Archive For The “இது புதுசு” Category
இடாகினிப் பேய் இது பகுதியாக முன்னர் வெளியானது. அஃது படியா நின்றோர், கூறியது கூறற்றுயர் நீங்கவே தொடக்கத்தில் சில பத்திகள் கடந்து தொடர வேண்டுகிறேன். ‘இடாகினிப் பேய்களும்..’ என்ற பெயரில் என் (அண்மையில் காலம் சென்ற) நண்பர் கோபிகிருஷ்ணன் எழுதிய கதைத்தொகுப்பு பற்றிப் படித்தபோது எனக்கு இந்த இடாகினிப் பேயை எங்கேயோ பார்த்த நினைவு. சிலப்பதிகாரத்தைப் புரட்டிக் கொண்டிருந்தபோது அது வசமாகப் பிடிபட்டது. மாலதி என்ற பார்ப்பனி, மாற்றாள் மகவுக்குப் பால் தரும்போது பால் விக்கி, அந்தக்…
அண்மையில் படித்த துறை சார்ந்த நாவல்களில் வித்தியாசமானது, நண்பர் அபுல் கலாம் ஆசாத் எழுதிய ‘போலி’ . சினிமாவில் சண்டைக்காட்சிகளில் வில்லனாக, கதைப் போக்கின் படி கதாநாயகன், நாயகி, பெண்ணாக வேடமிட்ட கதாநாயகன் இப்படி சகலமானவர்களிடமும் உதை வாங்கும் அடியாளாக, மூன்றாம் மாடியிலிருந்து கீழே மோட்டார் பைக்கில் குதித்து (சரித்திரப் படத்தில் குதிரைமேல் குதித்து) ஓட்டிப் போகும் ஹீரோவின் டூப் ஆக உயிரைப் பணயம் வைத்து வெள்ளித்திரையில் தோன்றி மறையும் இந்த சண்டைக்கலைஞர்களின் அசாத்தியமான வாழ்க்கை கொண்டாடப்பட…
நேற்று சென்னை புத்தகக் காட்சி 2023-இல் நண்பர் கவிஞர் பெருந்தேவியின் கவிதைத் தொகுப்பு ‘அவன் கன்னத்தில் ஹைப்ரிட் செவ்வரளி பூக்கிறது’ வெளியிடப்பட்டது. நூலில் இருந்து ஓர் அருமையான கவிதை – நள்ளிரவில் ஃப்ரஞ்ச் ஃப்ரை தின்பவள் ————————————————- கவிஞர்களுக்கும் பூனைகளுக்கும் நள்ளிரவில் பசிக்கலாம் பெண்களுக்கு நள்ளிரவில் பசிக்கக் கூடாது ஆனால் சிங்கப்பூரில் இரவு கிடையாது 12.46 மொபில் செயலியில் ஃப்ரஞ்ச் ஃப்ரை ஆர்டர் செய்கிறாள் எப்போது வரும் நேரத்தைப் பார்க்கிறாள் வரைபடத்தைப் பார்க்கிறாள் பெயரைப் பார்க்கிறாள் ஏன்…
பெருநாவல் மிளகு – ஒரு சிறு பகுதி ———————————————– காவேரி நதியும், கோதாவரியும் கிழக்கு நோக்கிப் பெருகிப் போக, ஷராவதி நதியோ மேற்குத் திசையில் பிரவகித்து ஹொன்னாவரில் அரபிக் கடலில் கலக்கும். அமைதியான, பரந்த வெள்ளப்பெருக்காக நிலம் தொட்டு, பிரம்மாண்டமான ஜோகு அருவியாகப் பொங்கி, உயரம் கொண்ட மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரை அணைத்துக் கீழே ஆவேசமாகப் பொழிந்து, குறுகிய நதிதீரங்களுக்கு இடையே சுழித்துச் சுருண்டு, உயர்ந்து, அலையடித்துக் கடந்து சென்று, கடல் தீரத்தில் நுழைந்து, சதா இரைந்து…
என் புத்தாண்டு 2023 தீர்மானங்கள் ———————————————- 1) தலை முடிக்கு இனிச் சாயம் பூச மாட்டேன் 2) வாசிக்க எடுத்த புத்தகங்களில் சிலவற்றையாவது முதலில் இருந்து இறுதி வரை படித்து முடிப்பேன் 3) இலக்கியக் கூட்டங்களில் பார்வையாளனாக மட்டும் இருப்பேன் 4) இப்போதே அப்படித்தான் என்றாலும், உப்பும், உரைப்பும், எண்ணெயும் இன்னும் குறைத்து உண்பேன் 5) போயிருந்த திருமணங்களில் ஓதியிட்டுக் கொடுத்து அலமாரி முழுக்க இடம் அடைக்கும் எட்டு முழ ஜரிகை வேட்டிகளை அடிக்கடி உடுத்திக் கொள்வேன்,…
நண்பர் திருமதி அனுராதா கிருஷ்ணசாமியின் சரளமான மொழிபெயர்ப்பில் மிளிர்கிறது, ‘கடவுளுக்கென ஒரு மூலை’, சிறுகதைத் தொகுப்பு. சிறுவாணி வாசகர் மையம் வெளியீடு. மொத்தம் 14 கதைகள் -பஞ்சாபி, ஹிந்தி, ஒடியா, உருது, டோக்ரா, வங்காளி, குஜராத்தி, கன்னடம் என்று வரும் சிறுகதைகள் அத்தனையும் அந்தந்த மொழியில் பிரபலமான பெண் எழுத்தாளர்கள் எழுதியவை. ஆங்கில, ஹிந்தி வழியே தமிழுக்கு மொழிபெயர்ப்பானவை. கடைசிக் கதையான குஜராத்திச் சிறுகதை ’கதவு’ இப்படித் தொடங்குகிறது – ஹிமான்ஷி ஷேலாட் எழுதியது- // முட்டாள்ப்…