Archive For The “இது புதுசு” Category
விஸ்வரூபம் நாவல் வெளியீட்டு விழா – ஒளிக் காட்சித் தொகுப்பு Viswaroopam – Novel release function – Video நன்றி கிழக்கு பதிப்பகம், பத்ரி சேஷாத்ரி Thanks (Please get this video from www.kizhakku.nhm.in)
நமக்கு வேண்டப்பட்ட ஒரு வடகலையார் பழநி போனார். ஊரெல்லாம் பஞ்சாமிர்தமும், முருகா முருகா சத்தமும், ஜவ்வாது வீபுதியும் மொட்டைத் தலையில் சந்தனமும் மணக்கிறது. போகிறவன் எல்லாம் பழநி ஆண்டவரைத் தொழ மலை ஏறுகிறான். வருகிறவன் எல்லாம் இறங்கி வருகிறான். வீர வைஷ்ணவர் முருகன் கோவிலுக்குப் போவாரா என்ன? தேடிக் கொண்டு, லட்சுமி நாராயணப் பெருமாள் கோவிலுக்கு வழி விசாரித்து ஒரு வழியாகப் போய்ச் சேர்ந்தார். பெருமாள் தரிசனத்துக்கு இவர் போய் நிற்க, அவர் கோவணத்தோடு அனந்த சயனம் நீங்கி…
தளம் சி.சு.செல்லப்பா நூற்றாண்டு சிறப்பிதழைப் பாதி படித்தேன். எனக்கு சி.சு.செல்லப்பா அவர்களோடு தொடர்பு கொள்ள ஒரு சந்தர்ப்பம் தான் வாய்த்தது. 1976-1981ல் சிவகஙகையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிப் பணியில் இருந்தபோது தினமணி கதிர் பத்திரிகையில் (சாவி ஆசிரியர்) கோபுலு படங்களோடு மூன்று பக்கம் ஒரு புதுக்கவிதை – ’மாற்று இதயம்’ (இரவல் இதயம்?). சி.சு.செல்லப்பா எழுத்து பத்திரிகையில் எழுதியிருந்ததை சாவி கதிரில் மறு பிரசுரம் செய்தது அபூர்வமான நிகழ்வு. செல்லப்பா பற்றிய என் தேடல் அப்போதுதான் தொடங்கியது….
மும்பையின் நியூ மெரின் லைன்ஸ் போன்ற பகுதிகளில் விடிகாலை நேரம் என்று ஒன்று இருப்பதை கவனித்திருக்க மாட்டோம். அவை காலை ஒன்பது மணி சுமாருக்கு அலுவலகங்க இயங்கத் தொடங்கும் போது உயிர் பெறும். சாயந்திரம் ஏழு மணிக்கு இயக்கம் ஓய்ந்து கான்விடும். கொலட்கரின் சில கவிதைகள் இந்தக் கவனிக்கப்படாத பொழுதுகளில் இயங்கும். கவனிக்கப்படாத மனிதர்களைப் பற்றியவை. என் ‘பகல் பத்து ராப்பத்து’ குறுநாவலில் மாநகரின் குறிப்பிட்ட பகுதிகளில் காலை பத்து மணி முதல் ராத்திரி பத்து வரை…
ஜகதி ஸ்ரீகுமாரை இப்படிப் பார்க்க மனதுக்குக் கஷ்டமாக இருக்கிறது. கொடிய விபத்தில் இருந்து மீண்டு, ஒரு வருடம் வேலூர் மருத்துவமனையில் இருந்துவிட்டு வீடு திரும்பியிருக்கிறார். சிகிச்சை தொடர்கிறதாம். ஆனாலும் அந்த வெற்றுப் பார்வையும், எல்லாம் தொலைத்த மௌனமும்.. அடூர் கோபாலகிருஷ்ணன் ஆர்ட் பிலிம் (நிழல் குத்து) முதல் ஆர்டினரி மலையாள சினிமா வரை மூன்று வருடம் முன்பு வரை இவர் தோன்றாத படமே இல்லை என்ற அளவு பிரபலமானார் – கொஞ்சம் உரத்த காமெடி தொடங்கி, குரல்…
நேற்றைக்கு விஸ்வரூபம் வெளியீட்டு விழா மிகச் சிறப்பாக நடந்தது. மூத்த தமிழ் இலக்கிய எழுத்தாளர், கவிஞர்களான இ.பா சார், வைதீஸ்வரன் சார் முதல் விழாவில் கலந்து கொண்ட என் அருமை நண்பர்கள், சுற்றம் எல்லோருக்கும் ஒவ்வொருவராக அழைத்து வார்த்தைப் பொன்னாடை போர்த்திக் கவுரவித்து நன்றி சொல்ல வேண்டும். எழுதுகிறேன். விழா தொடங்க ஐந்து நிமிடம் முன் தொலைபேசி வாழ்த்து தெரிவித்து, தவிர்க்க முடியாத காரணத்தால் வர முடியாததற்கு வருந்தி, விழா முடிந்த பிறகு ஞாபகமாக மறுபடி தொலைபேசி…