Archive For The “இது புதுசு” Category

மிளகு நாவலில் இருந்து – மாஸ்கோவில் இருந்து வந்த நடாஷா

By |

மிளகு நாவலில் இருந்து – மாஸ்கோவில் இருந்து வந்த நடாஷா

”நடாஷா, உன் குடும்பம்?” திலீப் தயங்கித் தயங்கிக் கேட்டான் அவளை. “நானா? சில இனிப்புப் பழம், சில புளிப்புப் பழம், சில அழுகிய பழம், இன்னும் சில பழுக்காமலேயே உலர்ந்து உதிர்ந்தது. என் பழக்கூடையிலே எல்லாம் உண்டு”. நடாஷா சிரித்தாள். ”நான் இங்கே இருந்து மாஸ்கோ போனபோது எங்கப்பாவுக்கு சித்தபிரமை பிடிச்சிருந்தது. அதோடு கூட சென்ட்ரல் கமிட்டியில் சிறப்பாக வேலை பார்த்திருந்தார். அவரை குருஷேவ் எதிர்ப்பாளர்னு சைபீரியா அனுப்பிட்டாங்க. பிரஷ்னேவ் ஆதரவுக்காரர் அவர்னு அப்புறம் கண்டுபிடிச்சாங்க. பிரஷ்னேவுக்கே…




Read more »

லிஸ்பன் மாநகரப் பிரமுகர்களும் ஒரு பெருச்சாளியும்

By |

லிஸ்பன் மாநகரப் பிரமுகர்களும் ஒரு பெருச்சாளியும்

(மிளகு நாவலில் இருந்து) தோமஸ் அகஸ்டின்ஹோ ரொம்பப் பரிதாபமான நிலையில் காணப்பட்டார். லிஸ்பன் மாநகரில் இருந்து வந்த அவருக்கும், அவர் கூட வந்த ஜோஸ் கார்லோஸுக்கும் ஹொன்னாவர் கருமார் தெருவில் தங்க ஏற்பாடு செய்திருந்த வீட்டில் தான் பிரச்சனை. படுத்தால் உறக்கம் வரவில்லை. மெழுகுவர்த்திகளை அமர்த்தினார். திரைகளை முழுக்க இழுத்து மூடினார். அதையும் இதையும் நினைத்தபடி படுக்கையில் புரண்டு கொண்டிருந்தார் அகஸ்டின்ஹோ. வேறொண்ணுமில்லை. ஒரு பெருச்சாளி, ராத்திரி படுக்க விடாமல் அவர் படுக்கையைச் சுற்றிக் குறுக்கும் நெடுக்கும்…




Read more »

விடுமுறை தரும் வாவுநாள் – மிளகு நாவலில் இருந்து

By |

விடுமுறை தரும் வாவுநாள் – மிளகு நாவலில் இருந்து

சிறுவன் மஞ்சுநாத் அப்பாவோடு விளையாட இரு வாரத்துக்கு ஒரு நாள் கிடைக்கிறது என்று பேர். பௌர்ணமி மற்றும் அமாவாசை தினங்கள் அவை. அந்த வாவு தினங்களில் ஜெருஸோப்பாவிலும் ஹொன்னாவரிலும் எல்லா வர்த்தக நிறுவனங்களும் கடை அடைத்து வியாபாரத்தை அடுத்த நாளுக்குத் தள்ளிப்போட்டு ஓய்வெடுக்க வேண்டும் என்று விஜயநகர விதிமுறைகளைப் பின்பற்றி விடுமுறை அறிவிக்கப்பட்டு ஐந்து வருடமாகி விட்டது. வேலைக்கு விடுப்பு வந்த தினம் என்று நிறைவேற்றிக் கதவு சார்த்திப் பூட்டுப் போட யாருக்கும் கஷ்டமில்லை. இன்று அப்படி…




Read more »

நவாப் பழக்கம் – ஜிலேபியும் ஜாங்கிரியும் (நாவல் மிளகு)

By |

நவாப் பழக்கம் – ஜிலேபியும் ஜாங்கிரியும் (நாவல் மிளகு)

நாவல் மிளகு-வில் இருந்து ஒரு ஜாங்கிரி எழுந்ததும் அப்பக்கா கடைப்பிடிக்கும் ஒரு சுல்தான் – நவாப் பழக்கம் உண்டு. ஒரு பெரிய கோப்பை நிறையக் காய்ச்சிய சூடான பால். அதில் சர்க்கரை மறந்துகூடப் போடக்கூடாது. தட்டின் நடுவில் அந்த உயரக் கோப்பை. இரண்டு பக்கமும் இரண்டு பெரிய ஜிலேபிகள். ஜாங்கிரி இல்லை ஜிலேபி என்பதில் அப்பக்கா உறுதியாக இருக்கிறாள். ஜாங்கிரி தென்னிந்திய இனிப்பு என்பாள் அப்பக்கா. நெய் மணக்க, கோதுமைச் சாறு காய்ச்சித் திரண்ட பூங்கொத்து போன்றது…




Read more »

ஹொன்னாவரில் ஒரு கிறிஸ்துமஸ்

By |

ஹொன்னாவரில் ஒரு கிறிஸ்துமஸ்

மிளகு நாவலில் இருந்து நாளைக்குத்தான் கிறிஸ்துமஸ் நாம வியாபார ஸ்தலமா இருக்கறதாலே இன்னிக்கே கொண்டாடறோம். கேக் செய்து கொடுத்தவர் கஸாண்ட்ரா. அவங்களுக்கு உதவி ரோகிணி. முட்டைகளைச் சேர்த்துத்தான் கேக்குகள் செய்யப்படும் என்பதால், இனிப்பு அங்காடியில் அவற்றை உருவாக்க முடியாது. இங்கே முட்டைக்காரர் கிருஷ்ணப்பா படியேறலாம். அவர் விற்கும் முட்டை உள்ளே வர முடியாது. ஆகவே பெத்ரோ துரை வீட்டிலே, அவர் கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு கோழிக்கோடு பயணம் வைக்க முன்பு அனுமதி வாங்கி அவர் வீட்டு குசினியில் இவற்றைச்…




Read more »

மிளகு நாவலுக்குள் வந்த வண்ணத்திப் பூச்சி

By |

மிளகு நாவலுக்குள் வந்த வண்ணத்திப் பூச்சி

சாரட் ஜன்னலில் ஒரு வண்ணத்திப் பூச்சி வந்து அமர்கிறது. டிட்லி என்கிறான் கடிபோலி மொழியில். பட்டாம் பூச்சி என்கிறான் தமிழில். சித்ர சலபம் என்கிறான் மலையாளத்தில். சிட்டே என்கிறான் கன்னடத்தில். போர்பொலேடா என்கிறான் போர்த்துகீஸில். பரமன் மலைத்துப் போய் உட்கார்ந்திருந்தார். மூன்று வயதில் இத்தனை மொழி கொஞ்சம் போலவாவது எப்படி கற்றுக் கொண்டான்? அவனையே கேட்கிறார். தும்பைப் பூ மாதிரி முகம் மலர்ந்து பிரகாசிக்கச் சொல்கிறான் – என் சிநேகிதங்க வேறே வேறே பாஷை பேசுவாங்க. எல்லோருக்கும்…




Read more »