Archive For The “இது புதுசு” Category
அச்சுதம் கேசவம் – அத்தியாயம் முப்பத்தி நாலு இரா.முருகன் தகரத்தை நீளத் தட்டி, முன்னால் அதுக்கி நிறுத்தி நாலு சக்கரமும் பொருத்தி அனுப்பிய மாதிரியான டெம்போக்கள் கட்டாந்தரையில் ஊர்ந்து புழுதி கிளப்பிப் போகிற தெரு. அதை மிகவும் ஒட்டியே அந்தப் பழைய காரைக் கட்டடம் நின்று கொண்டிருந்தது. வாசலில் சூழ்நிலைக்குப் பொருந்தாத அதிகார மிடுக்கோடு, தூதரகம் என்று சொல்லும் பலகை தொங்கிக் கொண்டிருந்தது. இரண்டே அறைகள். முன்னறையில் படுத்து உறங்க பழைய மரக்கட்டில். பின்னறையில் மேடை போட்டு…
தியூப்ளே வீதி – 2 இரா.முருகன் (Dinamani.com தளத்தில் வியாழக்கிழமை தோறும்) நான் சைக்கிளோடு காம்பவுண்டுக்கு வெளியே வந்தபோது அவசரமாக ஒரு சைக்கிள் ரிக்ஷா என்னை இடித்துக் கொண்டு வந்து நின்றது. ‘பான்ழ்யூர் முஸ்யே’ கீச்சென்று ஒரு குரல் வீறிட்டது. சைக்கிளை இடுப்பில் சாய்த்துப் பிடித்துக் கொண்டு பார்த்தேன். குரலுக்குக் கொஞ்சம் கூடப் பொருத்தமில்லாத ஆறரை அடி ஆஜானுபாகு உருவத்தோடு விக்டர் ரிக்ஷாவில் இருந்து இறங்கிக் கொண்டிருந்தார். நேற்றுக் காலையில் ரயில்வே ஸ்டேஷனுக்கு அப்பாவை வரவேற்க அவர்…
தெய்வத்தை நினைத்து, அம்புஜம்மாள் தெருவில் ஸ்கூட்டர் நிறுத்தினேன். போன காரியம் முடிந்து திரும்ப வந்தால் வண்டி இருக்கும். ஆனால் தெரு காணாமல் போய்விடக் கூடும். மாநகராட்சி தொடங்கி, மத்திய சர்க்கார் தொலைபேசித் துறை வரை சளைக்காமல் ஆழமாகவும் அகலமாகவும் தோண்டிய வீதி அது. பதவி ஓய்வு பெற்று சென்னை வந்த வேண்டப்பட்ட ஒருவர் அங்கே இருந்தார். அவரைச் சந்திக்கப் போகும் நிமித்தம், அடிக்கடி நான் கடவுளை நினைக்க வேண்டிப் போன ஆயிரத்துத் தொளாயிரத்துத் தொண்ணூறுகள், அந்தக் காலகட்டம்….
தினமணி தொடர் அந்த ஊரை நினைத்தாலே மனதில் மிதமான யூதிகோலன் வாசனை அடிக்க ஆரம்பித்து விடும். கூடவே ராத்திரி முழுக்கப் பாடிக் கொண்டிருந்து விட்டு விடியற்காலையில் அமைதியாகக் கரையைத் தொட்டுப் போகும் அலைகளுடன் எழுந்து வருகிற கடல் வாசனையும் கட்டாயம் உள்நாசியை எட்டும். சைக்கிள் மிதித்துப் போகிற மண் தடங்கள் ஊரைக் கடந்த அடுத்த நிமிடம் பார்வையில் படுவது அங்கே மட்டும் தானாக இருக்கும். அங்கங்கே கள்ளுக்கடைகளில் ஈ மொய்த்த முட்டை பொரித்து வைத்து வாசலில் உட்கார்ந்து…
கற்பகத்தை டாக்சியில் ஏற்றி செண்ட்ரல் ரயில் நிலையத்துக்குக் கூட்டிப் போவது அவ்வளவு ஒன்றும் சுலபமானதாக இருக்கவில்லை. ஒரு வாரம் கூடத் தங்கி இருந்து, கூடவே சாப்பிட்டு, கூடத்தில் பகலில் பக்கத்திலேயே உட்கார்ந்து வாயோயாமல் அரட்டை அடித்து, சமயோசிதமாகப் பேசி நல்ல வார்த்தை சொல்லி மெல்ல மெல்ல வழிக்குக் கொண்டு வர வேண்டியிருந்தது. திலீபும், ஜனனியும் பம்பாயில் இருந்து கிளம்பும்போதே பேசி வைத்துக் கொண்டு வந்த மாதிரி கச்சிதமாகச் சேர்ந்து செயல் பட்டார்கள். அது இல்லாமல் இருந்தால், அவர்கள்…
சுரபி சுஜாதா ரசனைப் பிணைப்பு. சுஜாதா சார் எழுத்துகளை நேசிக்கும் அவருடைய நண்பர்களும் அன்பர்களும் உருவாக்கும் அமைப்பு இது. சுஜாதா எழுத்தைக் கொண்டாடவும், அவர் நினைவில், தமிழ் இலக்கியத்தை முன்னெடுத்துப் போகும் முயற்சிகளை ஊக்குவிக்கவும், அடுத்த தலைமுறைக்கு ’சுஜாதாவைக் கடத்தவும்’ ஏற்படுத்தப்படும், எந்த விதமான நுண்ணரசியலும் கலக்காத, ரசனையையும் அன்பையும், நம்பிக்கையையும் அடிப்படையாகக் கொண்ட இலக்கிய அமைப்பு இது என்று சுரபி குழுவினர் சொல்கிறார்கள். சிறுகதை, நாவல், சயன்ஸ் ஃபிக்ஷன், அ-புனைகதை துறைகளில் குறிப்பிடத் தகுந்த ஆக்கங்களை…