Archive For The “இது புதுசு” Category
நேமிநாதன் தேர்ந்தெடுத்த கொங்கணி கவிதைகளை போர்த்துகீஸ் மொழியில் மொழியாக்கம் செய்ய பிரதானி நஞ்சுண்டையா உதவுகிறார். வாரம் இரு முறை ஜெருஸோப்பாவில் இருந்து ஹொன்னாவர் வந்து தங்கியிருந்து மொழிபெயர்ப்பு முன்னால் நகர்வதைப் பார்வையிட்டுப் போகிறான் நேமிநாதன். ஆக, முதலில் கவிதைகளை கொங்கணியில் தேட வேண்டியுள்ளது. அல்லது எழுத வேண்டியிருக்கிறது. நாலைந்து எழுதிவிட்டு மறுபடி மறுபடி குயில், தும்பைப் பூ, மாரிடம் பெருத்த ஊர்வசிகள், ரம்பைகள் என்று எழுதி அலுத்து விடவே, இதையே இன்னும் புதுப் பார்வையாக அங்கே இங்கே…
ஹொன்னாவர் நகரத்தின் பிரதானமான ரதவீதியில் கொடிக்கம்ப மேடைக்கு அடுத்து உயர்ந்து நிற்பது போர்த்துகீசு அரசப் பிரதிநிதி திருவாளார் இம்மானுவல் பெத்ரோவின் மாளிகை. அதற்குக் கிழக்கே இரண்டு சிறு தோட்டங்கள் கடந்து வீரப்பா ஷெட்டியாரின் மூன்றடுக்கு மாளிகை. அவர் மொத்தமாகக் கொள்முதல் செய்து அரிசி இதர தானியங்கள் விற்பனை செய்கிறவர். மேற்கிலோ சமண சத்சங்கம் என்ற சகலரும் வந்திருந்து இறைவன் புகழும் தீர்த்தங்கரர்களின் உன்னதமும் பாடிப் பரவி நற்கதி தேடும் புனிதமான கூடம். வீரப்பா ஷெட்டியாரின் மாளிகைக்கும் கிழக்கே…
எழுதப்பட்டு வரும் ’மிளகு’ நாவலில் இருந்து ———————————————– வண்டிக்காரன் சத்திரம் நிரம்பி வழிகிறது. வெளியூர் வண்டிக்காரர்களும் வந்து தங்கிப் போகிற நாள் இது. ஜெரஸோப்பா மஹாபலேஷ்வர் சிவன் கோவிலில் சிவராத்திரி கொண்டாட்டம். கோவிலுக்கு பூஜாதிரவியங்களோடு, ராத்திரி ஆனாலும் குளித்து மடி வஸ்திரம் அணிந்து உற்சாகமாக போகிறவர்களின் பெருங்கூட்டம் நிமிடத்துக்கு நிமிடம் அதிகரித்துத்தான் கொண்டிருக்கிறது. ஹரஹர மகாதேவ என்று எங்கும் குரல்கள் பக்தி பூர்வம் ஓங்கி எதிரொலிக்கின்றன. வரிசையான சிறு ஜன்னல்களாக வடிவமைத்த கோவில் சுவர்களில் தீபங்கள் திரியிட்டுப்…
நான் விருப்பப்பட்டால் மீன் மற்றும் கடல் பிராணிகளை உண்ணலாம். ஆனால் எனக்கு அந்த மாதிரி உணவு ஏற்றுக்கொள்ளாததால் ஏதோ ஒரு தினம், ஒரு சிறு வட்டிலில் எடுத்தது என்று ருசி பார்க்கிறேன். விஜயநகரப் பேரரசர் விருந்துக்குக் கூப்பிடும்போது அசைவமும் சைவமும் என்ன எல்லாம் அந்தப் பருவத்தில் கிடைக்கிறதோ அது எல்லாம் சமைக்கப்பட்டு விருந்து மண்டபத்துக்கு வந்து சேர்ந்து விடும். அங்கே விருந்து ஒரு நீண்ட சம்பிரதாயம் சார்ந்த நிகழ்ச்சி. சாப்பிடுவது நம் வயிற்றுக்காக இல்லை. வேண்டப்பட்டவர்களோடு கூடி…
சொல்வனம் இணைய இலக்கிய இதழில் தொடராகப் பிரசுரமாகிறது என் புது நாவல் ‘மிளகு’. புதினத்தின் சிறு பகுதி இது – ————————————- சதுர்முக வஸதி. சம்ஸ்கிருதத்திலும் தெலுங்கு அல்லது கன்னட மொழியிலும் அந்தக் கட்டிடத்தின் மேல் நான்கு திசையும் பொறித்திருந்ததைக் கண்டார் பரமேஸ்வரன். சதுர்முகம் என்றால் நான்கு முகம் கொண்டது. பிரம்மா போலவா? இல்லை, நான்கு கதவுகளும் வழிகளும் இருப்பதால் சதுர்முகம் போல. வஸதி என்றால்? வசதியான வசிப்பிடம் என்பது போலவா? மனம் மறுத்தது. புத்தியும் சேர்ந்து…
நாவல் மிளகு சொல்வனம் இணைய இலக்கிய இதழில் தொடராகப் பதிப்புக் காண்கிறது. நாவலில் இருந்து ஒரு சின்னஞ்சிறு துண்டு – ————————————————————————- ”பேகம் சாய்பா, அந்தக் கவலை தங்களுக்கு வேண்டாம். மிளகு ராணி அவர்களே, தாங்கள் எங்களுடைய பெருமதிப்புக்குரிய விருந்தினர். செலவு கணக்கு தங்களுக்கானது அல்ல. அதைத் திட்டமிடுவோம் உண்மைதான். ஆனால் எந்தச் செலவும் குறையேதும் வராதபடி திட்டமிடப்படும். அதற்குத்தான் அழைப்பு முழுமைப்படுத்தப்பட வேண்டுமென்று கோரிக்கை விடுப்பது, யுவர் மெஜஸ்டி”. ”அதென்ன மிளகு ராணி, யுவர் மெஜஸ்டி,…