Archive For The “இது புதுசு” Category

a personal bereavement

By |

என் வாழ்க்கைத் துணைவி திருமதி கிரிஜா முருகன், ரத்தப் புற்றுநோயால் (Acute Myeloid Leukemia) பாதிக்கப்பட்டு டிசம்பர் 30, புதன்கிழமை பிற்பகல் சென்னையில் காலமானார். டிசம்பர் 31 வியாழனன்று இறுதிச் சடங்குகள் நிறைவேற்றப்பட்டன. கிரிஜாவின் ஆன்மா சாந்தியடைய நண்பர்கள் அனைவரின் பிரார்த்தனைகளையும் வேண்டுகிறேன். ஓம் சாந்தி




Read more »

மார்கழிக் குளிரில்

By |

மார்கழிக் குளிரில்

சீரியல் சிறுவிளக்குச் சிங்காரம் செய்து இரவு படிப்பித்தபடி கண்சிமிட்டி நின்ற வன்மரங்கள் கண்ணயர்ந்த விநாடி பம்மிப் பதுங்கி நுழையும் காலைக்குளிர் மெய்தழுவி ஓர்நொடி தவழ்ந்து ஓடிமறைந்து மறுநொடி மறுபடியும் புறம்புல்கும் முன்பனிக் காற்றை இந்தப் படம் சொல்லும்வரை ஏதோ எழுதித்தான் தீரணும்




Read more »

1960-களில் ஒரு மார்கழிக் காலை – அச்சுதம் கேசவம் நாவலில் இருந்து

By |

1960-களில் ஒரு மார்கழிக் காலை – அச்சுதம் கேசவம் நாவலில் இருந்து

நாலே கால் மணி. கோவிலுக்குப் போகிறவர்களின் நடமாட்டம் மட்டும் இருந்த தெரு. லாட்ஜ் வாசலில் இளம் பெண்களாக குஜராத்திகள் நின்று ஏதோ சுவாரசியமாக விவாதித்துக் கொண்டிருந்தார்கள். முகத்தைப் பார்த்தால் ஒவ்வொருத்தியும் உன்னதமான அழகி. பின்னால் இருந்து பார்க்க அவர்கள் அனைவரும் சங்கரனுக்குக் கதகளி ஆட்டக்காரர்களை நினைவு படுத்தினார்கள். யாரோ சங்கரனின் கையைப் பிடித்துக் கொண்டார்கள். மெல்ல நடக்கிறான் அவனும். பக்கத்தில் இதமான கிராம்பு வாடை. பழையதானாலும் பாந்தமாக, ஒரு அழுக்கு இல்லாமல் கசங்கல் காணாமல் இருக்கிற ஒன்பது…




Read more »

நம்புவது ஆசுவாசம்

By |

நம்புவது ஆசுவாசம்

சாவகாசமாக மரம் உதிர்த்த துளிகள் கல்நார்க் கூரையில் நடனமிட்டுப் பெருமழை பெய்ததாய்ப் பொய் சொல்வதை நம்பாதது நம்மிஷ்டம் நம்புவது ஆசுவாசம்.




Read more »

Her Majesty and Yes Prime Minister (and Princess of Wales)

By |

Her Majesty and Yes Prime Minister (and Princess of Wales)

‘The Crown’ – Season 4 on Netflix makes compelling viewing with superb acting, crisp well laid out narration and excellent cinematography. This season 4 of the web TV serial based on the life of the longest reigning English monarch, Queen Elizabeth Windsor, focusses on the events and happenings in the 1980s Britain and elsewhere with…




Read more »

மழைநாள் காலை மகிழ்ச்சி

By |

மழைநாள் காலை மகிழ்ச்சி

அந்திமழை – நவம்பர் 2020 தீபாவளி சிறப்பிதழில் என் குறுங்கட்டுரை மகிழ்ச்சியான தருணம் இரா.முருகன் நான் வசித்த ஹாலிபாக்ஸ் என்ற பிரிட்டானியச் சிறு நகரில் ஒரு குளிர்காலம். விடிகாலையில் தொடங்கி கனமான பனிப் பொழிவோடு ஞாயிற்றுக்கிழமை ஊர்ந்து செல்ல, நான் மடிக் கணினியில் அக்கறையாக ’அரசூர் வம்சம்’ நாவலின் இறுதி அத்தியாயங்களை எழுதிக் கொண்டிருந்தேன். மாயச் சுழலாக கதைப்போக்கு என்னை அடித்துப் போக, ஜன்னல் திரை விலக்கிப் பார்த்தபோது வெளியே இன்னும் பெய்யும் பனி. தொலைக்காட்சியை இயக்கினேன்….




Read more »