Archive For The “இது புதுசு” Category
An excerpt from my mega-novel MILAGU இரண்டு நாள் முன்பு சென்னபைரதேவி அவளுடைய வளர்ப்பு மகனை மிர்ஜான் கோட்டையில் இருந்து வெளியேற்றிய செய்தி கொண்டு வந்த தூதன் ஏதாவது பதில் இருக்கிறதா அம்மா என்று கேட்டான். என் ஆதரவை சென்னபைரதேவிக்கு அளிக்கிறேன். ஜெர்ஸோப்பா நாட்டு மகாஜனங்களும் அவருக்கு பெரும் ஆதரவு தரவேண்டும் என்று விரும்புகிறேன் . உத்தர கர்னாடகா பிரதேசத்தின் வியாபார, பொருளாதார வளர்ச்சிக்கு அவருடைய பங்கு கணிசமானது. அவருக்கு எதிரான சிறு போராட்டங்கள்…
உடையாத பலூன் ————— போன வாரம், சரியாக எட்டு நாள் முன்பு பாப்பாவுக்குப் பிறந்தநாள் வீடு அலங்கரித்தோம் காகிதத் தோரணம் தொங்க விட்டோம் முகமூடி அணிந்து குழந்தைகள் ஆட பாட்டு ஒலிபரப்பினோம் அடுமனைக்கு தொலைபேசி கேக்கும், சமோசாவும், சர்பத்தும் வரவழைத்தோம் நல்ல விருந்து. பெரிய பலூன்களை ஊதி ஊதி குழந்தைகள் கையில் கொடுத்தோம் கதவிலும் ஜன்னல்களிலும் ஒட்டவைத்தோம் பாப்பா கையிலும் பலூன் பிடித்து அங்குமிங்கும் ஓடினாள் ரம்யமாக. எல்லா பலூனும் அப்புறம் உடைய பாப்பா கை பலூனுக்கு…
வழியில் தென்படும் முதல் சத்திரத்தில் சாரட் வண்டிகளை நிறுத்தச் சொல்கிறேன். அடுத்த பத்தாவது நிமிடம் வல்லூர் ராமானுஜ கூடம் என்று பெயர் எழுதிய வழிப்போக்கர் சத்திரத்தை அடைந்து நிற்கின்றன. முதல் சாரட்டில் வந்த பாதுகாப்பு வீரர்கள் சாரட்டில் இருந்து கீழே இறங்கி சத்திரத்துக்குள் பிரவேசிக்கிறார்கள். வாசலில் இருந்து எட்டிப் பார்த்து விட்டு காலணிகளைக் கழற்றி உள்ளே ஓடுகிறதைப் பார்த்து புன்னகைக்கிறேன். நான் இது தொடர்பாகக் கொடுத்திருந்த உத்தரவுகள் நிறைவேற்றப்படுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். உள்ளே இருந்து நெற்றி நிறைய,…
Excerpt from my forthcoming novel MILAGU நான் அப்பக்கா. இப்படிச் சொன்னால் போதாது. எந்த அப்பக்கா? என் அம்மா பெயரும் அதேதான். போதாக்குறைக்கு என் தங்கையும் அப்பக்கா தான். உலகத்தில் புதிதாகச் சூட்டப் பெயர்களே இல்லாமல் அஸ்தமித்து, எல்லோரும் வேறு வழியின்றி அப்பக்கா என்று நாமகரணம் பெறவேண்டும் என்பது எழுதாவிதியோ என்னமோ. நான் மூத்த மகள் அப்பக்கா சௌதா. சௌதா என்பது வீட்டுப் பெயர். வடக்கு கர்னாடகத்தில் உள்ளால் மற்றும் புட்டிகே பிரதேசங்களுக்கு துளுவ வம்ச…
சாப்பிடாமல் வாருங்கள் என்று இரண்டு தூதர்கள் மூலம் எனக்குச் சொல்லி அனுப்பியிருந்தார் மதுரை மாமன்னர் முத்து கிருஷ்ணப்ப நாயக்கர். சாயந்திரம் ஏழு மணிக்குச் சந்திக்கலாம் என்று செய்தி அனுப்பியிருந்தார் அவர். கோழிக்கோடு ஸாமுரின் போல் நல்ல உயரமும், கெச்சலான கருத்த உருவமும், மேலுடம்பு மறைக்கும் வெள்ளி, பொன் ஆபரணங்களுமாக நாயக்கரைக் கற்பனை செய்திருந்ததது தவறாகப் போனது. ஆகிருதி குள்ளமும் இல்லை உயரமும் இல்லை. இந்துஸ்தானத்தில் மேட்டுக்குடி இயற்கை உடலம்சமாகக் கருதும் சிவப்புத் தோல் என்ற கறுப்பு இல்லாத,…