Archive For The “இது புதுசு” Category
பெத்ரோ பிரபு மிர்ஜான் கோட்டை வாசலுக்கு வந்தபோது எந்தப் பரபரப்பும் இல்லாமல் அந்தப் பெருவெளி இருந்தது. திட்டிவாசலைத் திறந்து யார் வந்திருப்பது என்று பார்க்கும் பெரிய மீசை வைத்த காவலாளி இல்லை. இன்னார் வந்திருக்கிறார் என்ற செய்தியை உள்ளே தெரிவிக்க கோட்டை அலுவலகத்துக்கு ஓடும் வீரன் இல்லை. என்றாலும் கோட்டைக் கதவுகள் சார்த்தியிருந்தன. சிக்கன நடவடிக்கையாக கோட்டை ஊழியர்கள் சிலருக்கு அரை ஊதியத்தில் விடுமுறை கொடுத்து வீட்டுக்குத் தற்காலிகமாக அனுப்பியிருப்பதாகக் கேட்ட வதந்தி பெத்ரோவுக்கு நினைவு வந்தது….
ஆக ஹொன்னாவரிலே யுத்தம் வர்றதப் பற்றி அவ்வளவா கவலைப்பட்டுக்கலே. ஜெரொஸுப்பாவிலே நிலைமை எப்படி? யுத்தம் கட்டாயம் இன்னும் ரெண்டு மாசத்திலே வந்துடும்னு நம்பறா அவா. தெருவிலே காய்கறி விக்கறவன், வீடு கூட்டற பெண், கல்லை உடைச்சு கட்டடம் கட்டறவா, தெருவிலே புட்டும் கடலை சுண்டலும் விக்கறவா, சர்க்கார் உத்தியோகஸ்தன் இப்படி சாமான்ய ஜனங்கள் சண்டை வரும்னு எதிர்பார்க்கறா. அவா எல்லாம் ஸ்வாமிக்கு பயந்தவா. ஆனா கோவில், பசதின்னு செலவு பண்ணி மத்தபடி ஊரை கவனிக்காம விட்டதா ராணியம்மா…
An excerpt from MILAGU இதெல்லாம் சென்னாவா செய்ய மாட்டா அண்ணா. அவ ரொம்ப நல்லவ. சாது வேறே. அந்த அப்பக்காவோ, கிறுக்கு வேஷம் போடற அவாத்துக்காரன் வீரநரசிம்மனோ அவ மனசைக் கெடுக்கறாளாம். பெத்ரோ துரை இருக்காரே, போர்த்துகல் ராஜ பிரதிநிதி அவருக்கு மிர்ஜான் கோட்டையிலே இருக்கப்பட்ட செல்வாக்கு, விஜயநகர பிரதிநிதி ஹனுமந்த ராயக் கிழடுக்குக் கூட அங்கே இல்லையாம். யார் கண்டா இவா வேறே என்ன மாதிரி ஒருத்தொருக்கொருத்தர் பட்சமா இருக்காளோ. வயசானா சிலபேருக்கு விபரீத…
Excerpt from novel MILAGU நாட்டில் வீதி குண்டும் குழியுமா இருக்கு. குடிதண்ணீர்லே சாக்கடை கலக்கறதாலே வயிறு உப்புசம் கண்டு சிலபேர் கைலாச யாத்திரை. ராத்திரி தெருவிலே ஏத்தி வைக்க விளக்கு கிடையாது. அதுக்கெல்லாம் யார் கவலைப் படறா? மிளகு விளைஞ்சா போதும். அரிசி இல்லேன்னா மிளகைப் பொங்கித் தின்னுன்னு விவஸ்தையில்லாமே ஆலோசனை சொல்றாளாம். ஆமா, போன வாரம் கோகர்ணத்துலே ஒரு தெலுங்கனும், துளுவனும் அவா அவா குடும்பத்தோட கோட்டைக்கு வந்து அங்கே வளர்ந்திருக்கற புல்லைத் தின்ன…
ஹொன்னாவர் அக்ரஹாரத்தில் ஒவ்வொரு மனையிலும் இருக்கப்பட்ட ஆண்கள் கிட்டத்தட்ட பிரதி தினமும், காலை ஏழிலிருந்து பிற்பகல் அல்லது சாயந்திரம் வரை காணாமல், முப்பது கல் சுற்றளவில் ஏதாவது கிரஹத்தில் மங்கலமான, அல்லாத சடங்கு நிறைவேற்றித்தரப் போயிருப்பதால், அக்ரஹாரத்தில் ஆண் மூச்சு ஆகக் குறைவாகவே இருக்கும். எழுபது வயதில் ஓய்வு பெற்ற சாஸ்திரிகள் கூட குரல் நடுங்காமல் ஸ்பஷ்டமாக எழும் வரை வேதபாடசாலையில் பாடம் நடத்தப் போய் விடுவார்கள் பெரும்பாலும். வாரம் ஏழு நாள், மாதத்துக்கு ஒரு சுக்ல…
ஹொன்னாவர் அக்ரஹாரத்தில் ஆண்கள் யாரும் தட்டுப்படாத காலை நேரம் அது. பிறந்து மருத்துவச்சி கையில் விழுந்த சிசுவுக்கு காலுக்கு நடுவே குஞ்சாமணி தட்டுப்பட்டால், சுபஸ்ய சீக்கிரம் என்றபடி, கூடிய சீக்கிரம் சுபமுகூர்த்தத்தில் காது குத்தல், நாமகரணம், சோறூண், அப்புறம் பூணூல் கல்யாணம். முப்புரி நூல் அணிந்த பய்யன்கள் வேத அத்தியாயனம் செய்து கொண்டிருக்கும்போதே வாழ்க்கைக்கு அவசியமான மந்திரங்களை ஓதப் பயிற்சியோடு, சடங்குகளை நிறைவேற்றித் தரவும் பயிற்சி அளிக்கப்படுவர். உதாரணமாக காதுகுத்தலையே எடுத்துக் கொள்ளலாம். எளிமையான சடங்கு,…