்.  கத்தரி, வெண்டை, கீரைகள், புடல், பாகற்காய் என்று பச்சைக் காய்கறி. ஆப்பிள், மா,…




Read more »

ஜவஹர்லால் நேரு மறைந்த தினத்தில் ஒரு படப்பிடிப்பும பிறகும்

By |

ஜவஹர்லால் நேரு மறைந்த தினத்தில் ஒரு படப்பிடிப்பும பிறகும்

அந்தப் பித்தளைக் குடம் திரும்ப வந்து சேரல்லேன்னு சொக்கலிங்கம் ஆசாரியார் வீட்டுக்கு வந்து சத்தம் போட்டுட்டுப் போனார். சகலை புகார் பண்ணியிருக்காராம்.   ஆசாரியும் அவர் சகலையும் என்ன விதமான ஆட்கள் என்று  புரியவில்லை. நாடு முழுக்க துக்கம் அனுஷ்டிக்கிற நேரம். இந்த வார்த்தை எடுப்பாக இல்லையா? அனுஷ்டித்தல். ஜாமான் மாதிரி கிடையாது. நாலு பேர் கூடியிருக்கப்பட்ட இடத்துலே கவுரவமாகச் சொல்லலாம். குடத்தோடு பெண்கள் இருந்தாலும் சரிதான்.   அது சரி. துக்கம் அனுஷ்டிக்கிற நேரம் என்பதால் …




Read more »

குடம் – சிறுகதை நண்டுமரம் சிறுகதைத் தொகுப்பிலிருந்து

By |

குடம் – சிறுகதை    நண்டுமரம் சிறுகதைத் தொகுப்பிலிருந்து

குடம்   ஆகாசவாணியில் ஜவஹர்லால் நேரு இறந்து போன செய்தி படித்துக் கொண்டிருந்தபோது ஆனந்தராவ் சைக்கிளில் வந்து இறங்கினான். ஊர் முழுக்க கடையடைப்பும் அங்கங்கே வரப் போகவிடாமல் சைக்கிளை, கட்டை வண்டியை, பிளஷர் காரை எல்லாம் வழிமறிக்கிறதாகவும் தகவல் வந்துகொண்டேயிருக்க, இவன்  சைக்கிளில் எப்படித்தான் வந்தானோ.   எனக்கும் நேரு இஷ்டம்தான். ஆனாலும் அவர் இப்படித் திடீர் என்று போய்ச் சேருவார் என்று எதிர்பார்க்கவில்லை. எழுபத்து நாலு எல்லாம் ஒரு வயசா என்ன? சுதந்திர தினம், குடியரசு…




Read more »

Here comes The Crown Season 5

By |

Here comes The Crown Season 5

ஆவலோடு எதிர்பார்த்த The Crown Season 5 – நெட்ஃப்ளிக்ஸில் பத்து எபிஸோட்களில் கிட்டத்தட்ட ஐந்து இரண்டு நாளில் பார்த்தாகி விட்டது. sort of binge watching. பழைய ப்ரிட்டீஷ் பிரதமர் ஜான் மேஜர், காதலுக்காக முடிதுறந்த மன்னர் எட்வர்டின் நெருங்கிய நண்பன் போன்ற சேவகன் சிட்னி, ஹாரட்ஸ் சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் அல் ஃபயத், அவர் தந்தை என்று எலிசபெத் மகாராணி கதாபாத்திரத்தை விட மற்றவர்களைச் சுற்றிச் சுழலும் கதைப் போக்கு…. நாவல் தினை ஒரு…




Read more »

விரல் – புதிய சிறுகதை

By |

விரல் – புதிய சிறுகதை

விரல் – சிறுகதை                                 இரா.முருகன் சந்தன் என்ற சந்தான கோபாலன் அரங்கத்துக்குள் நுழைந்த போது,  ’மாதே மலயத்வ பாண்டிய சம்ஜாதே’ கம்பீரமாக ஒலித்துக் கொண்டிருந்தது.  கமாஸ் வர்ணம். மத்ய ஸ்தாயியில் ஜலஜலவென்று ஒன்றுக்கு இரண்டு சிட்டை ஸ்வரமாகப் பாடும்போது நர்மதை நதிப் பாலத்தில் நவஜீவன் எக்ஸ்பிரஸ் முன்னேறிக் கொண்டிருப்பது போல் பிரவாகம்.  அதுவும் ராஜாராமன் பாடினால். பாடிக் கொண்டிருக்கிறார்.   முதலிலிருந்து கேட்கக் கொடுத்து வைக்கவில்லை சந்தனுக்கு. வர்ணத்தில் கச்சேரி ஆரம்பித்திருப்பாரா அல்லது வாதாபி கணபதியிலா?…




Read more »

புது நாவல் ‘தினை’

By |

புது நாவல் ‘தினை’

‘தினை’ நாவல் கிட்டத்தட்டப் பாதி எழுதப்பட்டிருக்கிறது. ஜனவரியில் நிறைவடையும். எடிட்டிங்க் நிறையத் தேவைப்படும் புதினம் இது.




Read more »