Archive For The “இது புதுசு” Category
இலக்கிய நிகழ்வு, நாடக விழா என்று பாரதி மணி அவர்களோடு கடந்த பத்தாண்டுகளுக்கு மேல் அவ்வப்போது சந்தித்து அளவளாவி இருக்கிறேன். அவருடைய புகைக்குழலில் எழும் மிதமான புகையிலை வாடையாகத்தான் அவரை நினைவு வைத்திருக்கிறேன். வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது கோவையில் அளிக்கப்பட்ட விழாவில் அமர்வுகளுக்கு இடையே நிறைய உரையாடினோம். வண்ணதாசனுக்கும் வண்ணநிலவனுக்கும் சாரல் விருது சென்னையில் வழங்கப்பட்டபோது பேசியது படமாக நினைவு இருக்கிறது. இந்திரா பார்த்தசாரதி அவர்களைச் சந்தித்து உரையாடியபோது ஒரு முறை சொன்னார் – என் ‘மழை’…
An excerpt from my forthcoming novel MILAGU சாரி டாக்டர் பிஷாரடி, பேசிண்டே இருந்தபடி உறங்கிட்டேன். ஏசி போட்ட ரூம்லே இப்படி சௌகரியமான லெதர் அப்ஹோல்ஸ்ட்ரி போட்டு உக்கார்ந்தேன்னும் இல்லாம படுத்தேன்னும் இல்லாம அரைத் தூக்கத்திலே கிடக்கறது பாக்யம். தலையசைத்தபடி மனதில் பெயர்களை பட்டியல் போட்டார் – மஞ்சுநாதன் இல்லே மஞ்சுநாத், நேமிநாதன், ரோகிணி, ஜெருஸூப்பா, ஹொன்னாவர். அவருக்குப் புரிகிறது நானூறு வருடம் முந்தி ஹொன்னாவரில் ஜீவித்திருந்தவர்கள் இவர்கள். பரமன் அந்தக் காலத்தில் போய் வாழ்ந்திருக்கிறார்…
நாவலிலிருந்து ஒரு சிறு பகுதி குழந்தை என்னோடு அவ்வளவாக ஒட்டவில்லை. எப்போதும்போல்தான் இது. அப்பாவை பிரிந்த துக்கம். அவனுக்கு அப்பா என்பது பரமன் என்று பேசத் தெரிந்த காலத்திலேயே சொல்லிக் கொடுத்தாகி விட்டது. நேமிநாதனுக்கு அவன் மகன் என்பதில் அக்கறை இல்லை. அவனுக்கு நேமி தான் தகப்பன் என்பது இன்றுவரை தெரியாத உண்மை. அது தெரிய வரும்போது அவனும், நானும், நேமியும் பரமனும் என்ன ஆகியிருப்போமோ. ஞாயிறு முழுக்க அப்பா அருகில் இல்லாத துக்கத்தை அழுது தீர்த்தான்…
Excerpt from my forthcoming novel MILAGU பரமன் என்ற பரமேஸ்வர ஐயர் அறையின் மூலையில் வசதியான சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்தார். அறை நல்ல வெளிச்சத்தில் இருந்தது. பரமனுக்கு எதிரே இன்னொரு நாற்காலியிட்டு பிஷாரடி வைத்தியர் உட்கார்ந்திருந்தார். அவர் மடியில் ஒரு சிறிய கேஸட் டேப் ரிக்கார்டரை வைத்திருந்தார். பரமன் சட்டை காலரில் இருந்து மிகச் சிறிய ஒலிவாங்கி டேப் ரிகார்டரோடு இணைத்திருந்தது.பரமனின் கண்கள் மூடியிருந்தன. பிஷாரடியும் மைக் கொண்டு தன்னையும் டேப் ரிகார்டரோடு பிணைத்திருந்தார். பத்து…
Excerpt from my forthcoming novel MILAGU இணைப்பு போர்த்துகீசிய மகாமன்னர் ’பக்திமான்’ பிலிப் இந்துஸ்தானத்துக்கான போர்த்துகீசிய தலைமை அரசப் பிரதிநிதி சென்ஹோர் இம்மானுவேல் பெத்ரோ அவர்களுக்கு விடுத்த உத்தரவு லிகிதம் (பகுதிகள்) இந்துஸ்தானப் பெருநிலத்துக்கு எம் தலைமைப் பிரதிநிதியாக நியமித்து அனுப்பிய சென்ஹோர் இம்மானுவேல் பெத்ரோ அறிந்திடுக- மகாராணி சென்னபைரதேவி அரசாளும் ஜெர்ஸோப்பா மாநிலத்தில் தற்போது ஏற்பட்டிருக்கும் அரசியல் பிரச்சனை குறித்து பெத்ரோ ஆகிய நீர் அறிந்திருக்கலாம். இது குறித்து எமக்கு உடனே விரிவாகத் தகவல் தெரிவித்து…
Excerpts from my forthcoming novel MiLAGU யுத்தம் வருமா? தனக்குத்தானே பேசுகிற முணுமுணுப்பாகக் கேட்டாள். பெத்ரோ ஏதும் சொல்வதற்குள் சென்னபைரதேவி தொடர்ந்தாள் – போர் வரும். அரசாள ஓரத்தில் இருந்து வேடிக்கை பார்த்திருந்த என் வளர்ப்பு மகன் நேமிநாதன் சும்மா இருக்க மாட்டான். கெலடி வெங்கடப்ப நாயக்கரும், பில்ஜி அரசன் திம்மையாவும் அவனுக்கு உடனே ஆதரவு தருவார்கள். எனக்கு ஆதரவுக்கு யாருமில்லை. அப்பக்கா ராணியை எனக்கு ஆதரவு தெரிவிப்பதில் இருந்து மாற்றிக்கொள்ளக் கட்டாயப்படுத்தி விட்டார்கள்….