Archive For The “இது புதுசு” Category
என் இன்னொரு நாவல் 1975 ஸீரோ டிகிரி பப்ளிஷிங் வெளியீடாகப் புதுப் பதிப்பு கண்டிருக்கிறது. நாவலில் இருந்து, முன்னுரை ———————————————————————————————– தன் வரலாறும் புனைவும் கலந்த பயோபிக்ஷன் நெம்பர் 40, ரெட்டைத்தெரு, தியூப்ளே வீதி என்ற இரு நாவல்களாக வெளிவந்ததும் அந்த உத்தியை இன்னும் சற்று நீட்சி அடைய வைத்து, புனைவின் சுதந்திரமும், நிகழ்ந்ததை நிகழ்ந்தபடி காட்டும் வரலாற்றின் தகவல் துல்லியமும், ஒருங்கமைதியும், செறிவுமாக ஒரு படைப்பு எழுதிப் பார்க்கத் தோன்றியது. வழக்கம் போல் சிறுகதைப் பொறியைக்…
புதுப் பதிப்பு காணும் என் நூல்கள் வரிசையில் ஸீரோ டிகிரி பப்ளிஷிங் புது வெளியீடாக இந்த ஆண்டு வந்த நாவல்கள் – அரசூர் வம்சம், விஸ்வரூபம், அச்சுதம் கேசவம், வாழ்ந்து போதீரோ, தியூப்ளே வீதி இப்போது புதுப் பதிப்பு கண்ட பயோ பிக்ஷனல் நாவல் – நெம்பர் 40, ரெட்டைத் தெரு நெம்பர் 40, ரெட்டைத்தெரு நாவலில் இருந்து ————————————————————————————————- மார்கழி விடிகாலையில் தலையில் அந்தப் பட்டுத் துணியைத் தோளில் வழிகிற கம்பீரமான முண்டாசாகக் கட்டிக்கொண்டு மீசை…
எடிட்டிங் ஒருவாறு பூர்த்தியாக்கி என் அடுத்த நாவல் ‘தினை அல்லது சஞ்சீவனி’ பதிப்பாளர்களுக்கு first cut version ஆக அனுப்பப் பட்டுள்ளது நாவல் அமைப்பு – பூர்வாங்கம் அத்தியாயம் 1 – 15 மத்தியாங்கம் அத்தியாயம் 16- 25 பூர்வ உத்தராங்கம் அத்தியாயம் 26 -40 உத்தராங்கம் அத்தியாயம் 41-44 பூர்த்தி முக்கிய கதாபாத்திரங்கள் குயிலி, வானம்பாடி பொது யுகம் 5000 பெருந்தேளர் பொது யுகம் 5000 குழலன் பொது யுகம் 5200 கர்ப்பூரம் பொது யுகம்…
எல்லா அலுவலக, சமூக இடையாடலுக்கான நுகர்வோர் பொருள் விற்கும் கடைகள், உணவு விடுதிகள் என்று பல நிறுவனங்களில் தேளர், கரப்பர், மானுடர் என்ற இந்த மூன்று இனங்களின் தனிவெளியில் அவரவர் இனம் தாண்டாமல் வேண்டிய அளவு மட்டும் ஊடாடி வாழ்கிறார்கள். உணவைப் பொறுத்து மானுட இன உணவின் சுவைகளை மற்றவர்களும் வரித்துக் கொண்டிருக்கிறார்கள். எனினும் அழுகிக் கெட்டுப்போன உணவை பாகம் செய்து கரப்பர்களுக்கு மனதுக்கு உகந்த உணவாக உண்ணத் தருவது நீடிக்கிறது. அந்த உணவு உருவாக்குமிடங்கள் மனுஷர்களுக்கான…
என் புது நாவல் தினை அத்தியாயம் 6 திண்ணை இணைய இதழில் பிரசுரமாகிறது. அதிலிருந்து – இந்தப் பயணத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட அறிவிப்பு வந்ததும் வானம்பாடி அதுவரை தங்கி இருந்த அரசு குடியிருப்பில் இருந்து குயிலியின் பெரிய இருப்பிடத்துக்கு வந்து விட்டாள். அரசுக் குடியிருப்பில் கரப்புத் தொல்லை அதிகம் என்று ஒரு தடவை அவசரமாகச் சொல்லி நாக்கைக் கடித்துக் கொண்டாள் வானம்பாடி. இரண்டு விதமாகப் பெரிய கரப்புகள் மானுடப் பெண்டிரைத் தொந்தரவு செய்வதுண்டு. அவர்கள் வீதியில் போகும்போது உருவம்…