அருண் கொலட்கர் ஆங்கிலம் மற்றும் மராட்டியில் கவிதை எழுதிய இருமொழிக் கவிஞர். அவருடைய அனைத்து ஆங்கிலக் கவிதைகளையும், கவிஞரும், இலக்கிய விமர்சகருமான அரவிந்த் கிருஷ்ண மெஹ்ரோத்ரா தொகுத்து Arun Kolatkar Collected Poems in English என்ற புத்தகமாக்கியிருக்கிறார். இங்கிலாந்து (நார்த் அம்பர்லேண்ட்) பதிப்பு இது. அருண் கொலட்கரின் இந்த மொத்தத் தொகுப்பைப் படிக்கும் போது அவருடைய கவிதைப் பெருவெளியும், இலக்கியத் தேடலும், கவிதையும் வாழ்க்கையும் பாதித்து வழி நடத்திப் போன அகப் பயணத்தின் சுவடுகளும் புலனாகின்றன….
Read more »
உங்களுக்கு அரசூர் வம்சம் நாவல்களின் மேஜிகல் ரியலிசம் பிடித்திருந்தால், விலாஸ் சாரங் எழுதிய ஆங்கிலச் சிறுகதைத் தொகுப்பான The Women in Cages கட்டாயம் பிடிக்கும். ஜி.நாகராஜனின் குறத்தி முடுக்கு வாசிப்பனுபவம் உண்டென்றால் விலாஸின் கதைகளில் அமிழ்ந்து அதே வாசக அனுபவம் காண்பீர்கள். ரோமன் போலன்ஸ்கியின் தி ரெபல்ஷன் திரைப்படத்தை ரசித்தவர்கள், இந்திய இலக்கியத்திலும் மரபார்ந்த நாட்டிய வகைகளிலும் மிக அபூர்வமாகக் காணக் கிடைக்கும் பீபஸ்த ரசம் என்ற அருவறுப்பு ஒரு படைப்பாக்கக் கூறு என்று கருதுகிறவர்கள்…
Read more »
வாசகசாலை நடத்திய சுஜாதா தினக் கூட்டத்தில் நான் சொல்ல முற்பட்டது சரியாகப் போய்ச் சேரவில்லை என்று தெரிகிறது. என் உரையின் சாரம் 1) வாசிப்பது போல பாடுவது, பாடுவது போல் வாசிப்பது என்று ஒரு படைப்பாக்க வடிவத்தின் தனித் தன்மைகளை மற்றொன்றில் பொருத்திப் பார்ப்பது மரபிசையில் வெற்றி பெறலாம். கவிதை போல் கதை எழுத முற்படாதீர்கள் (கணையாழியின் கடைசிப் பக்கம் பத்தியில் என் முதல் சிறுகதைத் தொகுப்பு தேர் குறித்து சுஜாதா எழுதியது) 2)ஜம்ப் கட் உத்தியை…
Read more »
கணையாழியின் கடைசிப் பக்கங்கள் தொகுப்பைப் பலர் பல விதமாக நினைவு வைத்துக் கொண்டிருக்கிறார்கள். எனக்குக் கணையாழியில் கட்டுரையாக வந்தபோது உட்புகுந்து புத்தகத்திலும் (முதல் தொகுப்பில்) ஏறிய அச்சுப் பிழைகளாக நினைவு நிலைத்திருக்கிறது. பச்சை மாலும் ஈசனும் பரந்ததே சிவாயமே என்ற சிவவாக்கியர் பாடல் வரியை சுஜாதா ஒரு தடவை மேற்கோள் காட்ட அது பச்சை மாலும் ஈசலும் பரந்ததே சிவாயமே என்று அச்சில் வந்திருந்தது. ஈசனை ஈசல் ஆக்கிய அச்சு இயந்திரத்தின் திருவிளையாடலைப் பற்றி அடுத்த மாதம்…
Read more »
என் முதல் நூலான ‘தேர்’ சிறுகதைத் தொகுப்புக்கு திரு அசோகமித்திரன் வழங்கிய முன்னுரை. எழுதிய தினம் நவம்பர் 24, 1989 முருகனின் சிறுகதைகள் ஐம்பதாண்டு காலத் தமிழ்ப் புனைகதைப் போக்கைத் திரும்பிப் பார்க்கும்போது ஓர் உண்மை தெரிகிறது. நாவல்களை விடச் சிறுகதைகள் தற்கால வாழ்க்கையின் பல அம்சங்களைப் பரிசீலித்திருக்கின்றன. ஆரம்ப நாட்களிலேயே மிக நல்ல கதைகள் எழுதப் பட்டிருக்கின்றன. சிறுகதை அநேகமாக நூற்றுக்கு நூறு பத்திரிகைப் பிரசுரத்தைச் சார்ந்தது. இன்று…
Read more »
அசோகமித்திரன் நினைவுகள் -2 (அல்லது அசோகமித்திரனை முன்வைத்துக் கொஞ்சம் நினைவலைகள்) (மீள்பதிவு 2008 – கூடுதல் பதிவு 2017 மார்ச் 26 – நீள் பதிவு) அசோகமித்திரன் என் அப்பாவின் சிநேகிதர். இரண்டு பேரும் தி.நகர் வாசிகள் ஆனதால், அது நடேசன் பூங்கா நட்பாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அதற்கும் முற்பட்டதாம். ராணுவத்தில் இருந்த, அசோகமித்திரனின் உறவினரான, அவர்களுக்கு ஒரு தலைமுறை முந்திய யாரோடோ தொடங்கியதாக இருக்கும் என்று தெரிகிறது. அது தெரியாமலேயே, அசோகமித்திரனை கணையாழிக்காரராகவே…
Read more »