Archive For The “இது புதுசு” Category
Hello ERM I am Mani from Mumbai, running software company…….. Your project management article could have been little more crisp. But anyway it is good attempt. You can assume the readers have some sort of official eco system knowledge and you can aim for them I guess, you have forced yourself to write for all…
புதிய பார்வை சிறுகதை (அண்மையில் வெளியானது) குடம் இரா.முருகன் ஆகாசவாணியில் ஜவஹர்லால் நேரு இறந்து போன செய்தி படித்துக் கொண்டிருந்தபோது ஆனந்தராவ் சைக்கிளில் வந்து இறங்கினான். ஊர் முழுக்க கடையடைப்பும் அங்கங்கே வரப் போகவிடாமல் சைக்கிளை, கட்டை வண்டியை, பிளஷர் காரை எல்லாம் வழிமறிக்கிறதாகவும் தகவல் வந்துகொண்டேயிருக்க, இவன் சைக்கிளில் எப்படித்தான் வந்தானோ. எனக்கும் நேரு இஷ்டம்தான். ஆனாலும் அவர் இப்படித் திடீர் என்று போய்ச் சேருவார் என்று எதிர்பார்க்கவில்லை. எழுபத்து நாலு எல்லாம் ஒரு…
விஸ்வரூபம் ஒரு தொடர். – அரசூர் வம்சம் நாவலைத் தொடர்ந்து வருகிற மற்றொரு நாவல். இதுவும் கடந்து இன்னொன்றும் வரும். பகிர்ந்து கொள்ள ஏராளமாக இருக்கிறது. அரசூர் வம்சம் காட்டும் காலச் சூழல் 1850-1890 வரை என்று ஒரு சவுகரியத்துக்காக (என் சவுகரியம், உங்கள் சவுகரியம்) வகுத்துக் கொண்டால், விஸ்வரூபம் இருபதாம் நூற்றாண்டு பிறக்க ஒரு வருடம் முன்னால் தொடங்குகிறது. தமிழ்நாடு, கம்யூனிசத்தின் விதைகள் நிவர்த்தன சமரத்தில் விதைக்கப்பட்ட மலையாள பூமியான குட்டநாடு இவற்றோடு விக்டோரியா…
ஹரிவராசனம் எப்போது துவங்கியது? தேசாபிமானி இதழில் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரபூர்வ ஏடு இது) நான் ரசித்த கட்டுரை – சபரிமலை அய்யப்பன் கோவிலில் இரவு பதினொன்று மணிக்கு நடை அடைப்பது, கானகந்தர்வன் ஏசுதாஸ் பாடிய ஹரிவராஸனம் பாடலோடுதான். பகவான் அய்யப்பனுக்கும், அய்யப்ப பக்தர்களுக்குமான தாலாட்டு போன்றது இப்பாடலை இசைப்பது சபரிமலையில் பல ஆண்டுகளாகத் தொடரும் பழக்கமாக உள்ளது. ஹரிவராஸனம் எப்படி சபரிமலைக்கு வந்து சேர்ந்தது? ஐம்பது வருடம் முன்னால் சபரிமலை சந்நிதானத்தில் மேல்சாந்தியாக இருந்த…
அதிக வேகத்தோடு பேசப்படுவதால், முதல் சொல்லின் கடைசிச் சீரும், அடுத்த சொல்லின் முதல் சீரும் குழம்பி ஒலிப்பது இந்தப் பேச்சில் முக்கியமானது. அது தவிர சில பிரயோகங்கள் – அஸ்ஸலாயி, கேமனாயி (நல்லாயிருக்கு), ஸ்ஸி (கொஞ்சம்), ‘ன்னிட்டு’ (என்றால்) – இந்தப் பேச்சுமொழிக்குத் தனித்துவம் கொடுப்பவை. ஒரு நம்பூதிரி பலிதம் (பொழுதுபோக்கு கதை) அந்தப் பேச்சு வழக்கிலேயே.
முன்னுரைகளின் முகவுரை இரா.முருகன் எஸ்.பொ அளவுக்கு விமர்சனத்தை எதிர் கொள்ள வேண்டிய நிலைமை ஒரு படைப்பாளிக்கு வந்தால் கூறாமல் எழுத்து சந்நியாசம் போயிருப்பான். போயிருப்பாள். தமிழ் என்றில்லை, எந்த மொழி என்றாலும் இதே படிக்குத்தான். இவ்வளவு நீண்ட காலம், அதாவது கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு இப்படி யாரையும் துரத்தித் துரத்தி அடிக்க விமர்சகர்களும் சக எழுத்தாளர்களும் எங்கேயும் முனைந்ததாகத் தெரியவில்லை. சளைக்காமல், புறமுதுகு காட்டாமால் இந்த மாட்டடி, காட்டடியை எல்லாம் சமாளித்து நிற்கவே ஏகப்பட்ட பிரயத்தனம்…