Archive For The “இது புதுசு” Category
I usually levitate in my dreams. Soaring high onto the skies, I drift past the dark and grey clouds, moving up and up all the way, till I am at the same altitude and coordinates as the Chennai – Singapore 747 Air India flight. Then, averting in a nanosecond the catastrophe of the first…
ஏதோ ஒரு பக்கம் இரா.முருகன் பிரபலமானவர்களோடு பிரயாணம் போவதில் கொஞ்சம் கஷ்டம் உண்டு. நிச்சயம் அவர்களால் நமக்குக் கஷ்டம் கிடையாது. நாமும் அவர்களைத் துன்பப் படுத்துவதை மனதில் கூட நினைக்க மாட்டோம். ஆனாலும் ஆயிரம் ஜோடிக் கண்கள் பிரபலத்தின் மேல் நிலைத்திருக்க, கூட நடக்கிற, உட்கார்கிற, ரவா தோசை சாப்பிடுகிற, பேசுகிற, கேட்கிற நமக்கு சடாரென்று ஒரு பயம். இந்தாளு யாரென்று எல்லாரும் நம்மைப் பற்றி யோசித்திருப்பார்கள். அதிலே ஒருத்தராவது வாயைத் திறந்து யோவ் நீ…
மலையாள மூலம் : கவிஞர் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு தமிழ் மொழியாக்கம் (transcreation) : இரா.முருகன் · புலருவான் ஏழர ராவேயுள்ளு, பூங்கோழி கூவிக் கழிஞ்ஞேயுள்ளு கண்ணீரில் முங்ஙிக் குளிகழிஞ்ஞு, வெண்ணீரு கொண்டு குறிவரச்சு, துரிதம் கொண்டொரு நிறபற நிறச்சு, கூளக் குடுக்க எறிஞ்ஞுடச்சு, தாளத்தில் மூன்னு வலத்து வெச்சு, இலவாட்டித் துக்கம் பொதிஞ்ஞு கெட்டி, மாறாப்பில் ஸ்வப்னம் நிறச்சு கெட்டி,
(ஏதோ ஒரு பக்கம் பத்தி) Hype சம்பந்தப்பட்ட ரெண்டு விஷயங்களை முற்றாகத் தவிர்த்து விடுவது சகலமான விதத்திலும் சால நன்மை பயக்கும். சொல்றேனே தவிர, பல சமயம் ஹைப்பில் ஏமாறி கைக்காசும் கால நேரமும் வீணாகிப் போய் நொந்த சந்தர்ப்பங்கள் உண்டு. ஆனாலும் தமிழ்ப் புத்தகம் அதுவும் இலக்கியம் பற்றி ஹைப் எதுவுமே இதுவரைக்கும் கிடையாது என்று நினைத்து இறுமாந்திருந்த போது, இப்படி வகையாக ஏமாறுவேன் என்று சத்தியமா நினைக்கலேடா சாமி.
எம்.டி.வாசுதேவன் நாயரோடு ஒரு நேர்காணல் இரா.முருகன் எம்.டி.வாசுதேவன் நாயர். மலையாளிகளின் மனம் கவர்ந்த கதைக்காரர். நீட்டி முழக்கி அவர் பெயரை முழுமையாகச் சொல்லாமல் சும்மா, ‘எம்.டி’ என்று சுருக்கி அவர்கள் விளிப்பதில் அபிமானமும், ‘எங்க ஆளாக்கும்’ என்ற பெருமையும் புரியும். ஐம்பது வருடமாக நாவல், நாடகம், சிறுகதை என எழுதி மலையாள இலக்கியத்தில் முக்கிய ஆளுமையாகத் திகழ்கிறவர். திரைக்கதை என்ற கலை – இலக்கிய வடிவத்தில் இவர் அளவு தொடர்ந்து சாதனை நிகழ்த்தி வருகிறவர்கள் இல்லை….
இரா.முருகன் ரொம்பவே வித்தியாசமான பிறவிகள். கொம்பு முளைக்கவில்லைதான். றெக்கை அரும்பி, வக்கீல் ஆராமுது அய்யங்கார் (பிறப்பு 1890 – வைகுண்ட பதவி 1965) தோளுக்கு ரெண்டு பக்கமும் வழியும் அல்பாகா கோட்டின் மூணாவது, நாலாவது கை மாதிரி இடுப்பைத் தொட்டு அலையடித்துக் கொண்டிருக்காதுதான். ஆனாலும் ஆகாசத்தில் பறப்பார்கள். வம்பு வளர்த்துக் கொண்டு முட்ட வருவார்கள். தற்கொலை செய்து கொண்டு ஒண்ணாங் கிளாஸ் நரகங்களில் பேயிங் கெஸ்டாக போய்ச் சேர்வார்கள். அங்கே இருந்தபடி, இங்கே மூச்சு விட்டுக்…