Archive For The “இது புதுசு” Category

தமிழ் சினிமா Meme (Me2)

By |

  Meme on Tamil cinema நாகார்ஜுனனும் நண்பர் ராஜநாயகமும் ஆரம்பித்து வைத்த மெமே. நண்பர் ஜெ.ராம்கி அழைத்ததால் கலந்து கொண்டு, இதோ பதில்கள் 1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்? ஆறு வயதில். சிவகங்கையில் அப்பா வங்கி நிர்வாகியாக (ஏஜெண்ட் என்பார்கள் அப்போ எல்லாம்) இருந்தபோது பேங்க் வாட்ச்மேன் கருப்பையாவோடு ஸ்ரீராம் தியேட்டரில் மாட்னி ஷோ பார்க்க அனுப்பப்பட்டேன் (அவர் வாட்ச்மேன் என்பதால் மாட்னி தான்…




Read more »

ஏ.ஜெ, ஈழத் தமிழர்கள், இந்து ராம்

By |

  AJ Canagaratna Festschrift முன்னிலைப்படுத்தி நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுத் தமிழியல் வெளியீடாக வந்திருக்கும் ‘AJ: The Rooted Cosmopolitan’ படித்துக் கொண்டிருக்கிறேன். என் அன்புக்குரிய நண்பர் லண்டன் பத்மநாப ஐயர் முயற்சியில் வெளியாகி இருக்கும் அஞ்சலித் தொகுப்பு – festschrift. அன்புச் சகோதரி மதி கந்தசாமி போன்றவர்களின் பங்களிப்பும் உண்டு என்று அறிய மகிழ்ச்சி. ஏ.ஜெ பற்றி தமிழவன், ஏ.எஸ்.பன்னீர்செல்வன், எஸ்.வி.ராஜதுரை, நுஃமான் போன்ற ஆய்வியல் அறிஞர்களின் கட்டுரைகளோடு, ஏ.ஜெ எழுதிய கட்டுரைகளையும் சேர்த்து இந்நூலைத் தொகுத்தவர்…




Read more »

சில புதிய வெண்பாக்கள்

By |

  சமீபத்தில் எழுதியவை காலம் முடியவே கண்ணாடிப் பெட்டியில் ஞாலம் புகழ்ந்திடும் நந்தலைவர் – ஓலமிட்டே சுற்றும் ஒலிவாங்கி சூழத் திறந்ததே வெற்றிகளை வெல்வாய் விரைந்து காவியும் பச்சையும் காற்றில் அசைந்திட ஏவிய கைகள் இயங்கிடும் – பாவிகள் பாஸ்பரஸ் கொண்டு எரித்ததின் சொச்சமே ஈஸ்வர அல்லதெரெ நாம்.




Read more »

பத்து என்ன, ஆயிரமும் அதற்கு மேலும்

By |

  ஆகஸ்ட் 19, 2008 செவ்வாய்க்கிழமை காலை 5 மணிக்கு எழுதியது எப்படி வந்திருக்கு? தாடியும் தீட்சண்யமான விழிகளுமாக எனக்கு முன்னால் நின்று கேட்கிறார். நிறையச் சொல்ல வேணும். சம்பிரதாயமான வார்த்தைகளோ புகழ்தலோ இகழ்தலோ இவரைக் கொஞ்சமும் பாதிக்காது என்று தெரியும். மனம் திறந்து பேச ஒரு சொல்லைத் தேட வேண்டியிருக்கிறது. பின்னால் விம்மல் ஒலி. மூத்த சகோதரி வயதில் அந்த நகைச்சுவை நடிகை அழுதபடி இவர் தோளில் முகத்தைப் புதைத்துக் கொள்கிறார். சொல்ல இதுக்கு மேல்…




Read more »

நகரக் கவிஞர்

By |

  வைதீஸ்வரன் பற்றி Zip செய்து வைத்த ஏகப்பட்ட பழைய கோப்புகளை விஸ்வரூபம் நாவல் எழுதும்போது தேடும் வேளையில் கண்ணில் பட்டது – நான்கு ஆண்டுகளுக்கு முன் ஓர் இலக்கியக் கூட்டத்தில் பேசியது. மாலன் தலைமை வகித்ததாக நினைவு. ************************************************* வைதீஸ்வரன் சார் பற்றிக் கொஞ்சம் வித்தியாசமாகப் பேச வேண்டியிருக்கிறது. இந்தப் புத்தகம் பற்றி எல்லோரும் பேசிவிட்டார்கள். நான் இதற்குள் நுழைவதாக இல்லை. ஆனாலும் எனக்குப் பேச நிறைய இருக்கிறது. நேசமான மனிதர். வாய் நிறையச் சிரிப்பும்…




Read more »

More Letters இன்னும் சில கடிதங்கள்

By |

  Dear Murugan Just now stumbled upon your new web site. Great. Had you written your PM book in English Rita Mulkhi would be out of business by now :)) Started reading your Arasoor Vamsam part II lot to share in that regard. Will send a detailed mail later. Thanks for compiling your works in…




Read more »