Archive For The “இது புதுசு” Category
என் ’வாழ்ந்து போதீரே’ நாவல் -சில பகுதிகள் உடம்பு சொடுக்கெடுத்து விட்டது போல் இருந்தது. ராஜாவுக்கு நடக்க நடக்கக் கம்பீரம் கூடிக் கொண்டு வந்ததேயல்லாமல் இம்மியும் அது இறங்கவில்லை. மணக்க மணக்க எல்லாத் தைலத்தையும் சுடச் சுடக் கலந்து உடம்பெங்கும் நீவி நாலைந்து ராட்சதர்கள் மரியாதையோடு உடம்பு பிடித்து விட்டு எதிர்பார்க்காத நேரத்தில் அவரைப் புரட்டிப் போட்டு முதுகில் ஏறி நின்று திம்திம்மென்று குதித்துக் கும்மாளமிட்டு இறங்கிப் போக எழுந்து உட்கார்ந்தது முதல் உடம்பில் ஒரு வலி,…
(ஆர்.கே.நாராயண் ஆங்கிலக் கட்டுரை – மொழியாக்கம் இரா.முருகன்) சமீபத்தில் நான் ஒரு பயங்கரக் கனவு கண்டேன். ஸனாடு என்ற பெயரில் வினோதமான ஒரு நாடு வந்த கனவு அது. நான் அந்த தேசத்தின் குடிமகனாகி இருந்தேன். அந்த நாட்டு அரசாங்கம் திடுதிப்பென்று கதைகள் கண்காணிப்பாளார் என்று ஒரு அதிகாரியை நியமித்து விட்டதாக அறிவித்தது. நாடாளுமன்றத்தில் எழுத்தாளர்களுடைய பிரதிநிதியும் இடம் பெற்றிருக்கும் தேசம் ஸனாடு. எழுத்தாளர்கள் தங்கள் பிரதிநிதியை இது பற்றிக் கேட்க, அவரும் நாடாளுமன்றக் கூட்டத்தில் வினா…
என் ‘லண்டன் டயரி’ பயண நூலில் இருந்து (கிழக்கு பதிப்பகம், Stall F 7, Chennai Book Fair 2021 ) வெஸ்ட்மின்ஸ்டர் பாதாள ரயில் நிலையத்துக்குள் இருந்து ஞாயிற்றுக்கிழமை மதியம் என்றாலும் ஒரு பெரிய அலையாக எல்லா கிரகங்களிலிருந்தும் புறப்பட்டு வந்த உயிரினங்கள் வெளியேறிக்கொண்டிருக்கின்றன. மற்றொரு கும்பல் வெளியிலிருந்து உள்ளே இறங்கிக் கொண்டிருக்கிறது. இப்போதைக்கு நான் முதல் கூட்டத்தில். கழிவறைக்குப் போகிற பாதையில் தரையில் துண்டு விரித்து வைத்து ஒரு இளைஞர் அற்புதமாக வயலினில் மேற்கத்திய…
நண்பர் ஆர்.வி.எஸ் எழுதிய 1975 நூல் மதிப்புரை. அவருக்கு என் நன்றி சங்கரன் போத்தி ஒரு வங்கி பணியாளர். எமர்ஜென்ஸி காலத்தில் மெட்ராஸ், அரசூர் மற்றும் புதுதில்லியில் பணியாற்றுகிறார். இருபது அம்சத் திட்டத்தில் ஊரெல்லாம் கடன் வழங்குகிறார்கள். வங்கிகள் எப்படி அப்போது இருந்தன என்பதை ஒரு வசனமாக இரா. மு எழுதுகிறார். >>>>>>>>>>>> ”வங்கிகள் வாங்கிகளாக இருக்கக்கூடாது, வழங்கிகளாக இருக்க வேண்டும்” >>> ”25.6.1975 புதன்கிழமை திரு. ஜனகராஜன் அவர்களின் மகன் நாயகம் மறைந்தார். ஜன.நாயகம் இறப்புக்கு…
என் லண்டன் பயண நூல் ‘லண்டன் டயரி’யில் இருந்து – மூக்கு வழியே மூளையிலும் மனதிலும் புகுந்து கிறங்கடிக்கிற வாடையைச் சுற்றிலும் கிளப்பிக்கொண்டு பொன்னிறமாக வறுத்து, கையால் சுற்றும் இயந்திரத்தில் கரகரவென்று அரைத்து, கொதிக்கக் கொதிக்க வென்னீர் சேர்த்து ‘திக்’கான டீக்காஷனை ·பில்ட்டரில் இறக்கி, பத்து நிமிஷத்துக்கு முன்னால் கறந்த பசும்பால் காய்ச்சிச் சேர்த்து, வில்லை வளைக்கிறதுபோல வீசி ஆற்றி, நுரைக்க நுரைக்க டம்ளரில் ஊற்றி நீட்டுகிற அற்புதமான காப்பிக்கடைகள் லண்டனில் திறந்தது கிட்டத்தட்ட இருநூற்றைம்பது ஆண்டுகளுக்கு…
நாதன்ஸ் கபேயில் ஜனதா சாப்பாட்டுக்காக டோக்கன் வாங்கும்போது உள்ளே சாப்பிட்டுக் கொண்டிருந்த ஷர்மா கண்ணில் பட்டார். ”விசு, கொஞ்சம் இரு, ஒண்ணு சொல்ல வேண்டி இருக்கு”, ஷர்மா விஸ்வநாதனிடம் சொல்ல, நான் எதையும் யாரையும் பார்க்கவில்லை, கேட்கவில்லை என்று அபிநயித்து டோக்கனோடு உள்ளே நடந்தேன். கொம்பு உள்ளதற்கு ஐந்து முழம், குதிரைக்கு பத்து முழம், எமர்ஜென்சி எதிர்ப்பாளர் கண்ணில் பட்டால் எவ்வளவு தூரம் முடியுமோ அவ்வளவு தூரம் வேகமாக ஓடி ரட்சைப் படுவதே சான்றோர் சொல்லும் வழிமுறையன்றோ….