Archive For The “இது புதுசு” Category

மர்மயோகி ரசித்த படம்

By |

  வார்த்தை பத்தி – குட்டப்பன் கார்னர் ஷோப் 1ப் அவசியம் இதைப் பாருங்க. அப்புறம் படியுங்க. மர்மயோகி ஒரு குறுவட்டையும், கூடவே புத்தகத்தையும் நீட்டினார். இயக்குனர் பிரதியாக ஓர் ஆங்கிலத் திரைப்படம். பெயர் மேக்னோலியா. அதோடு இணைப்பாகப் படத்தின் திரைக்கதை புத்தக வடிவத்தில். பால் தாம்சன் ஆண்டர்சன் எழுதியது. படத்தை இயக்கியதும் ஆண்டர்சன் தான். இளைஞர். வழக்கம் போல் புத்தகத்தின் கடைசிப் பக்கத்திலிருந்து புரட்ட ஆரம்பித்தேன். மொதல்லே சி.டியைப் பார்க்கச் சொன்னேன். அப்புறம் படிக்கலாம். அன்பான…




Read more »

அன்புள்ள அப்பா, அறிவுள்ள அம்மா

By |

  Kungumam column – அற்ப விஷயம் -22 இரா.முருகன் எல்லாம் பாதி ராத்திரி கழிந்து பிரசவ ஆஸ்பத்திரி வாசலில் தொடங்குகிறது. வரி விளம்பரத்தைக் கூட விடாமல் படித்து முடித்து நாலாக, எட்டாக மடித்த தினசரிப் பத்திரிகை. அதை வைத்து விசிறியபடி குறுக்கும் நெடுக்கும் நடைபோடும்போது, கதவு திறக்கிறது. உள்ளே இருந்து குரல் – ‘அப்பா ஆகியிருக்கீங்க’. இந்த மகிழ்ச்சிக்காகவே இருபத்துநாலு மணிநேரம் இடைவிடாமல் ஆஸ்பத்திரி வாசலில் நடக்கலாம். கையில் காப்பி பிளாஸ்க் திணிக்கப்படுகிறது. காப்பியும், எல்லோருக்கும்…




Read more »

வார்த்தை தவறி விட்டாய்

By |

  Kungumam column – அற்ப விஷயம் -25 இரா.முருகன் புத்தாண்டு பிறப்பது எந்தக் காலத்திலும் பரபரப்பான விஷயம். கால் நூற்றாண்டு முன்புவரை இந்தப் பரபரப்பு ஊரெல்லாம் திரிந்து ஓசி காலண்டர் சேகரித்து சுவர் முழுக்க ஆணியடித்து மாட்டுவதில் ஆரம்பமாகும். அது தொடர்வது வார்னிஷ் வாடை தூக்கலாக அடிக்கும் வாழ்த்து அட்டைகளை வாங்குவதற்காக அலைவதில் இருக்கும். வாழ்த்து அட்டை ஓசியாக யாரும் தரமாட்டார்கள் என்பதால் இது தவிர்க்க முடியாத செலவு இனத்தில் மனசில்லாமல் சேர்க்கப்படும். இருபத்தைந்து வருடத்தில்…




Read more »

இன்று போய் நாளை வர வேண்டாம்

By |

  Kungumam column – அற்ப விஷயம் -21 இது கார்ப்பரேட் சிக்கனங்களின் காலம். இதுகாறும் பணத்தைத் தண்ணீர் போல் அல்லது அரபு நாட்டில் பெட்ரோல் போல் கைக்கு வந்தபடி செலவழித்த பெரிய தொழில், வர்த்தக நிறுவனங்கள் பைசா சுத்தமாகக் கணக்குப் பார்த்து வெட்டிச் செலவுக்குக் கத்தரிக்கோல் போடுவதில் மும்முரமாகி இருக்கின்றன. உலகமே பொருளாதார நெருக்கடியில் தவிக்கும்போது இருப்பைத் தக்க வைத்துக் கொள்ள கஞ்சத்தனம் அவசியம் தேவை என்கிறார்கள் கோடி அசுரத் தொழிலதிபர்கள். முன்பெல்லாம், அதாவது நாலைந்து…




Read more »

எழுத்துக்காரன் டயரி

By |

  சுஜாதாவுக்கு அஞ்சலி – 1 விகடனில் சுஜாதாவின் ‘பத்ரிநாத் யாத்திரை’ மறுபிரசுரமான கட்டுரை படித்தேன். ஒரே ஒரு சுஜாதாதான். ஏறக்குறைய இல்லை, முழுக்க முழுக்க ஜீனியஸ். சுஜாதாவுக்கு அஞ்சலியாக என் கேரளப் பயணக் கதை மறுபிரசுரம் இங்கே. இரா.முருகன் 9 திசம்பர் 2008 888888888888888888888888 கேரளா டயரி எழுத்துக்காரனின் டயரிக் குறிப்புகள் – 1 அமைச்சர் வீட்டுக் காவலுக்கோ, அண்ணாசாலையில் உச்சிவெய்யில் நேரத்தில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவோ போகத் தேவையில்லாமல் சென்னை விமானத்தளத்தில் காவலுக்கு நின்றிருந்த பொலீஸ்…




Read more »

கும்பகோணம்

By |

  சுஜாதாவுக்கு அஞ்சலி – 2 விகடனில் சுஜாதாவின் ‘பத்ரிநாத் யாத்திரை’ மறுபிரசுரமான கட்டுரை படித்தேன். ஒரே ஒரு சுஜாதாதான். ஏறக்குறைய இல்லை, முழுக்க முழுக்க ஜீனியஸ். சுஜாதாவுக்கு அஞ்சலியாக என் கும்பகோணப் பயணக் கதை மறுபிரசுரம் இங்கே. இரா.முருகன் 9 திசம்பர் 2008 888888888888888888888888888888888 ஒரு பயணம் – ஒரு ராத்திரி – ஒரு மணி நேரம் – நாலு கோவில் வாரம் முழுக்க வேலையில் மூழ்கி முத்தெடுத்து சனிக்கிழமை காலையில் வழக்கம் போல் பெட்டியைத்…




Read more »