Archive For The “இது புதுசு” Category

யாசுநாரி காவபாத்தா

By |

  யாசுநாரி காவாபாத்தா எலும்பும் தோலுமாக ஓர் அமெரிக்க ராணுவ வீரன். சிறைப் பிடித்து வைக்கப்பட்டவன். அவனை வளைத்துப் பிடித்த எதிரிகள் குரூரமானவர்கள். ஒரு நாளைக்குப் பதினாலு மணி நேரத்துக்கு மேல் அடிமை போல் இடுப்பொடிய வேலை செய்ய வைக்கிறார்கள். அடர்ந்த வனாந்தரங்கள், மலைச்சரிவுகள் வழியே ரயில் பாதை அமைக்கிற வேலை. உழைப்புக்கு ஊதியம் கிடையாது என்பதோடு அப்படி மாடு மாதிரி உழைக்க உடம்பில் சக்தி இருக்கச் சாப்பாடும் சரியாகப் போடுவதில்லை. பசியால் சோர்ந்து போய் வேலை…




Read more »

எம் ‘ஐயர்’

By |

  எம் ‘ஐயர்’ சொற்கள் கற்பிதம் என்றானபோது அவற்றின் பொருளும் அவ்வாறே. படைப்பாளி என்ற பதத்துக்கு இன்று வழக்கிலிருக்கும் `இலக்கிய, கலைப் படைப்பை உருவாக்குகிறவர்’ என்ற பொருள் சற்றே நீட்சிப்பட, `ஒரு வழங்கு மொழியை அடிப்படையாகக் கொண்டு அமைந்த நுண்ணிய ரசனையின் பாற்பட்டுத் தொடங்கி, அந்த அடிப்படையையும் கடந்து விரியும் பரப்பில் நேர்த்தியான வாசிப்பு, காட்சி, கேள்வி அனுபவத்தை ஓர் இனக்குழு பெறவும், அதை முன்னெடுத்துச் செல்லவும், செழுமையுறப் பேணவும், அதன் வழி யே பெற்ற ஊக்கத்தை…




Read more »

பகாகா பகாகா

By |

  நத்தார்தினம் (கிறிஸ்துமஸ்) வர இரண்டு மாதம் இருக்கும்போதே யார்க்ஷயரில் ஏகப்பட்ட தள்ளுபடி விற்பனைகள். உள்ளாடையிலிருந்து தங்க நகை வரை பலதும் சலுகை விலையில் கிடைப்பதால் ஹாலிபாக்ஸ் கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. ‘ஐந்து புத்தகம் ஐந்து பவுண்ட்’ – என்னைக் கவர்ந்த தள்ளுபடி விற்பனை இது. போன வாரம் புத்தகக் கடையில் நுழைந்து ஒரு சின்ன மூட்டை புத்தகங்களோடு திரும்பினேன். தொடர்கதை எழுதுவதைக் கூடத் தள்ளி வைத்துவிட்டுச் சுவாரசியமாக வாரக் கடைசியில் படிக்க எடுத்த முதல் புத்தகம்…




Read more »

கும்பகோணம் 2001

By |

  வாரம் முழுக்க வேலையில் மூழ்கி முத்தெடுத்து சனிக்கிழமை காலையில் வழக்கம் போல் பெட்டியைத் தூக்கிக் கொண்டு கிளம்பும்போது இவள் சொன்னாள் : ” மதியம் ரெண்டு மணிக்குக் கும்பகோணம் போகணும்..நினைவிருக்கில்லே?” “ஆபீஸிலிருந்து நேரா எழும்பூர் வந்திடறேன்” “எக்மோர் எதுக்குப் போறது? வீடியோ பஸ். வீட்டு வாசல்லேயே ஏறிக்கலாம். சாயந்திரம் ஆறரை ஏழு மணிக்கு மாப்பிள்ளை அழைப்பு நேரத்துக்குப் போய்ச் சேர்ந்து விடலாம்” வீடியோ பஸ். நினைத்தாலே வயிற்றில் ஒரு சங்கடம். முட்டிக் கொண்டு வரும்போது நிறுத்த…




Read more »

தந்தி வைத்தியம்

By |

  சென்னையில் இன்னும் தினசரி 100 தந்திகள் அனுப்பப் படுகின்றன / செய்தி. 1964 அல்லது 65. வீட்டு வாசல் தெளிக்க அதிகாலையில் வந்த பாண்டியம்மா அப்பத்தா ரேழிப் பக்கம் வாளியோடு நடந்தபோது காலில் ஏதோ வழுக்கியதாகச் சத்தம் போட எழுந்திருந்தோம். பத்து நிமிடத்தில் தகவல் பிழை கண்டறியப்பட்டு, ஏதோ பூச்சி கடித்தது என்று அடுத்த அறிவிப்பு. அப்பத்தாவுக்குத்தான் அன்றைக்கு வீட்டில் முதல் – புதுப்பால் டீகாஷன் காபி. அதைப் பாதி குடிக்கும்போதே மறு அறிவிப்பு. அரையடி…




Read more »