Archive For The “இது புதுசு” Category
சிமாமண்டெ அடிசி விருது பெறாவிட்டாலும், சரவணன் Saravanan Manickavasagam சொல்கிற மாதிரி ஓர் இலக்கிய சூப்பர்ஸ்டார்.. அவரது மூன்றாம் நாவல் டெத் கவுண்ட் நூலை அடுத்துப் படிக்க வேண்டும். அடிசியின் இரண்டாவது மெகா நாவலான அமெரிக்கானா பற்றி என் அல்புனைவு வாதவூரான் பரிகள் நூலில் இருந்து – அமெரிக்கானா ———————— கருப்பர் இனம், ப்ரஸீலிய காஃபிக் கலர் இனம், மஞ்சள் சீனர் இனம் என வேறுவேறு இன புனைகதை எழுத்தாளர்களின் வாழ்க்கை வரலாறு அடிப்படையிலான புதினங்கள் ஏதும்…
எழுதக் கொஞ்சம் நேரமும், அச்சிலும், தேர்ந்தெடுத்து நெட்டிலும் வாசிக்கச் சற்று நேரமும், முதுகு வலிக்குக் சிறிது நேரமுமாக நாட்க:ள் நகர்கின்றன. வாத்திமர் நாவல் வளர்ந்து கொண்டிருக்கிறது. ஜூன் இறுதியில் நிறைவு பெறும் புதுமையான இந்தப் புதினம். ஈதிப்படி இருக்க, சொல்வனம் இணைய இலக்கிய இதழில் நண்பர் சரவணன் மாணிக்கவாசகம் எழுதிய ‘ஐவர் – தமிழின் நம்பிக்கை’ என்ற கட்டுரை வாசிக்கக் கிடைத்தது. தேர்ந்த வாசகரும் விமர்சகருமான சரவணன் தேர்ந்தெடுத்த முதல் ஈடு நன்னம்பிக்கை நட்சத்திரங்கள் குறிப்பிடத் தகுந்தவர்களே….
என் நூல்களின் பதிப்பாளர் ஸீரோ டிக்ரி பப்ளிஷிங் நிறுனத்தினர் இந்த வாரம (ஏப்ரல்) 23-ஆம் தேதி முதல் ஏப்ரல் இறுதி வரை நீட்சி பெற்ற உலகப் புத்தக வாசிப்பு விழா எடுத்துக் கொண்டாடுகிறார்கள். அவர்கள் வெளியிட்டிருக்கும் அனைத்துப் புத்தகங்களுக்கும் விழாக்கால தள்ளுபடி 25% அளிக்கப்படுகிறது ஸீரோ டிக்ரி பப்ளிஷிங் வெளியிட்டிருக்கும் என் நூல்கள் – நாவல்கள் 1) மூன்று விரல் 2) அரசூர் வம்சம் 3) விஸ்வரூபம் 4) அச்சுதம் கேசவம் 5) வாழ்ந்து போதீரே 6)…
படிக்கத் தொடங்கிய புத்தகம் நண்பர் கே.ஹரிஹரன் எழுதிய ‘Kamal Hassan -A Cinematic Journey’ (கமல்ஹாசன் – ஒரு திரைவெளிப் பயணம்.). ஹரிஹரன் தேசீய விருது பெற்ற திரைப்பட இயக்குநர் மற்றும் மேநாள் திரைப்படக் கல்லூரி முதல்வர். ஒரு பத்து வருடம் போல் இந்தப் புத்தகத்துக்காக உழைத்திருக்கிறார் ஹரிஹரன் என்பதை அறிவேன். கமல் என்ற Shape Shifter பன்முக ஆளுமை குறித்து எழுதும்போது தொடர்ந்து இற்றைப்படுத்திக் கொள்ள (update) வேண்டியது அவசியம். ஹரிஹரன் அதை சீராகக் கடைப்பிடித்திருக்கிறார்.விதந்தோதுதலோ…
என் ஒன்பதாவது கட்டுரைத் தொகுதியாக வெளியாக இருக்கும் ’யாதும் ஊரே’ நூலிலிருந்து – ————————————————————————– Feb 27, 2009 வெள்ளி . நாரதகான சபா மூத்திர வாடை வழக்கப்படுத்திக் கொண்ட சமாசாரம். அதுவும் முதல் நாலைந்து வரிசை வி.ஐ.பி வரிசைகளில் உட்கார்ந்தால், கதவு திறக்கும் போது, மூடும் போது ‘கழிவறை உலகம் செய்தீர்’ என்று ஞானக்கூத்தனோடு சேர்ந்து மணம் கமழச் சொல்லலாம். சங்கீத சீசனில் சபா கேண்டீனில் கீரை வடை மேற்படி வாடையோடு சாப்பிட்டு சாப்பிட்டு கல்யாணி,…
எட்டாவது கட்டுரைத் தொகுப்பு ‘வேம்பநாட்டுக் காயல்’ நூலில் இடம் பெறும் சிறு கட்டுரை – ’விடுபட்டவை’ (அக்டோபர் 2009-இல் எழுதியது) – விடுபட்டவை லேப்டாப் உபயோகிக்க ஆரம்பித்தவுடன் (ஆச்சு, அதுவும் நாலு வருஷமாக) வீட்டுக் கணினி எப்போதாவது பிரிண்ட் அவுட் எடுக்க, ஸ்கேன் செய்ய மட்டும் பயன்பட்டு வந்தது. இன்றைக்கு என்னமோ தோன்றியது. அந்தக் கணினியில் பழைய .pst கோப்பை அவுட்லுக்கில் திறந்து பார்ர்க, திறக்காமலே போன ஒரு கடிதம். சுஜாதா சார் எழுதிய இதை எப்படி…