Archive For The “இது புதுசு” Category
திண்ணை டாட் காம் இணைய இதழில் வெளியாகும் என் புது நாவல் தினை – ஒரு சிறு பகுதி புது நாவல் தினை – நல்ல உணவு தன்னைத் தானே சமைத்துக்கொள்ளும் ”மகா ப்ரபு, சங்க காலம் யார் போனது? அந்தக் காலத்தைப் பகுதி வனைந்த நிகர்மெய் வெளியில் அல்லவோ எங்களை அனுப்பி வைத்தீர்கள்”. குயிலி சிரித்தபடி அமர்ந்தாள். பெருந்தேளர் சிரிக்க அவையே நகைத்தது. “சுனையும், மலையும், கூத்துப் பரம்பும் பகுதி உண்மை. மற்றபடி அங்கே இருந்தவர்கள்…
என் புது நாவல் தினை, இணைய இதழ் திண்ணையில் வாராவாரம் வெளியாகிறது. இந்த வாரம் வெளியாகி இருக்கும் அத்தியாயம் -5 சில பகுதிகள் பெருந்தேளர். ஒப்பற்ற, பிரம்மாண்டமான, அனைத்து அதிகாரத்துக்கும் ஊற்றுக்கண்ணான பெருந்தேளர். சகல வல்லமையும் கொண்ட, அறிவின் ஏக உறைவிடமான மகத்தான ஆளுமை பெருந்தேளர். ஊரும், நடக்கும், ஓடும், நீந்தும், பறக்கும் சகல உயிரினங்களுக்கும், கர்ப்பத்திலிருக்கும் சிசு முதல் காடேகக் காத்திருக்கும் விருத்தர் வரை அன்போடு எந்நேரமும் வழிநடத்தலும், வழிகாட்டுதலும் செய்த, செய்யும், என்றும் செய்யக்…
என் புது நாவல் ‘தினை’ அத்தியாயம் 5 இன்று பதிப்பான திண்ணை டாட் காம் இணைய இதழில் பிரசுரமாகி உள்ளது. அதிலிருந்து ஒரு சிறு பகுதி – குயிலியும் வானம்பாடியும் அவசரமாக நடந்த ’ஏமப் பெருந்துயில்’ Cryostasis என்று எழுதி இருந்த ஒழுங்கை, இருட்டும், அமைதியுமாக நீண்டு போனது. ஒரே போல ஐந்தடி உயரமும், ஆறடி நீளமும், இரண்டு அடி அகலமுமான தேள்கள் அங்கே நகர்ந்து கொண்டிருந்தன. அவற்றின் பழுக்கக் காய்ச்சிய சம்மட்டி போன்ற பெரிய கொடுக்குகள்…
என் பயோ பிக்ஷன் நாவல் தியூப்ளே வீதி இப்போது ஸீரோ டிகிரி பப்ளிஷிங் வெளியாடாக வந்துள்ளது. நாவலில் இருந்து- ——————————————————————————— மொத்தமே இருபது பேருக்கு நடைபெறும் வகுப்பு என்பதால், பின் வரிசையை ஒட்டி இருக்கும் ஒருக்களித்த கதவைத் திறந்து இஷ்டம் போல வெளியே நழுவ முடியாது. உள்ளே திரும்பி வந்து, கும்பலில் ஒருத்தனாக உட்கார்ந்து, ரஃப் நோட்டில் பால் பாயிண்ட் பேனாவால், முன் வரிசையில் உட்கார்ந்திருக்கும் அம்புஜவல்லியையோ, உமாராணியையோ, புஷ்பகலாவையோ கோட்டுச் சித்திரமாக வரைய முடியாது. லெய்பினிஸ்…
முதுபெரும்கிழவன் சொல்லி முடிக்கும்போது சீனர் மந்திலிருந்து கால் தாங்கித் தாங்கி வந்தார். குறிஞ்சி குடிலுக்கு வந்து கொண்டிருந்த சீனரின் மொழிபெயர்ப்பாளன் நடந்தபடிக்கே பின் தலையைச் சற்றே திறந்து எதையோ அழுத்திக் கபாலத்தை மறுபடி மூடிக்கொண்டான். ஒரு வினாடி இந்த நிகழ்வைப் பார்த்தவள் ராக்கி முதுகிழவி. வயதானதால் மனமும் கண்ணும் குறக்களி காட்டுவதாக இருக்குமோ என்று நினைத்ததைச் சொல்லியபடி போனாள் அவள். கீழே மலை ஏறத் தொடங்கி இருக்கும் இரண்டு பேர் தலையில் சுமந்திருப்பது சீனப் பிரப்பம் பெட்டி…
என் புது நாவல் தினை, இணைய இலக்கியப் பத்திரிகை திண்ணையில் வெளிவந்து கொண்டிருக்கிறது. இந்த வாரம் வெளிவந்திருக்கும் அத்தியாயம் நான்கு – சிறுபகுதி இங்கே ———————————————————————————– வெளியே ஏதோ பெருஞ்சத்தமாகக் கேட்டது. சமவெளியில் இறங்கி, கரும்புத் தோட்டத்துக்குள் யானைகள் உண்டு மகிழ வராமல் அச்சுறுத்தி விரட்ட ஓவென்று கூட்டமாக ஆர்ப்பரித்து அல்லது சீனவெடி வெடித்து ஓட்டுவது வழக்கம் தான். காற்று நிலைத்த மாலை நேரங்களில் அந்தச் சத்தம் மலையேறி ஒலிப்பதுமுண்டு. எனில், பகல் நேரத்தில் யானை எங்கே…