Archive For The “இது புதுசு” Category
கும்பேஸ்வரர் கோவிலில் ஏனோ கூட்டமில்லை. பத்து இருபது பேர் குளித்துத் தொழ வந்திருந்தார்கள். நான் ஷூக்களை கோபுர வாசல் தேங்காய்க் கடையில் விட்டுவிட்டு அர்ச்சனைத் தட்டு வாங்கிக்கொண்டு உள்ளே போனேன். கும்பேஸ்வரர் சந்நிதியில் கும்பிட்டு எதிரில் நோக்க, பெண்கள் பகுதியில் இரண்டு பேர் – ரத்னாவும் கங்காவும். தட்டை அர்ச்சகரிடம் கொடுத்து நிற்க, பெயர், நட்சத்திரம் சொல்லுங்கோ என்றார். லோக ஷேமத்துக்காக, எல்லா நட்சத்திரமும் என்று சொல்லிவிட்டு ரத்னாவைப் பார்த்தேன். வினாடி நேரம் திரும்ப நோக்கி, ஒரு…
சைக்கிளில் வந்து வழி மறித்து நின்றார் போஸ்ட்மேன். “ராமாராவ் வீட்டுக்கு விருந்து வந்திருக்கற பையன் நீங்க தானா? சர்க்கார் டீ விக்க மெட்றாஸ்லே இருந்து புறப்பட்டு வந்திருக்கீங்களாமே?”. ஆமா என்று சொல்லும்போது பெண்கள் சிரிக்கும் சத்தம். கண் காணாமல், முதுகுப் பக்கம் இருந்து தென்றல் வீசிய மாதிரி இனிமையாக அனுபவம் அது. ”வாங்க அந்த வீட்டுத் திண்ணையிலே உக்கார்ந்து கையெழுத்துப் போடுங்க.. மணியார்டர் வந்திருக்கு மெட்றாஸ்லே இருந்து.. நூறு ரூபா.. அதென்ன சம்பள அட்வான்ஸா?”. தபால்காரர் எல்லாத்…
எழுதப்படும் நாவல் ‘ராமோஜியம்’ – ஒரு சிறு பகுதி ஒரே நாளில் உலகத்து அறிவை எல்லாம் கரைத்துப் புகட்டப்பட்டவனாக எதுக்களித்து எழுந்து நின்றேன். ஆபீசர்கள் குட் லக் என்று சொல்லிக் கை குலுக்கி கீழே கோவிந்தா லாட்ஜில் சாப்பிடப் போனார்கள். நான் அவர்கள் தின்று முடித்துத் திரும்ப வரும்வரை காத்திருப்பதா அல்லது நடந்து ஊரைச் சுற்றிப் பார்ப்பதா என்று முடிவுக்கு வர முடியாமல் நின்றபோது மொழுக்கென்று வயது என்ன என்று தீர்மானிக்க முடியாத ஆகிருதியோடு மனுஷன் ஒருத்தன்,…
“வாடா ராமோஜி. உங்க அப்பாவுக்கு எங்க வீட்டு டோர் நம்பர் பதினேழுக்கு பதிலா இருபத்தேழுன்னு தப்பா எழுதிட்டேன் .. போஸ்ட் பண்ணினதும் தான் உறைச்சது.. அது கமலா பாய் வீடாச்சேன்னு. நம்மடவங்க தான்.. வண்டி கீழண்டை வேறே போயிட்டிருக்கா, நீ நேரே அங்கே போய் எறங்கப் போறேன்னு நினைச்சேன்.. இஞ்ச எறங்கி ஓரமா இருட்டுலே நிக்கறதை பாக்கலே” என்றபடி வெற்று மேலுடம்போடு, பனைஓலை விசிறியால் முதுகு சொறிந்தபடி ராமாராவ் மாமா வரவேற்றார். உள்ளே போனோம். அடுத்த தெருவரை…
ஒன்பது வருஷம் முந்தி, 1935-இல் …. ********************* கும்பகோணத்தில் மெட்றாஸ் திருச்சி பாசஞ்சர் ராத்திரி ஒன்பதரை மணிக்கு வந்து சேர்ந்தது. தலையில் ட்ரங்க் பெட்டியைத் தூக்கி வைத்துக் கொண்டு நடந்து போன இரண்டு பேரையும் என்னையும் தவிர கும்பகோணத்தில் உதிர்த்துப்போக ரயிலுக்கு வேறே யாரும் இல்லை. ஊரடங்கு உத்தரவு போட்ட மாதிரி ரயில்வே ஸ்டேஷன் ஆள் அரவமின்றிக் கிடந்தது. ரயில் விளக்கோடு நீள நடந்து வந்தவர் ஸ்டேஷன் மாஸ்டர் தான். ”ரயில்வே ஸ்டேஷன்லே கேட்டா சொல்வாங்க, துக்காம்பாளையம்…
Excerpt from my forthcoming novel ‘Ramojium’ புது மாம்பலம் பாத்திரக்கடை வெளியில் இருந்து பார்த்ததை விட உள்ளே நீளமாக இருந்தது. பெரிய கடைகளை விடக் குறைவுதான் என்றாலும் கடைக்குள் வைத்திருந்த வெங்கலப்பானை, அடுக்கு, குடம், தவலை, போகிணி, டபரா செட், உருளி என்று பாத்திரங்கள் லட்சுமிகரமாக வீட்டுச் சூழ்நிலையை பிரதிபலித்துக் கொண்டிருந்தன. நவராத்திரி கொலு வைத்தது போல் அவற்றை அழகான மரப்படிகளில் வைத்திருப்பது மனதில் பதிந்தது. ரத்னா ஒரு கச்சேரி ரசிகனின், ரசிகையின் சங்கீத ஈடுபாட்டோடு,…