Archive For The “இது புதுசு” Category

ஒரு குறுமிளகு ஒரு வால் மிளகு

By |

ஒரு குறுமிளகு ஒரு வால் மிளகு

“உன்னைக் கூட்டிப் போறதா எங்கே சொன்னேன்? உன் பெண்டாட்டி மிங்கு என்னோடு வருவா” என்று வைத்தியரின் ஆச்சரியத்தைக் கலகலவெனச் சிரித்து ரசித்தபடி சொன்னாள் சென்னபைரதேவி மகாராணி. வைத்தியர் மிங்கு வீட்டுக்காரனாக ஒரு நிமிஷம் மாறி அவளிடம், “ஆசிர்வாதம் வாங்கு” என்று சொல்ல, தம்பதியாக இருவரும் சென்னாவின் பாதம் தொட்டு வணங்கி ஆசி பெற்றார்கள். “பயணம் போனா, நீங்க ரெண்டு பேரும் உண்டு கட்டாயமாக” என்றாள் ராணி. ”பத்து சிமிழ் மருந்து வேணுமா?” வைத்தியரை ஆர்வத்தோடு கேட்டாள் அவள்….




Read more »

மிளகு நாவலில் இருந்து பறந்து வந்த ஒரு பக்கம்

By |

மிளகு நாவலில் இருந்து பறந்து வந்த ஒரு பக்கம்

“சென்ஹோர் கார்லோஸ், மிளகு ராணி தீர்க்காயுசாக நூறு வயதும் கடந்து சௌக்கியமாக இருப்பார்கள். நான் எங்கே ராஜாவாவது? இருக்கும் ராஜகுமாரன் பதவியை இன்னும் ஆயுசு இருக்கும் நேரம் வரை வகித்து விட்டுப் போய்ச் சேர வேண்டியதுதான்” என்றான் நேமிநாதன் உதிர்த்த லட்டை மென்றுகொண்டு. ”அது ஒரு வழிதான். ஆனால் வயதானவங்களை சற்றே ஓய்வெடுக்கச் சொல்லிட்டு அவங்க சார்பிலே ஆட்சியை நடத்தலாம். எவ்வளவு வருஷமா மிளகு விற்றுக்கிட்டு இருக்காங்க. கையே மிளகு மாதிரி கரடுமுரடா ஆகியிருக்குமே. கண்ணுக்குள்ளே மிளகுப்பொடி…




Read more »

ஒரு சிறு குறுமிளகு – எழுதப்பட்டுக் கொண்டிருக்கும் நாவல் மிளகு-வில் இருந்து

By |

ஒரு சிறு குறுமிளகு – எழுதப்பட்டுக் கொண்டிருக்கும் நாவல் மிளகு-வில் இருந்து

”ராஜா, நாங்கள் யாரென்று உங்களுக்கு ரோகிணி சொன்னாளா?” அகஸ்டின்ஹோ நேமிநாதனைக் கேட்டார். இல்லை என்று தலையசைத்தான் அவன். ஊர் சுற்றிப் பார்க்க லிஸ்பனில் இருந்து வந்திருக்கும் வர்த்தகர்கள். அது மட்டும் தெரியும். கார்லோஸ் சிரித்தார். ”வாயில் கட்டை விரலைப் போட்டுக்கொண்டு ஊர் உலகம் தெரியாமல் சுற்றும் முதிய சிறுவர்கள் என்றோ, ஆவிகளோடு இழைவதை உயிர்மூச்சாக உலகமெங்கும் பரப்ப முற்பட்ட மத்திய வயசுக் கிழவர்கள் என்றோ எங்களைப் பற்றி மாண்பு மிக்க மகாராஜா சமூகத்துக்குத் தோன்றினால், அடாடா, அடாடா,…




Read more »

மிளகுத் தெறிப்பு – நாவலில் ஒரு சிறு இழை

By |

மிளகுத் தெறிப்பு – நாவலில் ஒரு சிறு இழை

நேமிநாதன் இருந்தபடிக்கே வணக்கம் சொன்னான். போன வாரம் ஆவிகளோடு பேச வந்த இரண்டு போர்த்துகீசியர்களும் வணக்கம் என்று இருகை கூப்பி நின்றிருந்தார்கள். இவர் ஜோஸ் கார்லோஸ். லிஸ்பனில் வர்த்தகர். நேமிநாதன் ஜோஸ் கார்லோஸை ஒரு கீற்றுப் புன்னகையால் வரவேற்றான். இவர் தோமஸ் அகஸ்டின்ஹோ. குடும்பத் தொழிலைக் கவனிக்கிறார் என்றாள் ரோகிணி. கொஞ்சம் அலட்சியத்தோடு தலையாட்டுகிறான் நேமி. நேமிநாதன் ரோகிணியை மங்கிய அறை வெளிச்சத்தில் பார்க்கிறான். போர்ச்சுகீசிய, இங்க்லீஷ், பிரஞ்ச், கிரேக்க அழகுத் தேவதை போல் இருக்கிறாள் அவள்….




Read more »

வளரும் மிளகு நாவல்கொடியில் ஒரு சிறுபிடி மிளகு – அப்பாவுக்குக் கல்யாணம், அம்மாவுக்கும்

By |

வளரும் மிளகு நாவல்கொடியில் ஒரு சிறுபிடி மிளகு – அப்பாவுக்குக் கல்யாணம், அம்மாவுக்கும்

கோகர்ணம் மகா கணபதி க்‌ஷேத்ரத்தில் கோவில் ஸ்தானிகர் சுருக்கமாக மந்திரம் சொல்ல, கஸாண்ட்ராவும், ரமணதிலகனும் ரோகிணிக்கும் பரமனுக்கும் மாலை எடுத்துத்தர, மாலை மாற்றித் திருப்பூட்டியானது. பிள்ளையார் சந்நிதி வெளிப் பிரகாரத்திலேயே ஓர் ஓரமாக கல்யாண விருந்தாகக் கொண்டு வந்த ஜெயவிஜயிபவ இனிப்பு, பிஸிபேளாஹூளியன்ன, மிளகு சாதம், எலுமிச்சை சாதம், ததியோன்னம் என்று இலைத் தொன்னைகளில் வழங்கப்பட்டு கடைசியாக பால் பாயசமும் பருகத் தந்து கல்யாணம் ஒரு வழியாக நிறைவேறுகிறது. சடங்குகள் நிகழும்போது கல்யாணப் பெண்ணும் மாப்பிள்ளையும் ஒருத்தரோடு…




Read more »

துடைத்துப் போடும் ஐரோப்பிய சுத்தம்

By |

துடைத்துப் போடும் ஐரோப்பிய சுத்தம்

எழுதி வரும் ‘மிளகு’ நாவலில் இருந்து -‘ வாருங்கள், உள்ளே போகலாம் என்று அழைத்துப் போனார் பிரதானி நஞ்சுண்டையா. சந்தனத்திலேயே சதா மூழ்கி இருப்பாரோ என்று பெத்ரோவின் நாசி கேட்டது. இந்தியர்களுக்கு சந்தனத்தில் அப்படி என்ன பெருவிருப்பம் என்று அவருக்குப் புரியவில்லை தான். ஐரோப்பியனுக்கு மிளகில் விளக்க முடியாத ஒரு வசீகரம் இருக்கும்போது இந்தியனுக்குச் சந்தனம் பிடிக்கக்கூடாதா என்ன? அழகான ஜரிகை, பல நிறப் பட்டுத்துணி, தந்தப் பலகை கொண்டு இழைத்து, தைத்து, பளபளப்பாக்கி பன்னீரும் சந்தனம்…




Read more »