Archive For The “இது புதுசு” Category

பெரு நாவல் ‘மிளகு’ – Bite the bullet and break a leg

By |

பெரு நாவல் ‘மிளகு’ – Bite the bullet and break a leg

An excerpt from my forthcoming novel MILAGU வேறே சிறந்த வைத்தியரைத் தேடி நாலு திசையிலும் அலைந்து கொண்டிருக்கிறார் பில்கி அரசர் திம்மராஜு. அவர் பார்க்கப் போன வைத்தியர்கள் எல்லாம் தெரிந்த ஆனால் அனுபவம் போதாதவர்களாகவோ, அரைகுறை வைத்திய அனுபவசாலிகளாகவோ அமைந்து போகிறார்கள். அனுபவமும் அறிவும் மிகுந்தவர் என்றால் கைராசி துளியும் இல்லாதவராக இருக்கிறார்கள். உடுப்பியில் ஐரோப்பிய மருத்துவர் புதுசாக வந்து இறங்கியிருக்கிறார். பெயர் விளங்காத மருந்து ஏதேதோ கொடுத்து ஜலதோஷத்திலிருந்து,    லிங்கம் சிதைக்கும் பொம்பளை…




Read more »

பெரு நாவல் ‘மிளகு’ – The Emperor of Bilgi in search of a medicine man

By |

பெரு நாவல் ‘மிளகு’ – The Emperor of Bilgi in search of a medicine man

An excerpt from my forthcoming novel MILAGU பில்கி குறுநில மன்னர் திம்மராஜு பயணம் போவதை அவ்வளவாக விரும்பாதவர். கையிலே ஆயிரம் வேலை வந்து உக்கார்ந்திருக்கு கால்லே சக்கரத்தை மாட்டிக்கிட்டு ஊர் சுற்றக் கிளம்பிட்டா எப்போ முடிக்கறது? அவரானால் இப்போது இந்த கார்த்திகை மாதம் பிறந்ததும் சுறுசுறுப்பாக எல்லா திசையிலும்  பயணம் போய்க் கொண்டிருக்கிறார். ஒற்றை சாரட் போதவில்லை. குதிரைகள் களைப்படைந்து விடுவதால் இரண்டு நாட்களுக்கு மேல் அவற்றை மாற்றி வேறு ஜதைகளைப் பூட்ட வேண்டியுள்ளது….




Read more »

பெரு நாவல் ‘மிளகு’ – on Rauvolfia tetraphylla (Devil Pepper)

By |

பெரு நாவல் ‘மிளகு’ – on Rauvolfia tetraphylla (Devil Pepper)

An excerpt from my forthcoming novel MILAGU ஒரு நிலத்தில் அல்லது வீட்டு முகப்பில் காலை ஆறு மணிக்கு ஒரு சிறு துணுக்கு, வேர் இருந்தால் சரிதான், இல்லையென்றாலும் சரிதான், அங்கே போட்டுவிட்டுப் போனால் சாயந்திரம் ஆறு மணிக்கு வீட்டு முகப்பை அடைத்துக்கொண்டு பேய் மிளகு வளர்ந்து உள்ளே போக ஆரம்பித்திருக்குமாம். மனுஷர்களை காலைக் கட்டி இறுக்குவது மூலம் கொல்லக் கூடிய பேய் மிளகை குழந்தைகள் தொட்டால் விரலை இறுக்கி இற்று விழ வைத்து விடும்….




Read more »

பெரு நாவல் ‘மிளகு’ – Le soliloque de Rohini qui coule tumultueuse -Rohini’s soliloquy as it flows tumultuously

By |

பெரு நாவல் ‘மிளகு’ – Le soliloque de Rohini qui coule tumultueuse -Rohini’s soliloquy as it flows tumultuously

An excerpt from my forthcoming novel MiLAGU சென்னபைரதேவி மகாராணி மேல், கோவிலும் பசதியுமாகக் கட்ட வாரி இறைத்து கஜானாவை காலியாக்குகிறதாக வெகுஜனக் கோபம் இருக்கிறது. அது நேமிநாதனுக்கு ஆதரவாக மாறவில்லை என்பதே உண்மை. இதைச் சொன்னால் கார்டெல் சும்பன்கள் கவனிக்காமல் என் கையிடுக்கு வியர்வை ஈரத்தில் ஒற்றி முத்தமிட காமம் மிகுந்து உதடு சுழிக்கிறார்கள். அல்வாரீஸ் தடியன், நேமி நாசக்காரன் பார்க்காதபோது, என் முலைகளைக் கசக்குவேன் என்று கண்ணடித்து சைகை காட்டுகிறான். காமத்தில் சுழலும்…




Read more »

பெரு நாவல் – Thus spake Rohini, the scheming confectioner as the curtains are about to come down

By |

பெரு நாவல் – Thus spake Rohini, the scheming confectioner as the curtains are about to come down

Excerpt from my forthcoming novel MiLAGU நான் ரோகிணி. இன்னும் இருக்கிறேன். இருப்பேன். ஜெருஸூப்பா அழிந்து போகும். ஆனால் நான் இருப்பேன். சென்னபைரதேவி மண்ணுக்குள் மண்ணாவாள். நான் இருப்பேன். அவளுடைய மிர்ஜான் கோட்டை காலத்தின் வேகத்தில் சிதைந்து போகும். நான் இருப்பேன். சென்னா மகாராணி என்ற மிளகு ராணியின் நாட்டில் மிளகு விளையாமல் போகும். ஆனால் நான் இருப்பேன். அவளுடைய வளர்ப்பு மகன், என் ஆசை நாயகன் நேமிநாதன்  செதில் செதிலாகச் சிதைந்து அழுகி மண்ணில்…




Read more »

பெரு நாவல் ‘மிளகு’ – “The most tragic thing in this world is a sick doctor”

By |

பெரு நாவல் ‘மிளகு’ – “The most tragic thing in this world is a sick doctor”

An excerpt from my forthcoming novel MILAGU அவன் தொடர்ந்தான். மேலும் போர்த்துகல்லோடு மட்டுமின்றி மற்ற ஐரோப்பிய நாடுகளோடும் மிளகு கொள்முதல் விற்பனை ஒப்பந்தம் கையெழுத்திடப்பட வேண்டும். எப்படி கையெழுத்து இடப் போகிறீர் வகுளரே? நான் போட்டால் தான் கையெழுத்து. இல்லை என்றால் என் விரலை வெட்டி வைத்துத்தான் துணியில் தொக்கிப் பிடித்து அழுத்தி கட்டைவிரல் ரேகை வைக்க வேண்டும். செய்தாலும் செய்வீர். வன்மையாகக் கண்டிக்கிறேன். மகாராணியார் இதைக் கையாளும் விதம் தவறானது. உப பிரதானி…




Read more »