Archive For The “இது புதுசு” Category
க்ரேஸியின் முன்னுரையிலிருந்து சில பகுதிகள் இந்த 2008-ம் ஆண்டு பல விதத்தில் எனக்கு முக்கியமானது. மூன்று வருட இடைவெளிக்கு அப்புறம் மறுபடி ஒரு இசை விழா, சென்னை சங்கமம் என்று மகிழ்ச்சியாகத் தொடங்கி, பிப்ரவரி மாதம் சட்டென்று ஒரு மாபெரும் துயரத்தோடு முடிவுக்கு வந்தது – சுஜாதாசார் நம்மிடையே இல்லை என்பதை இன்னும் மனது நம்ப மறுக்கிறது. தனிப்பட்ட முறையிலும், தமிழ் இலக்கிய வாசகனாகவும் எனக்கு ஏற்பட்ட மாபெரும் சோகம் அது. பேரிழப்பில் உருவாகும் பிறப்பாக,…
‘வார்த்தை’ பத்தி – குட்டப்பன் கார்னர் ஷோப் எல்லாப் பக்கத்திலிருந்துன் விஸ்தாரமாகத் தோண்டித் துளைத்து அங்கங்கே தேசலான பழைய தார்த் தடம் தெரிய பரிதாபமாகக் கிடக்கிற திருமலைப் பிள்ளை சாலை. பெருந்தலைவர் காமராஜ் அவர் வீட்டு வாசலில் கருப்புப் பளிங்குச் சிலையாக நின்று ‘இதெல்லாம் என்னங்கறேன்’ என்கிற போஸில் இடுப்பில் கைவைத்து எல்லா அமர்க்களத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறார். கொஞ்சம் தள்ளி நான். காரை எப்படியோ ஓரம் கட்டி நிறுத்திவிட்டு மொபைல் ஃபோனைக் காதில் ஒட்டி வைத்தபடி…
கலாப்ரியா, அருள்நம்பி கடிதங்கள் அன்புள்ள முருகன் வெந்தணலில் மெழுகெனவே வேதனையில் சிங்களரால் நொந்து படுகின்றார் நம்தமிழர் – செந்தமிழா கடலெல்லை தாண்டிக் களம்கண்ட நம்மாந்தர் இடர்ப்பட்டுப் போவதுஏன் இன்று. கொடுமைகண்டு பொங்கும் குணமெங்கே எந்தமிழா கடமை மறந்தனையோ? கற்சிலையாய் அடிமைஎனும் விலங்குடுத்து வாழ்கின்றார் விலங்கினும் கடையராய் இலங்கையில் தமிழரெலாம் இன்று.
நேற்று வந்த கடிதம் ஒன்று சில கடிதங்கள் எவ்வளவு personal ஆக இருந்தாலும் பகிர்ந்து கொள்ள மகிழ்ச்சியாக இருக்கும். நண்பர்கள் கலாப்ரியா, கல்யாண்ஜி வண்ணதாசன், அவருடைய தந்தையார் பெரியவர் தி.க.சி, முன்றில் மா.அரங்கநாதன் எழுதிய கடிதங்களும், ஆசான் சுஜாதாவின் மின்னஞ்சல், குறுங்கடிதங்களும் இந்த வகையில் வருபவை. கலாப்ரியாவிடமிருந்து நேற்று வந்த கடிதம் இது. அவர் சொன்னது என் மகன் விஷயத்தில் பலித்திருக்கிறது. மற்றதைக் காலம் தான் சொல்ல வேணும். இரா.மு ——————————————————————————————————– dear murukan இன்னும்…
சென்னையில் கோவிந்த் நிஹலானியோடு ஒரு சந்திப்பு எல்லாப் பக்கத்திலிருந்துன் விஸ்தாரமாகத் தோண்டித் துளைத்து அங்கங்கே தேசலான பழைய தார்த் தடம் தெரிய பரிதாபமாகக் கிடக்கிற திருமலைப் பிள்ளை சாலை. பெருந்தலைவர் காமராஜ் அவர் வீட்டு வாசலில் கருப்புப் பளிங்குச் சிலையாக நின்று ‘இதெல்லாம் என்னங்கறேன்’ என்கிற போஸில் இடுப்பில் கைவைத்து எல்லா அமர்க்களத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறார். கொஞ்சம் தள்ளி நான். காரை எப்படியோ ஓரம் கட்டி நிறுத்திவிட்டு மொபைல் ஃபோனைக் காதில் ஒட்டி வைத்தபடி தெரு…
Era.Murukan’s foreword for EssPO’s forthcoming book எஸ்.பொ அளவுக்கு விமர்சனத்தை எதிர் கொள்ள வேண்டிய நிலைமை ஒரு படைப்பாளிக்கு வந்தால் கூறாமல் எழுத்து சந்நியாசம் போயிருப்பான். போயிருப்பாள். தமிழ் என்றில்லை, எந்த மொழி என்றாலும் இதே படிக்குத்தான். இவ்வளவு நீண்ட காலம், அதாவது கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு இப்படி யாரையும் துரத்தித் துரத்தி அடிக்க விமர்சகர்களும் சக எழுத்தாளர்களும் எங்கேயும் முனைந்ததாகத் தெரியவில்லை. சளைக்காமல், புறமுதுகு காட்டாமால் இந்த மாட்டடி, காட்டடியை எல்லாம் சமாளித்து…