Archive For The “இது புதுசு” Category
(வளர்ந்து வரும் நாவல் ‘மிளகு’வில் இருந்து) —————————————– தலையை ஆட்டிக் கொண்டு ஒரு நிமிடம் இருந்துவிட்டு தாங்குகோல்களை சத்தம் எழுப்பாமல் தரையில் கிடத்தி, “நீ எப்படி இருக்கே? உன் ஆத்துக்காரி எப்படி இருக்கா? எத்தனை பசங்க? என்ன பண்றாங்க? உலகத்திலேயே அப்பா பிள்ளை இப்படி அந்நியர்கள் மாதிரி ஷேமலாபம் விசாரிக்கறது வேறெங்கேயும் நடந்ததா தெரியலே. நடக்கவும் போறதில்லே” என்றார் வந்தவர். “என் பொண்டாட்டி அகல்யா அஞ்சு வருஷம் முன்னாடி சகல சௌபாக்கியத்தோடயும் போய்ச் சேர்ந்துட்டா. செர்வைகல் கேன்சர்….
’மிளகு’ -வளர்ந்து வரும் நாவலில் இருந்து – பெரும்பாலான சடங்குகள் விரிவான விருந்துகளில் முடிவடைகின்றன. அவற்றைப் பற்றித்தான் திலீப் ராவ்ஜியின் ஆதங்கம் மனதில் அழுத்த வேரூன்றி இருக்கிறது. புரோகிதர்கள் நிர்வகித்து நடத்தித் தரும் வருஷாப்திகம் என்ற நீத்தார் நினைவஞ்சலி, காது குத்துதல், பிரம்மோபதேசம் என்று எந்த சடங்கிலும் ராவ்ஜி அழைக்கப்படுவதில்லை. அவர் முப்புரிநூல் அணியாததே அதற்கான பிரதம காரணமாக இருக்கலாம் என்பதை ராவ்ஜி அறிவார். ஆனால், புரோகிதர்கள் இல்லாமல் அவர் எப்படி அகல்யாவுக்கு சாப்பாடு தர முடியும்?…
எழுதி வரும் நாவல் மிளகு-வில் இருந்து : 1999 டிசம்பர் 24 காட்மாண்டு (draft to be edited) ————————————————————————————————– சங்கரன் உள்ளாடைக்குள் மூத்திரம் போய் விட்டார். இந்த அறுபத்தைந்து வயசில் அவருக்கு இது நேர்ந்திருக்க வேண்டாம். ஐந்து வயதில் பள்ளிக்கூடத்தில் முதல் நாளன்று பகவதி பாட்டி கொண்டு போய் விட்டுவிட்டு வாசலுக்குப் போக, அவளை தீனமான குரலில் அழைத்துக் கொண்டிருந்தபோது தோன்றியது, அவள் இனி திரும்ப வரவே மாட்டாள், சங்கரனை வீட்டுக்குக் கூட்டிப்போக யாரும் வரப்போவதில்லை….
எழுதி வரும் நாவல் ‘மிளகு’வில் இருந்து ஒரு பக்கம் ”லண்டன்லே உடுப்பி காப்பி ஓட்டல் இருக்குமா? சீரியஸாத்தான் கேக்கறேன்” கல்பா ஆர்வத்தோடு கேட்டாள். “ஈஸ்ட் ஹாமில் ஒண்ணு இருக்கு. ஆனால் இத்தனை காலையிலே திறந்திருக்குமான்னு தெரியலே” ப்ரபசர் சொன்னார். “ஏன் அப்படி? ஞாயிற்றுக்கிழமை கூட்டம் அங்கேயும் இருக்குமே” கல்பா கேட்டபோது இருக்கலாம் என்று தோன்றியது. “இதுக்காக ஈஸ்ட் ஹாம் போகணுமா?” பிஷாரடி நைட்ஸ்பிரிட்ஜிலிருந்து திரும்பி காரை மெதுவாக ஓட்டியபடி கிளஸ்டர் வீதியின் இரண்டு பக்கமும் பார்த்தபடி வந்தார்….
திலீப் திலீப் ராவ்ஜி ஆனது மலையாள பூமியில் வர்த்தகம் விருத்தியாகி பெரிய ஹோட்டல் உரிமையாளராக ஆன இந்த முப்பது வருடங்களின் மத்தியில் தான். கொஞ்ச நாள் அவரை திலீபன் பரமேஸ்வர ஐயர் என்று அழைத்தார்கள். இத்தனை நீளமான பெயர் எதற்கு என்று நடுவில் சுருக்கி திலீப் பி ஐயர் என்று அழைத்துப் பார்த்தார்கள். அது ஏனோ ஒட்டவில்லை. ஓட்டல் முதலாளிகள் அதுவும் பெரும் தோதில் சைவ உணவகம் நடத்துகிற வெற்றி பெற்ற ஹோட்டல்காரர்கள் எல்லாம் உடுப்பி பின்னணியிலிருந்து…
திலீப ராவ்ஜி தன் காலை நடைப் பயிற்சியிலிருந்து திரும்பி வந்தபோது வீட்டு முன்பில் போட்டிருந்த தோட்டத்தில் ஒரு பசுமாடு மேய்ந்து கொண்டிருப்பதைப் பார்த்தார். தோட்டத்தை கிட்டத்தட்ட தின்று தீர்த்திருந்தது அந்த மாடு. பசு மட்டுமில்லை. கூடவே ஒரு கிழட்டுக் காளையும் மேய்ந்து கொண்டிருந்தது. மாஞ்செடி பதியம் போட்டது, மூலிகை வளர்த்த புதர்வெளிகள், மல்லிகைக் கொடி என்று எல்லாவற்றையும் இந்தக் கால்நடைகள் வேட்டையாடிக் கொண்டிருந்தன. சாப்பிட்டு முடித்து இரண்டு மாடுகளும் வயிற்றுப் பசி தீர்ந்து உடல் பசி முன்…