Archive For The “இது புதுசு” Category

1896 மார்கழி அதிகாலையில் துரத்தி வந்த மயில்-பகவதியின் டயரியிலிருந்து

By |

1896 மார்கழி அதிகாலையில்  துரத்தி வந்த மயில்-பகவதியின் டயரியிலிருந்து

அரசூர் வம்சம், விஸ்வரூபம், அச்சுதம் கேசவம் வரிசையில் நான்காவது நாவல் வாழ்ந்து போதீரே. இந்நாவல்கள் அனைத்தும் ஸீரோ டிகிரி பப்ளிஷிங் நிறுவனத்தால் நேர்த்தியான அச்சுப் பதிப்புகளாக வெளிவந்துள்ளன= வாழ்ந்து போதேரே நாவலில் வரிசைப்படியான அடுத்த பகுதி தொடர்ச்சி இது செப்டம்பர் 1896 பகவதியின் டயரிக் குறிப்பு தொடர்ச்சி இன்னிக்குக் காலம்பற இப்படித்தான் தெம்பா காப்பி உபசாரம் எனக்கு நானே நடத்திண்டு, கோலம் போட்டு முடிச்சுட்டு உடனே குளிச்சேன். சரி இவ்வளவு பண்ணியாச்சு, மார்கழி ஆச்சே, கோவிலுக்குப் போகலாம்னு…




Read more »

காப்பி உபசாரமும், பக்த விஜயமும், புள்ளிவரிசை தப்பாத மார்கழிக் கோலமும்

By |

காப்பி உபசாரமும், பக்த விஜயமும், புள்ளிவரிசை தப்பாத மார்கழிக் கோலமும்

அரசூர் வம்சம் தொடங்கி, விஸ்வரூபம், அச்சுதம் கேசவம் வழியே நான்காவது அரசூர் நாவல் வாழ்ந்து போதீரே. நாவலில் இருந்து – ஸீரோ டிகிரி பப்ளிஷிங் வெளியீடு (பகவதியின் டயரியில் இருந்து) 1896 செப்டம்பர் 23 புதன்கிழமை விடிகாலையில் குளிக்கறது நல்ல பழக்கம் தான். இங்கே அரசூர்லே, எல்லார் வீட்டுப் பெண்களும் அதேபடிக்குத் தான் செய்யற வழக்கம். முக்கியமா செவ்வாய், வெள்ளிக் கிழமை. அதோடு கூட, மாசாந்திரம் விலகி இருக்கறது கழிஞ்சு. அப்புறம் மார்கழி மாசம் முப்பது நாளும்….




Read more »

மேல்மாடி பஞ்சாபி பெண்கள் குங்குமம் வாங்கிப் போக அமைதியாகக் கிடந்தது வீடு

By |

மேல்மாடி பஞ்சாபி பெண்கள் குங்குமம் வாங்கிப் போக அமைதியாகக் கிடந்தது வீடு

அரசூர் நான்கு நாவல் தொகுதியில் நான்காவது நாவல் வாழ்ந்து போதீரே-யிலிருந்து நான் சீக்கிரம் சாப்பிட்டு முடிக்கறேன். அப்புறம் மயிலைப் பாரு. அது உனக்காகக் காத்திருக்கும். திரும்ப அவன் ஜெயம்மாவை வணங்க, அவள் திருப்தியாக அரட்டையைத் தொடர்வதற்காகத் திரும்ப உள்ளே போனாள். பெண்களுக்கே ஆன பேச்சு என்று சங்கரன் ஊகிக்க, அவனை விலக்கி வைத்திருந்தார்கள். மீரட் கத்தரிக்கோல் என்று வசந்தி உச்சக் குரலில் சிரித்தபடி சொல்ல, ஜெயம்மா ஏற்று வாங்கி இன்னும் கொஞ்சம் சுருதி சேர்த்தாள் அவுட்டுச் சிரிப்புக்கு….




Read more »

மயிலாடும் போது அன்னபூரணி என விளித்து சோறு கேட்டு வந்த பைராகி

By |

மயிலாடும் போது அன்னபூரணி என விளித்து சோறு கேட்டு வந்த பைராகி

அரசூர் வம்சம், விஸ்வரூபம், அச்சுதம் கேசவம், வாழ்ந்து போதீரே இவை நான்கும் சேர்ந்து அரசூர் நாவல் தொகுதியாக கிட்டத்தட்ட 2000 பக்கங்களில் விரியும் கதை. அபூர்வமான தமிழ்ப் புத்திலக்கியத் தொகுதி இது. ஸீரோ டிகிரி பப்ளிஷிங் வெளியீடு. வாழ்ந்து போதீரே நாவலில் இருந்து அடுத்த சிறுபகுதி. சத்சங்கும் அகண்ட நாம பஜனையும் தில்லி முழுக்கக் கொடி கட்டிப் பறக்கிறது. தெற்கத்தி மனுஷர்கள், வடக்கர்கள், மீன் வாசனையோடு கிழக்கில் இருந்து வந்த முக்கோபாத்தியாயா, சட்டோபாத்தியாயா வகையறாக்கள், இன்னும் மேற்கில்…




Read more »

சோழ பிரஹ்மஹத்தி, மதறாஸி சாம்பார் குடிக்கறதுக்கே வந்து சேர்ந்தியே

By |

சோழ பிரஹ்மஹத்தி, மதறாஸி சாம்பார் குடிக்கறதுக்கே வந்து சேர்ந்தியே

அரசூர் வம்சம் நான்கு நாவல் வரிசையில் நான்காவது வாழ்ந்து போதீரே நூலில் இருந்து ஸீரோ டிகிரி பப்ளிஷிங் வெளியீடு வேறே என்ன விசேஷம் உங்க ஊர்லே என்று இலைக்கு முன்னால் கொஞ்சம் சிரமத்தோடு இருந்து தயிர் சாதத்தை ரசித்துக் கொண்டிருந்த ஜெயம்மாவும் கேட்டாள். அங்கே இப்போ மனுஷர்கள் எல்லாம் விதி முடிஞ்சு சாகறது திரும்ப நடக்கறது ஆனா, மிருகங்கள் ஆயுசு நீண்டு போயிருக்காம். சீரியஸா ஒரு தோஸ்த், தியாகராஜன்னு பேரு, எனக்கு போஸ்ட் கார்ட் போட்டிருக்கான். அங்கே…




Read more »

அந்த ஊரில் யாரும் நடப்பதே இல்லை

By |

அந்த ஊரில் யாரும் நடப்பதே இல்லை

அரசூர் நான்கு நாவல் வரிசையில் நான்காவது நாவல் = வாழ்ந்து போதீரே. அதில் அத்தியாயம் 6இல் இருந்து வசந்தியின் அப்பா சுந்தர வாத்தியார் பேசிய வினோத இந்தி புரியாமல் காப்பரசி மகத்துவமறியாது அதையும் தொட்டிலில் விட உத்தேசித்த அண்டை அயல் குழந்தைகளுக்காக ஜெயம்மா ஒரு பாக்கெட்டை பிரித்து ரெண்டு பிடியாக உள்ளே இருந்து எடுத்துச் சாப்பிட்டு, அதன் சேர்மானம் சொல்லி அதுகளையும் சாப்பிடவும், இலை போட்டபின் பந்திக்கு உட்காரவும் வைத்தாள். பந்தியில் பாயசம் பரிமாறிக் கொண்டிருந்தபோது கார்…




Read more »