Archive For The “இது புதுசு” Category

நாழிகைக் கணக்கும் நெல்பரலியும் – எழுதப்பட்டு வரும் மிளகு நாவலில் இருந்து

By |

நாழிகைக் கணக்கும் நெல்பரலியும் – எழுதப்பட்டு வரும் மிளகு நாவலில் இருந்து

மிளகு நாவல் – நாழிகைக் கணக்கு (ஒரு நாள் 60 நாழிகை – 24 மணி நேரம் – ஒரு நாழிகை 24 நிமிடம்-ஒரு மணி 2.5 நாழிகை) நள்ளிரவுக்கு அப்புறம் பத்து நாழிகைகள் கழிந்து ஐரோப்பிய கடியாரம் காலை நாலு மணி என்று மணி அடிக்க, வைத்தியர் துள்ளி எழுந்தார். அவரோடு சகசயனம் செய்திருந்த மனைவியும் அரசிக்குத் தாதியுமான சீனச்சி போல் மூக்கு சற்றே தட்டையான, அதனால் மிங்கு என்ற பகடி சீனப்பெயர் கொண்டவளுமான செண்பகலட்சுமி…




Read more »

மிளகு நாவலில் இருந்து ஒரு சிறிய விள்ளல்

By |

மிளகு நாவலில் இருந்து ஒரு சிறிய விள்ளல்

“மிளகு சாகுபடி செய்யறதுக்குப் பதிலா பத்து நெருப்புக்கோழி வாங்கி மேய்க்கலாம். கூட்டிக் கழிச்சு பார்த்தால், கையில் தங்கறது ஒத்தை ரூபா” உன்னித்தன் கொஞ்சம் அதிகமாகவே பிரச்சனையை ஊதிப் பெருக்கித் தொடங்கி வைத்தார். பின்னே என்ன, மிளகு ராணி இருந்த உத்தர கன்னடத்திலே பத்து டன் மிளகு விளைஞ்சா அபூர்வம். பூச்சி அரிச்சு அதிலே பெரும்பாலும் பங்கு உதிர்ந்து போகுது. நம்ம கேரள பெப்பர், தலைச்சேரி வகையும் மலபார் வகையும் முக்கியமா நல்லா போகணும்னு போன வருஷம் நினைச்சது…




Read more »

ஒரு சிறு கீற்று – மிளகு வாசனையோடு

By |

ஒரு சிறு கீற்று – மிளகு வாசனையோடு

A page from the novel MILAGU I am writing now – சாரதா தெரிசா தன் மகன் மருதுவோடு தங்கி இருக்க லண்டன் வந்து கிட்டத்தட்ட ஒரு மாதம் ஓடிப் போனது. குளிர்காலம் பனிப் பொழிவும் அதிகக் குளிருமாக மெல்லக் கடந்து போகும் வருஷம் இது. நேற்றைக்கு சாயந்திரம் கூட பனிமனிதன் வந்தான். ”அம்மா வெளியே பனி பெய்யுது. வாங்க, பொம்மை பண்ணலாம்”. நேற்று மருது வாசலில் இருந்து மூச்சுத் திணறச் சொல்லியபடி குழந்தை…




Read more »

விமானத்தில் கொடுத்த ரொட்டித் துண்டுகளும், பொங்கலுக்கும் உப்புமாவுக்கும் இடைப்பட்ட ஏதோ இந்தி ஆகாரமும்

By |

விமானத்தில் கொடுத்த ரொட்டித் துண்டுகளும்,  பொங்கலுக்கும் உப்புமாவுக்கும் இடைப்பட்ட ஏதோ இந்தி ஆகாரமும்

பரமேஸ்வரன் நாக்பூரில் விமானத்தில் இருந்து இறங்கியிருக்கக் கூடாது. பத்து நிமிடம் தபால் வாங்க, கொடுக்க என்று பாசஞ்சர் ரயில் மாதிரி நாக்பூரில் நின்று வருவது இந்த விமான சேவையின் தினசரிப் பழக்கமாக இருக்கலாம். அப்படி இறங்கி மீண்டும் டேக் ஆஃப் ஆகும்போது யாராவது குறைகிறார்களா என்று பார்க்க வேண்டாமோ? ரயில் என்றால் கூட்டம் அதிகமாக, நெரிசலும் மிக அதிகமாக இருக்கக் கூடும். விமானத்தில் மிஞ்சிப் போனால் ஐம்பது பேர் பயணம் வந்தாலே அதிகம். இவர்களில், பாதி வழியில்…




Read more »

புதிய நாவல் ‘மிளகு’ – மழை கொண்டு வா விதை கொண்டு போ

By |

புதிய நாவல் ‘மிளகு’ – மழை கொண்டு வா விதை கொண்டு போ

வேகமாக வளர்ந்து வரும் நாவல் ‘மிளகு’வில் இருந்து ஒரு கீற்று விருந்துக்கு அடுத்து அதிக நேரம் கடத்தாமல் கோமாளி வந்தான். ஆரம்பிக்கும்போதே அவன் நேமிநாதனிடம் மிகுந்த பணிவுடன் கேட்டுக் கொண்டது இந்தத் தோதில் இருந்தது – “கொஞ்சம் வார்த்தை அப்படி இப்படிப் போகலாமா? சபை நாகரிகம் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேணுமென்றால் சொல்லுங்க ஐயா”. சென்னபைரதேவி சிரித்து ஆகட்டும் என்று கைகாட்ட, தெம்போடு தொடங்கினான் கோமாளி. “சபை நாகரிகம் என்றால் மலையாள பிரதேசத்து சாக்கியார் கூத்து நினைவு வருது….




Read more »

மிளகு நாவலில் இருந்து ஒரு சிறு கீற்று – கடல் பயணமும் உப்புக் காற்றும்

By |

மிளகு நாவலில் இருந்து ஒரு சிறு கீற்று – கடல் பயணமும் உப்புக் காற்றும்

மருத்துவர் என்ற உரிமையோடு அரண்மனையில் எங்கும் எப்போதும் நுழைய பைத்தியநாத் வைத்தியருக்கு அனுமதி உண்டு. அதுவும் மகாராணி இருக்கும் பாதுகாப்பு மிகுந்த பகுதியில் பிரவேசம் அனுமதி உண்டு. கூட அந்தப்புர மகளிரில் யாராவது வர வேண்டும் என்ற ஒரே ஒரு நிபந்தனையோடு. வைத்தியர் முற்றத்தில் ஓரமாக மேசை போட்டு வைத்திருக்கும் மணியை குறைந்த பட்சம் ஒலி எழுப்பி அடித்தால் போதும். அடிக்கிறார். மிங்கு வெளியே வருகிறாள். என்னப்பா என்ன விஷயம் என்று விசாரிக்கிறாள். இவ்வளவுக்கும் இருவரும் புருஷன்…




Read more »