Archive For The “இது புதுசு” Category
சில நேரம் சிரிப்புத்தான் வ்ருகிறது. அயர்லாந்தோடு நல்லுறவு வளர்க்க பிரிட்டன் மெனக்கெடுவதை வரவேற்கிறோம். எலிசபெத் ராணியம்மா கையை அயர்லாந்த் மாஜி தீவிர வாதி மக்கின்னஸ் குலுக்கினால் நட்பு வளர்ந்து விடும், ஆமா அப்படித்தான். என்ன இருந்தாலும் ராணி மகாராணிதான். எலிசபெத் மகாராணி போனால் தான் தெரியும் பிரிட்டனின் இழப்பு என்ன என்று. விக்டோரியா சகாப்தம் போல் நிச்சயம் எலிசபெத் சகாப்தமும் வரலாற்றில் நிலைக்கும். ஒரு constitutional monarch எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு எலிசபெத்…
நடேசன் பூங்காவில் வேகு வேகென்று சுற்றி விட்டு மெரினா காந்தி சிலைப்பக்கம் கையில் ஒரு புத்தகத்தோடு போய்ச் சேர்ந்தால், அங்கே புத்தக தினம் தொடர்பான- நடை – ஓட்டம் – கூடியிருந்து குளிர்தல் வகையறா நடவடிக்கைகளே கண்ணில் படவில்லை. சேட்டுகள், சேட்டாணிகள், உலக மெனிஞ்சிடிஸ் தின நடைஞர்கள், வியர்த்த ஜப்பானியர்கள் இத்யாதி. உழைப்பாளர் சிலையில் இருந்து காந்தி சிலை வரை காலை ஏழு மணிக்கு நடை. புத்தகப் பரிமாற்றம் இப்படியான பரிபாடி. இன்றைக்கு என்று தானே…
நான் வேக நடைக்காகப் போகிற பூங்காவில் ஒரு பெரிய மேடை உண்டு. முப்பது பேர் இருக்கலாம். ஐம்பது பேர் நிற்கலாம். மேடை யோகாசனப் பயிற்சிக்காகப் பயன்படுகிறது. மேடைக்குத் தெற்கே நடைபாதைக்கு அப்பால் சிறு குழந்தைகள் விளையாட சறுக்கு மரம், ஊஞ்சல் மற்றும் உடற்பயிற்சி செய்ய நிலப்பரப்பு. அதிகாலையில் குழந்தைகள் வருவதில்லையாதலால் அந்த இடத்தில் இளைஞர்கள் சிலம்பப் பயிற்சி செய்வார்கள். கறுத்து மெலிந்த இளைஞர்கள். தற்காப்புக்கலையும் கற்பார்கள்.
1997-ம் ஆண்டு கணையாழி பொங்கல் மலரை அப்போதைய கணையாழி ஆசிரியருமான திரு ராம்ஜி தயாரித்தார். நண்பர். இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அதிகாரிகள் சங்கச் செயலர். சக வங்கி அதிகாரி. தயாரிப்புப் பணியில் நானும் பின்னணியில் இருந்து செயல்பட்டேன். யாரிடம் இருந்தெல்லாம் படைப்பு கேட்க வேண்டும் என்று பட்டியல் தயாரான போது முதல் பெயர் அம்பை. அப்புறம் ஒரு இருபத்தைந்து முப்பது பேர். கதை கேட்டுக் கடிதம் எழுதி வைத்து விட்டுத்தான் முகவரிகளைத் தேட ஆரம்பித்தோம். அம்பை…
நேற்று மதியம் அலுவலகத்தில் பரபரப்பாக நேர்காணல் நடத்திக் கொண்டிருந்தபோது நண்பர் தொலைபேசியில் அழைத்தார். அவருடைய குரலில் உற்சாகம் என்றால் உடனே புரிந்து போகும் – அவர் ஒரு புதுப் புத்தகத்தைப் படித்திருக்கிறார். ’Grey Wolf: The Escape of Adolf HitlerGrey Wolf: The Escape of Adolf Hitler’ படிச்சுட்டீங்களா? இல்லியே சார், ஹிட்லர் இன்னும் மூச்சு விட்டுக்கிட்டு இருக்கார்னு சாதிக்கறாங்களா? இல்லை. அவர் அர்ஜெண்டினாவுக்குத் தப்பி ஓடினதாகவும், அமெரிக்காவும் ஜெர்மனியும் இதுக்கு வழி செய்ததாகவும்,…
சென்ற ஆண்டு நண்பர் திரு.கமல் பிறந்தநாளுக்குக்காக அவரை வாழ்த்தியபோது இரண்டு விஷயங்களை வற்புறுத்தினேன் – மய்யம் இணையத் தளம் தொடங்குவது, அவருடைய கவிதைத் தொகுப்பை வெளியிடுவது. அற்புதமான நடிகர், சிறந்த திரைக்கதை ஆசிரியர், நல்ல பாடகர், அருமையான இயக்குனர் என்று பிரமிக்கவைக்கும் நிறைய ஆளுமைகள் அவருக்குள் உண்டு. அவற்றில் கமல் என்ற கவிஞர் எனக்கு நெருக்கமானவர்.