Archive For The “இது புதுசு” Category

என் புனைவிலக்கியம் ஓரிடத்தில்

By |

நான் எழுதியிருக்கும் புனைவிலக்கியம் கிட்டத்தட்ட முழுமையாகத் தற்போது மறுபதிப்பு கண்டுள்ளது. ஸீரோ டிகிரி பப்ளிஷிங் வெளியீடுகள் இவை. 1) மூன்று விரல் – நாவல் 2) அரசூர் வம்சம் – நாவல் 3) விஸ்வரூபம் – நாவல் 4) அச்சுதம் கேசவம் – நாவல் 5) வாழ்ந்து போதிரே – நாவல் 6) 40, ரெட்டைத் தெரு 7) தியூப்ளே நாவல் 8) 1975] நாவல் 9)பீரங்கிப் பாடல்கள் ( மலையாளத்தில் இருந்து கல்ட் க்ளாசிக் மொழிபெயர்ப்பு-லந்தன்…




Read more »

பயணம் முடிந்து திரும்புவதற்குள் அடுத்தது தொடங்கியது

By |

பயணம் முடிந்து திரும்புவதற்குள் அடுத்தது தொடங்கியது

வாழ்ந்து போதீரே – அரசூர் நான்கு நாவல் வரிசையில் நான்காவது. அதிலிருந்து அடுத்த சிறு பகுதி   இங்கிலாந்தில் இருந்து வந்திருப்பதால் தூதரகம் அனுமதிக்காமல் எங்கும் கையெழுத்திடத் தனக்கு இயலாது என்று கொச்சு தெரிசா சொன்னதும் உடனே சரியென்று பின்வாங்கி அவர்கள் போனார்கள்.   ஏனோதானோ என்று ஆக்கி வைத்த ஊண் அது. பரிமாறவும் மிகச் சாவதானமாகவே வந்தார்கள். கடனே என்று இலையில் வட்டித்த சோறு சரியாக வேகாததால் காய்கறிகளை புளிக்காடியில் அமிழ்த்தி மெல்ல வேண்டிய கட்டாயம்….




Read more »

சோறு தின்ன முடியாமல் கையைப் பிடித்துக் கையெழுத்து வாங்கும் விசுவாசமான டவாலி சேவகர்கள்

By |

சோறு தின்ன முடியாமல் கையைப் பிடித்துக் கையெழுத்து வாங்கும் விசுவாசமான டவாலி சேவகர்கள்

வாழ்ந்து போதீரே – நான்காம் அரசூர் நாவல் – அடுத்த சிறு பகுதி இதெல்லாம் சரிதானா? இல்லாவிட்டால் தான் என்ன? வசந்தி அவன் நினைப்பில் ஒரு வினாடி எழுந்து, அடர்ந்து நெய்த மழைத் திரிகளில் கரைந்து போனாள்.   சங்கரன் கொச்சு தெரிசாவை அணைத்துக் கொண்டான்.   காயலும் வானமும் நீர்த் திரையால் இணைய அடர்ந்த மேகங்கள் நின்று சுரக்க, மழை சீராகப் பெய்த வண்ணம் இருந்தது.       வாழ்ந்து போதீரே   அத்தியாயம் இருபத்தொன்பது   …




Read more »

காயலில் பறந்த ஒற்றைப் பட்சியோடு காதலும் சூழ்ந்த தருணம்

By |

வாழ்ந்து போதீரே -நான்கு நாவல் அரசூர் தொகுப்பில் நான்காம் நாவலிலிருந்து அடுத்த ஒன்று\           அவன் சொல்லிப் பதினைந்து நிமிடம் சென்று அழகான நெட்டி, மற்றும் சன்னமான மர வேலைப்பாட்டோடு ஒரு படகு வீடு கம்பீரமாக மிதந்து வந்து படகுத் துறைப் பலகைக்கு அடுத்து நின்றது.   ஏறிக் கொண்டார்கள். அடுத்த மழை ஆர்ப்பாட்டமாக நானும் வருகிறேன் என்று சேர்ந்து கொண்டது.   படகு புறப்பட்டபோது படகுக்காரன் சங்கரனையும் கொச்சு தெரிசாவையும்,…




Read more »

யந்திரம் என்ன ஆச்சு தெரியலியே என்றபடி ஜோசியர் காலத்துக்குள் ஓடினார்

By |

வாழ்ந்து போதீரே -அரசூர் நாவல் நான்கு – அடுத்த சிறு பகுதி கொச்சு தெரிசா மேல் இருந்து வந்த மெல்லிய யுதிகோலன் வாடை சங்கரனுக்குப் பிடித்திருந்தது. இங்கிலாந்தில் மீன் பஜ்ஜி விற்கிற பெண். அழகானவள். அவனுக்கு உறவு வேறு. அவனை ஈர்க்கிறவள். அவனால் ஈர்க்கப்படுகிறவள்.  தர்க்கத்துக்கு அப்பாற்பட்ட மோகம் அது. தானே வந்து கவிவது. பற்றிப் பிடிக்கக் காத்திருந்த மாதிரி மழை நாளில் மேலோங்கி எழுகிறது. அவனுக்கு வேண்டியிருக்கிறது. அவளுக்கும்.   இங்கே இருந்து, கடலோரமாகப் படகில்…




Read more »

சோபான சங்கீதம் கேட்கச் சகிக்காது -கிழ விமர்சகர் அபிப்பிராயம்

By |

வாழ்ந்து போதீரே – அரசூர் நாவல் 4 – அடுத்த சிறு பகுதி       சின்னச் சங்கரன் குளித்து, புட்டும் கடலையும் காலை ஆகாரமாகக் கழித்து பந்தலில் வந்து நின்று எடக்க தட்டி, மாரார் பாடிய சோபான சங்கீதத்தைக் கேட்டபடி கொஞ்ச நேரம் நின்றான்.   கேரளா பக்கத்தில் சோபான சங்கீதம் என்று பாடுவார்கள். சகிக்காது.   இப்படி தில்லி ப்ரஸ் கிளப் கேண்டீனில் மங்களூர் போண்டா சாப்பிட்டு விட்டு வெற்றிலைச் சீவலைக் குதப்பிக் கொண்டு, பல்…




Read more »