Archive For The “இது புதுசு” Category
கோழி மாமிசத்தில் பிரட்ட மிளகு விழுதை எடுத்தாள் கஸாண்ட்ரா. நல்ல வாடை இல்லையா? குசினிக்குள் எட்டிப் பார்த்த பெத்ரோ துரை விசாரித்தார். நல்ல வாடைதான். ஆனால் கோழிக்கு இந்தக் காரம் போதாது. வெங்காயமும், வற்றல் மிளகாயும் சேர்த்து அரைத்த விழுது பூசி எண்ணெயில் பொறிக்க வேண்டிய மரியாதைக்குத் தகுந்தது கோழி மாமிசம். கஸாண்ட்ரா மாமிசத்தில் மசாலா சேர்த்துப் பிரட்டியபடியே சொன்னாள். எதிராளியைக் கீழே வீழ்த்தி தோளை இறுக்கிப் பிடித்துப் பிசையும் மல்லன் போல் கோழி மாமிசத்தைக் கால்களுக்கு…
ஹொன்னாவர் நகரின் பகல் நேரம் பொறுக்க முடியாத சூட்டோடு மெல்லக் கடந்து போய்க்கொண்டிருந்தது. ஆயிற்று வெளியே போகிறபோது இந்தியர்கள் போல் மேல் குப்பாயத்தை, உள்சட்டையைத் துறந்து மாரில் சந்தனம் பூசிக்கொண்டு தெருவோடு போக முடிந்தால் எவ்வளவு நன்றாக, சுகமாக இருக்கும் என்று பெத்ரோ நினைத்துப் பார்த்தார். கள்ளிக்கோட்டை கிராமப் பகுதியில் பெண்களும் அப்படிப் போவார்களாம். மழைக் காலத்தில் கூடவா அப்படி நடந்து போவார்கள்? இன்னும் இரண்டு வாரம் போனால் மழைக்காலம் வந்து விடும். மழை வந்தாலும் அடித்து…
எழுதி வரும் ‘மிளகு’ நாவலில் இருந்து ஒரு சிறு பகுதி (சீராக்கப்பட வேண்டிய பிரதி) குறிப்பு – இங்கே தரப்படும் சிறு நாவல் பகுதிகள் எந்த வரிசையிலும் வருகின்றவை அல்ல. ——————————————————- “மகாராணி அவர்களின் அறுபதாம் பிறந்த நாள் கொண்டாட்டம் மிக சிறப்பாக இருந்தது. அந்த விருந்து என்ன சுவை இன்னும் நாவில் உண்டு.” பெத்ரோ நிஜமாகவே லயித்துச் சொன்னார். சென்னா தேவியின் முகம் மலர்ந்தது. கை இரண்டையும் கூப்பி எல்லாம் இறைவன் செயல் என்றாள். பிரதானி…
Excerpts from the novel MILAGU I am currently writing – தற்போது எழுதிவரும் நாவல் மிளகு-வில் இருந்து ஒரு சிறு பகுதி (draft awaiting editing) ————————————————————————————————– திருவாளர் பெத்ரோவின் இரட்டைக் குதிரை வண்டி மிர்ஜான் துறைமுக நகர் கடந்து, மிர்ஜான் கோட்டைக்குள் நுழைந்து கொண்டிருந்தபோது காலை எட்டு மணி என்று அதிர்வேட்டு போட்ட சத்தம் காதில் விழ தன் கால்சராய் கடியாரத்தை எடுத்து மணி பார்த்தார். எட்டு அடிக்க இன்னும் பத்து நிமிடம்…
நான் எழுதி வரும் ‘மிளகு’ நாவலில் இருந்து மாஜி அரசப் பிரதிநிதி ஒரு வினாடி ஏதும் பேசாமல் நின்றார். “சென்னபைரதேவி என்னை மதிக்காமல் நடந்து கொண்டது பெத்ரோவே, உமக்குத் தெரியாதா அல்லது மறந்து போனீரோ?” தெருவில் அடுத்து மூன்று குதிரை பூட்டிய ட்ரோய்க்கா ஒன்று பாதையை விட்டு விலகிச் சற்றே ஓரமாக வர, அதன் மேல் மோதாமல் ஒதுங்கி நின்றபடி கேட்டார் மாஜி கவர்னர். “பிரபு, மன்னிக்க வேண்டும். பல ஆயிரம் இங்கிலீஷ் பவுண்ட் மதிப்புக்கு மிளகும்,…
பதவி உயர்வு வேண்டாத சதுரங்க வீரன் (இரா.முருகன் புதுக் கவிதை) ————————– கறுப்பு நிறப் படைவீரன் ஒருத்தனை சதுரங்கப் பலகையின் குறுக்கே அழைத்துப் போய் வெள்ளை முதல் வரிசையில் கொண்டு நிறுத்தினேன். ”நீ யாராக ஆக ஆசைப்படுகிறாய் சொல் உன்னை மாற்றுவேன்”- வரம் வழங்கும் கடவுளாக கருணையோடு அவனைப் பார்த்தேன். என்னை யானை ஆக்கினால் நேரே நடப்பேன் பக்கவாட்டில் கோணல் இல்லாது ஊர்வேன் வேண்டாம் அந்த சொகுசு அசைவு நடக்கவே மறந்து போகும். என்னைக் குதிரையாக்கினால் புத்திசாலியாக…