Archive For The “இது புதுசு” Category
அம்பை எழுதுகிறார் – //மும்பையில் பெண்கள் பெட்டியில் பத்துப் பனிரெண்டு வயது வரை சிறுவர்கள் ஏறலாம். இரண்டு வாரங்கள் முன்பு நான் பெட்டியில் ஏறியபோது ஒரு சிறுவன் –பத்து வயதிருக்கும் — இரண்டு கால்களையும் கிட்டத்தட்டப் பாதி உடம்பையும் வெளியே நீட்டியபடி வாயில் அருகே உட்கார்ந்திருந்தான். மாணவன் இல்லை. வண்டியில் எதையாவது விற்க வரும் பையனும் இல்லை.ஸ்டேஷன்களில் அங்கிங்கு அலையும் சிறுவர்களில் ஒருவன் போலும். சரியாக உட்காரச் சொல்லி அதட்டினேன். மறுத்தான். ”விழுந்துவிடுவாய் பையா, பிடிவாதம் பிடிக்காதே”…
திருவெம்பாவை – 14 காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக் கோதை குழலாட வண்டின் குழாமாடச் சீதப் புனலாடிச் சிற்றம் பலம்பாடி வேதப் பொருள்பாடி அப்பொருளா மாபாடிச் சோதி திறம்பாடிச் சூழ்கொன்றைத் தார்பாடி ஆதி திறம்பாடி அந்தமா மாபாடிப் பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளைதன் பாதத் திறம்பாடி ஆடேலோ ரெம்பாவாய். 14 திருப்பாவை – 14 உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள் செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பின காண்; செங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர், தங்கள் திருக்கோயில் சங்கிடுவான்…
இதுவும் அதுவும் உதுவும் – 4 இரா முருகன் இரா.முருகன் சென்னையின் வேனல் கால முகம் யாது? தெரு ஓரத்தில் ஆலைக் கரும்பைப் பிழிந்து அழுக்குப் பனிக் கட்டிச் சீவலும், எலுமிச்சை சாறும் சேர்த்து நுரைக்க நுரைக்க கிளாஸ் டம்ளரில் நீட்டும் வண்டி. அதன் பக்கம் வியர்த்து விறுவிறுத்து, கையில் பிடித்த சூட்கேஸோடு காத்திருந்து, வாங்கிக் குடித்த பிறகு சிகரெட் பற்ற வைக்கும் மெடிக்கல் ரெப்ரசெண்டேடிவாக அந்த முகம் எனக்குத் தென்படும். டிசம்பர் பதினைந்திலிருந்து ஜனவரி பதினைந்து…
திருப்பாவை – 12 கனைத்திளங் கற்றெருமை கன்றுக் கிரங்கி நினைத்து முலைவழியே நின்றுபால் சோர நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்! பனித்தலை வீழநின் வாசல் கடைபற்றிச் சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற மனத்துக் கினியானைப் பாடவும்நீ வாய்திறவாய்! இனித்தான் எழுந்திராய்; ஈதென்ன பேருறக்கம்? அனைத்தில்லத் தாரும் அறிந்தேலோ ரெம்பாவாய். 12 திருவெம்பாவை – 12 ஆர்த்த பிறவித் துயர்கெடநாம் ஆர்த்தாடும் தீர்த்தன்நற் றில்லைச் சிற்றம்பலத்தே தீயாடும் கூத்தன் இவ் வானும் குவலயமும் எல்லோமும் காத்தும் படைத்தும் கரந்தும்…
விஸ்வரூபம் நாவல் முன்னுரை ——————————————— யாரும் ‘மா நிஷதா’ சொல்லவில்லை. வாழ்த்தாகவோ, வசவாகவோ. நானாவது காத்திருந்திருக்கலாம். அவர்கள் சொல்லும்போது சொல்லட்டும் என்று எழுத ஆரம்பித்து விட்டேன். இதற்கெல்லாம் ஆதிகாரணம் குளோரியா அம்மாள். பிரிட்டீஷ் மூதாட்டி. பரிசுப் பணம் கிடைத்தால் கவர்மெண்ட் பென்ஷன் நின்று போனாலும் நாலைந்து மாதமாவது காலத்தை ஓட்டலாமே என்ற நப்பாசையோடு தொலைக்காட்சிப் போட்டியில் கலந்து கொண்டவள். அபான வாயு வெளியேற்றும் போட்டி. ’வாயு’ என்று குளோரியா அம்மாளைப் பற்றி ஒரு குறுநாவல் எழுதினேன். இது…
The day that was ============== The bruised polyvinyl record got stuck cajoling out the auspicious pipe music through howling amplifiers. A rough voice woke up the sleepy neighbourhood for the festivities of the municipal councilor’s second daughter attaining puberty. A couple of roosters with bright red crowns tried in vain to raise their pre down…