Archive For The “இது புதுசு” Category
உலகளவில் பிரபலமடைந்துள்ள செயற்கை அறிவு உரையாடல் அமைப்பு ChatGPT=யோடு அரட்டை அடித்துக் கொண்டிருந்தேன்….. நான் – உங்களுக்கு பாரதியாரைத் தெரியுமா? கணினி – பாரதியார் என்பவர் இந்தியாவின் மதுரை பகுதியில் பிறந்த ஒரு கவிஞர், பாடலாசிரியர், பேராசிரியர் மற்றும் சிந்தனைத் தலைவர். அவர் தமிழ் இலக்கிய உலகில் உயர்ந்த இடம் பெற்றவர். அவர் செய்த பலருக்கு பலர் உள்ளனர். நான் – பாரதியாரின் கவிதைகளைப் படித்திருக்கிறீர்களா? கணினி – எனது படிக்கும் அளவுக்கு பாரதியாரின் கவிதைகள் தமிழ்…
குறிஞ்சிக்கு அலுப்பும் எரிச்சலுமாக வந்தது. சமவெளி மனுஷர்களுக்கு கால்நடையாகவும், எருது இழுக்கும் வண்டி ஏறியும், குதிரை சவாரி செய்தும், ஒட்டகம் ஏறிப் பாலை நிலம் கடந்தும் சதா மலைகளுக்குத் தாவியேறி அங்கே திமிர்த்து அலையும் பெண்டிரைக் கண்ணிமைக்காது நோக்கி வருவதில் என்ன ஓர் ஈடுபாடு! கொம்புத் தேன், தினை மாவு, வரகரிசி, உலர்ந்த உடும்பு மாமிசம் என்று பெருமளவு மலைபடு பொருள்கள் வாங்கி, அரிசியும், கேப்பையும், மதுவும் கொடுத்துப் பண்ட மாற்று செய்வதில் அவர்களுக்கு ஆர்வம் நிறைய…
Regret to know of the sad demise of Thiru Professor Pas Pasupathi. we have lost a walking encyclopedia of Tamil language, Tamil culture . Tamil literature and music. He was another Roja Muthiah with a huge digitized data of old Tamil magazines, with thousands of metalinks in his neurons. When I was writing my novel…
மாடத்தி சொன்னாள் – ”இன்னிக்கும் தேனும் தினைமாவும் தான் காலை ஆகாரமாக கழிக்க வேண்டியிருக்கு. இந்த மாதம் நாலு விருந்தாளி வந்தாச்சு. யவனன், சீனன் என்று அவங்க எல்லோரும் நாம் தினம் சாப்பிடறது இதுதான், எது, தேன், தினைமாவு. இதைத் தான் வாழ்க்கை முழுக்க தின்னுட்டிருக்கோம்னு நினைக்கறவங்க”. ”அதை உறுதிப்படுத்த குரங்கு வாழைப்பழம் திங்கற மாதிரி அவங்க வந்து பார்க்கறபோது எல்லாம் இதை நாமும் சாப்பிட்டு அவங்களுக்கும் தரணும். ”போன மாதம் நீ வரலே அப்போ வந்த…
திண்ணை இணைய இதழில் தொடங்கியிருக்கிறது என் அடுத்த நாவல் ‘தினை’ அத்தியாயம் ஒன்று // அழகான மனுஷித் தலையும் உடல் இறுதிப் பகுதியில் இன உறுப்பு படர்ந்திருக்க, பெருந் தொடைகள் உடையின்றி மின்ன, அங்கே கீழே தொடங்கிய வளைந்து நிமிர்ந்த கொடுக்கு உள்ளே கருநீல நிறத்தில் மின்னும் விஷத்தோடு ததும்ப பாதி தேளான தேளம்மை ஏமப் பெருந்துயில்-முன் அரங்கில் Pre-Cryostasis Bay கண்ணாடிப் பேழைக்குள் கிடத்தப்பட்டாள். ஏமப் பெருந்துயிலில் அமிழ இங்கே சிலர் காத்திருப்பில் – தொந்தரவு…