Archive For The “இது புதுசு” Category

புதினம் ராமோஜியம் – கடல் கொள்ளைக்காரர்கள் 1698 அத்தியாயத்தில் இருந்து

By |

கப்பல் மேல்தளத்தில் ஓடிக் கொண்டிருக்கிற சத்தம். பார்த்து விட்டு வந்து எழுதுவதைத் தொடரலாம் என்று நினைத்தது பூர்த்தியாக ஒரு வாரம் ஆனது ஆச்சரியத்திலும் ஆச்சரியமாகப் போனது. வந்தவர்கள் கடற்கொள்ளைக் காரர்கள். கப்பலில் புகுந்த அந்த சண்டாளர்கள் இந்தப் பகுதி கடலில் சுற்றி வந்து கொள்ளையடிப்பவர்கள். பெரும்பாலும் இவர்கள் நீளமாக தாடி விட்ட, அழுக்கும் குமட்டும் துர் நாற்றமும் வீசும் வெள்ளைக்காரர்களாக இருப்பார்கள். கருப்புக் கடல் கொள்ளைக்காரர்கள் உக்கிரமானவர்கள். இவர்கள் பிடித்தெடுத்த வியாபாரக் கப்பல்களில் இருக்கும் பொருளை மட்டும்…




Read more »

சுவர்ணதுர்க்கம் போகும் வழியில் – ராமோஜியம் நாவலில் இருந்து

By |

அரபிக் கிழவனைத் தவிர எல்லோருக்கும் ஏதோ சந்தர்ப்பத்தில் கொப்புளங்களைப் பரிசளித்தேன். அரபு வீட்டு மாமன் உறவில் ஒரு கேணன் என்மீது இத்தனைக்கும் மேல் காமம் கொண்டு ஆலிங்கனமும் உபசாரமும் வேண்டுமென்று கோரிக்கை வெளியிட அவன் மேல் கொப்புளங்கள் உருவாகச் செய்து அந்த எரிச்சலில் உடை எல்லாம் களைந்து ஓட வைத்து அரபுக் கிழவனுக்கும் மற்ற ஆண்களுக்கும் சங்கடத்தை உருவாக்கினேன். பெண்கள் வெகுவாக ரசித்த காட்சி அது. அரபுக் கிழவனுக்கு நான் பெரிய இடைஞ்சலாகப் போனது அப்படித்தான். என்…




Read more »

நாவல் ராமோஜியம் – வருடம் 1698 காரை புவனி – அத்தியாயத்திலிருந்து

By |

”புவிசி உன் புதுப் பெயர் பெண்ணே.. உன்னை ஆகமட்டும் மாற்றி பெயர், ஊர், அடையாளம் எல்லாம் வேறே இப்போ.. ”. — — — — அந்த அயோக்கிய கிழவன் சொன்னதாக மரதகம் இன்னமும் நிறையக் கூறினாள். அசங்கியம் என்பதால் அவற்றை இங்கே குறிப்பிடாமல் தவிர்த்தேன். நானதைக் கேட்ட அடுத்த வினாடி என் சாபம் புறப்பட, அவன் அழுகிப் புழுத்த பெருச்சாளியை எலிப்பொறியோடு அணைத்து முகர்ந்தபடி சொர்க்கம் கண்டதாக ஆர்பரித்தான். அவனைச் சுற்றி எழுந்த துர்க்கந்தத்தை மேலும்…




Read more »

வருடம் 1698 – காரைக்கால் புவனி அத்தியாயத்தில் இருந்து – நாவல் ராமோஜியம்

By |

முக்கியமாக உப்பையும் சர்க்கரையையும் இடம் மாற்றி ருசிக்கத் தருவதும், அவள் உண்ட கோழி மாமிசத்தை அவளே வாயில் இருந்து தன்னிச்சையாக எடுத்தலும், கதவில் மிகப் பெரிய தேளும் ஜன்னலில் கருஞ்சிலந்தியுமாக அவளை நோக்கி ஊர வைத்தலும், அவளை ஓவியக்காரன் வரைந்த ஓவியத்தில் அவள் தலைக்குப் பதிலாகக் காண்டாமிருகத் தலையை வைத்தலுமாக நான் நடப்பித்து, அவளுடைய அழுகையையும் பயத்தையும் ரசித்துப் பார்க்க ஆரம்பித்தேன். அவளுடைய வாடிக்கையாளரான நாசூர்ஜமீன் நாலாம் பாத்தியக்காரனோ, பண்ணையாரின் வைப்பாட்டி மகனோ வரும்போது சாக்கடையை மேலே…




Read more »

ராமோஜியம் – என் அடுத்த நாவல் : காரைக்கால் புவனி 1698 அத்தியாயத்தில் இருந்து

By |

காரைக்கால் புவனியின் அற்புத சரித்திரம் 1698 புவனி என்னும் காரைக்கால் பட்டணத்துத் தாசிப்பெண் நான். நிகழும் தமிழ் வெகுதானிய வருடம், ஆவணி எட்டாம் தேதி, கிறிஸ்துநாதர் வருஷமான 1698-இல் எனக்கு பதினெட்டு வயதாகிறது. நான் மூன்று வருடம் முன், பவ வருடம் தை மாதம் மூன்றாம் நாள் வயதுக்கு வந்தேன். அப்போது, கணிகைத் தொழிலில் ஈடுபட நான் தயார் என்று அறிவிக்க என் தாயார் தாசி ரஞ்சிதம்மாள் எனக்குக் காரைக்கால் கைலாசநாதர் கோவிலில் பொட்டுக் கட்டுதல் என்ற…




Read more »

ராமோஜியம் – ராமோஜி ஆங்கரே 1698 – தமிழ்ப் பெயரோடு ஒரு கப்பல் – வண்ண மயில்

By |

ராமோஜியின் பத்து வருடம் கடற்படை வாழ்க்கையில் தமிழில் பெயர் வைத்த கப்பலை இப்போதுதான் முதல் தடவையாகப் பார்க்கிறான். அந்த மொழியைப் பேசுகிற மற்ற பிரதேசங்கள் கடல் கடந்து இருக்கும் என்று படித்ததெல்லாம் உண்மைதான் போல. வண்ண மயிலுக்கு கிடைமட்டமாக அகலவாட்டில் விஜயசந்திரிகா நெருங்கியது. ஓ என்று ஆரவாரம் கேட்டது. ராமோஜியின் கப்பல்கள் அமைதியாக கடல் பரப்பில் அசைந்து நின்றன. வண்ண மயில் கப்பல் மேல் தளத்தில் நீள கால்சராயும், அரபு கம்மீஸும் அணிந்த உருவங்கள் அவசரமாக நூலேணி…




Read more »