Archive For The “இது புதுசு” Category

வாளி

By |

வாளி

                  வாளி             குளிகைகளைக் கொண்டுவர மறந்து விட்டிருந்தது.   செய்கிற எல்லாக் காரியத்திலும் சாயந்திரம் முதல் இப்படி அபத்தம் பற்றிக் கொண்டிருக்கிறது. நெரிசல் மிகுந்த பேருந்தில் ஏறியபோது போக வேண்டிய இடம் துல்லியமாக மனதில் இருந்தது. வண்டிக்குள்ளே இரைச்சலும், வியர்வையும் பக்கத்தில் நின்றவன் மூச்சில் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருந்த பூண்டு நெடியும் அவனைக் குழப்பமடைய வைத்திருந்தன. போதாக்குறைக்கு நடத்துனர்.   மீசை மழித்த அவர் முகம் கண்டிப்பையும், எந்த ஒழுங்கீனத்தையும் பொறுத்துக் கொள்ளத் தன்னால் முடியாது…




Read more »

கருப்பு வெள்ளையில் ஒரு படம் – சிறுகதை (நண்டுமரம் தொகுப்பில் இருந்து)

By |

கருப்பு வெள்ளையில் ஒரு படம் – சிறுகதை (நண்டுமரம் தொகுப்பில் இருந்து)

கருப்பு வெள்ளையில் ஒரு படம்                             நாயர்.   யாரோ கூப்பிட்டார்கள். அவனைத்தான்.   நாயர் என்று கூப்பிட்டால் திரும்பிப் பார்க்கவேண்டும் என்று இந்தப் பட்டணத்தில் குடியேறும் எல்லா மலையாளிகளையும் பழக்கியிருக்கிறார்கள். அல்லது அவரவர்களாகவே வந்த நாலைந்து நாளில் புரிந்து கொள்கிறார்கள்.   ‘டீ வேணுமா, நாயர்?’   கூப்பிட்ட சின்னப் பையன் கையில் இரும்பு வளையத்தில் தூக்கு மாட்டித் தொங்கிய டீ கிளாசுகளும், அலுமினியத் தட்டில் எண்ணெய் மினுக்கோடு வடையுமாக நின்றான்.   ‘அப்படிப் போடு….




Read more »

இன்னொரு குதிரை – சிறுகதை

By |

இன்னொரு குதிரை –  சிறுகதை

இன்னொரு குதிரை   குப்பன் நகரசபைத் தேர்தலில் நாலாம் வார்ட் வேட்பாளராக நிற்பதாக அறிவிப்பான்.  அஸ்து தேவதைகள் ஆமோதிப்பதாக ராமாமிர்த பாட்டி சொல்வாள்.   வாஸ்து தேவதைகளைத் தெரிந்தவர்களுக்குக்கூட அஸ்து தேவதைகளை அவ்வளவாகத் தெரியாது. இதுகள் சதா வானத்தில் சஞ்சரித்தபடி, யாராவது ‘எழவு விழ’, ‘நாசமாகப் போக’, ‘சனியன் பிடிக்க’ போன்ற அசுபமான பிரயோகங்களை உதிர்த்தால் உடனடியாக ஆமோதிப்பு தீர்மானம் நிறைவேற்றி அந்தப்படிக்கு காரியங்கள் நடக்க வைப்பதையே முழுநேரம் வேலையாகக் கொண்டவை.   கங்கையூரில் நகரசபை தேர்தல்…




Read more »

சகர் – சிறுகதை

By |

சகர் – சிறுகதை

சகர்   எதிர் ஃப்ளாட் என்று அந்தப் பெண் சொல்லி முடிக்கும் முன்பே வாசல் கதவு மூடி விட்டது.  சலிப்பு. ஆபீசுக்குக் கிளம்பும் அவசரம். சமையல்கட்டில் கத்தரிக்காய் வதக்கல் கரிந்து போகிற பயம். இதுவரைக்கும் எத்தனை பேர் கதவைத் தட்டித் திறந்து கருகின வதக்கலை குப்பையில் போட வேண்டி வந்ததோ.   எதிர் ஃப்ளாட் வாசலில் வெங்கடாசலபதி பெரிய படம் கதவு முழுக்க வருகிற மாதிரி வரைந்திருந்தது. இந்த ப்ளாட்டிலும் அதே மாதிரி படம் எழுதியிருந்ததால் வருகிறவர்கள்…




Read more »

இன்னொரு சிறுகதை – நண்டுமரம் தொகுப்பில் இருந்து

By |

இன்னொரு சிறுகதை – நண்டுமரம் தொகுப்பில் இருந்து

ரங்கா சேட்   ‘இதென்னடா நாய் வண்டி மாதிரி இருக்கு?’   பஸ்ஸில் ஏறினதும் ரங்கா சேட் கேட்டார்.   மகா தப்பு. அவர் சேட் இல்லை. தமிழ்தான். அப்புறம், அவராக பஸ்ஸில் ஏறவில்லை. திடகாத்திரமான நாலு இளவயசுப் பிள்ளைகள் பித்தளை கூஜா, கான்வாஸ் பை சகிதம் அவரை அலாக்காகத் தூக்கி பஸ் உள்ளே போட்டார்கள்.   ‘எதுக்கு மாமா கூஜாவும் மண்ணாங்கட்டியும்?’   முந்திரிக்காய் கூஜா மூடி லூசாகி வென்னீர் காலில்  சிந்தின அவஸ்தையைப் பொறுக்க…




Read more »

ஆழ்வார் – சிறுகதை

By |

ஆழ்வார் – சிறுகதை

அந்த முன்னிரவுச் சூழ்நிலை கொஞ்சம் அபத்தமாக இருந்தது. குண்டும் குழியுமாகக் கிடந்த தெருவில் பள்ளத்தில் இறங்கிய சைக்கிள் செயின் கழன்று போய் மாட்டிக் கொண்டிருந்தவன் யாரையென்று இல்லாமல் திட்டிக் கொண்டு நடுத் தெருவில் குனிந்து உட்கார்ந்திருந்தான். எதிரே பழைய கட்டிடம். கீழ்ப்பகுதியில் எல்லாம் கடைகள். ஒரு மாவு மெஷினும் உண்டு. கடைகளை அடைத்துவிட்டுக் கிளம்பிப் போயிருக்க, மாவு மெஷினிலிருந்து ஏதோ கரகரவென்று பொடியாகப் பிளாஸ்டிக் வாளியில் சுமந்து கொண்டுவந்து தெருவில் கொட்டி, நான்கைந்து பேர் கர்மசிரத்தையாகக் கையளைந்து…




Read more »