Archive For The “இது புதுசு” Category
சொல்வனம் இணைய இதழில் தொடர்ந்து பிரசுரமாகிறது ‘மிளகு’. நாவலில் இருந்து ஒரு சின்னஞ்சிறு பகுதி மெய்க்காவலரை விலக்கித் தாதி மிங்குவை மாத்திரம் கூட இருத்திக்கொண்டு தோட்டம் பார்க்கப் புறப்பட்டாள் சென்னா. “ஏக் அஸ்லி காய்..” கொங்கணி மொழியில் ஒரு குழந்தைப் பாடலை உரக்க முணுமுணுத்தபடி சென்னா தோட்டத்துக்குப் போகும்போது தாதி மிங்குவைப் பார்த்து பாடுடீ என்று புன்சிரிப்போடு கட்டளையிட்டாள். ”மகாராணி ஐயையோ நான் மாட்டேன்” என்று பயந்து நாலு திசையும் அவசரமாகப் பார்த்தாள் மிங்கு. அடுத்த நிமிடம்…
என் அடுத்த சிறுகதைத் தொகுதி ‘மயில் மார்க் குடைகள்’ வெளிவந்துள்ளது. என் 17-வது சிறுகதைத் தொகுதியாகும் இது. நண்பர்கள் வாங்கி, வாசித்துச் சிறப்பிக்கக் கோருகிறேன். நூல் வாங்க, கீழே தரப்பட்ட சுட்டியைச் சொடுக்கவும் பதிப்பாளர் Zero Degree Publishing மயில் மார்க் குடைகள் சிறுகதைத் தொகுதி வாங்க
சொல்வனம் இணைய இதழில் தொடர்நாவலாகிறது – மிளகு (இங்கே ஒரு மிகச்சிறு பகுதி) மதியம் ஹோட்டல் காலிஃப்ளவர் பொரியலும் கிருஷ்ணன் கோவில் பிரசாதமாக வந்த உன்னியப்பமுமாக ஆகாரம் கழித்தபோது அனந்தனும் பரமன் தாத்தாவும் 1960களில் இடதுசாரிகள் பிளவுண்டது பற்றி யார் குற்றம் என்று பேசியது மோதக்குக்கு ரசிக்கவில்லை. பரமன் அனந்தனை மாறிய இடதுசாரிகளின் ஒற்றைப் பிரதிநிதியாக ஆவாஹனம் செய்து, அவர்கள் செல்லும் வழி சரிதானா என்று பரிசீலித்தார்களா எனக் கேட்டார். எங்கே போறிங்க? எங்கே போறீங்க? நாடகீயமாகக்…
மடிக்கணினியில் வேகமாக எழுதிக் கொண்டு போகும்போது, வேகத்துக்கு முட்டுக்கட்டை போட என்றே வந்து வாய்த்தது double quotation என்ற “. ஒவ்வொரு கீபோர்டிலும் ஒவ்வொரு மாதிரி இந்த டபுள் கொடேஷனுக்கான இடம் இருக்கும். எங்கே இருந்தாலும், single quotation விசையை ஷிப்டோடு சேர்ந்து அழுத்தி “ கொண்டு வருவது, அதுவும் பக்கம் நிறைய “ வரும்போது பெருங்கஷ்டம். இதற்காகத்தான் அரசூர் வம்சம், விஸ்வரூபம், அச்சுதம் கேசவம், வாழ்ந்து போதீரே என்ற நான்கு அரசூர் நாவல்களிலும் – மொத்தம்…
மிளகு – கஜானன் கண்பத் மோதக் என்ற மராட்டியர் மலையாளி ஆனபோது ————————————————————————— எர்ணாகுளம் ஜங்க்ஷன் வரும்போதே மோதக் மலையாளி ஆகிவிடுவார். பைஜாமாவையும் குர்த்தாவையும் களைந்து மடித்து வைத்துவிட்டு எட்டு முழ வேட்டியும் கருப்பு நிறத்தில் டீ ஷர்ட்டுமாக வேஷம் மாறிவிடும். மலையாளி போல நெற்றியில் சந்தனம் அணிந்து கொள்ள அவருக்கு ஆசைதான். ஆனாலும் நகரும் ரயில் கம்பார்ட்மெண்டில் சந்தனத்துக்கு எங்கே போக? கிட்டத்தட்ட இருபது வருஷமாக வந்து போவதால் கொஞ்சம் போல மலையாளம் அவர் நாவில்…
(ஒரு நாள் 60 நாழிகை – 24 மணி நேரம் – ஒரு நாழிகை 24 நிமிடம்-ஒரு மணி 2.5 நாழிகை) நள்ளிரவுக்கு அப்புறம் பத்து நாழிகைகள் கழிந்து ஐரோப்பிய கடியாரம் காலை நாலு மணி என்று மணி அடிக்க, வைத்தியர் துள்ளி எழுந்தார். அவரோடு சகசயனம் செய்திருந்த மனைவியும் அரசிக்குத் தாதியுமான சீனச்சி போல் மூக்கு சற்றே தட்டையான, அதனால் மிங்கு என்ற பகடி சீனப்பெயர் கொண்டவளுமான செண்பகலட்சுமி வழுவழுத்த கனமான கால்களால் வைத்தியரை மடக்கித்…