Archive For The “The Wagon Magazine” Category

புது நாவல் : 1975 -மங்கிய விளக்கு வெளிச்சத்தில் ரெம்ப்ராண்ட் ஓவியம் போல இருவரும் தெரிந்தார்கள்

By |

எழுதிக் கொண்டிருக்கும் நாவல் ‘1975’ – ஒரு சிறு பகுதி இது கோடவுண் தான். நியூஸ் ப்ரிண்ட் வாடையும், அச்சு மை வாடையும் தூக்கலாக வந்த கிடங்கு அது. சுவரில் வைத்த போர்ட் ஊர்ப் பேச்சு பத்திரிகையுடையது. உள்ளே நடக்க, கோடவுண் முடிந்து, ஒரு கதவு. திறந்தால், ஒரு அறை. இரண்டு கயிற்றுக் கட்டில். பின்னால், சிறு உள்ளறையாக டாய்லெட். வயதான, ஈர்க்கு போல மெலிந்த ஒரு சாமியார் கட்டிலில் கண்மூடிப் படுத்திருந்தார். மண் பாத்திரத்தில் இருந்த…




Read more »

புது நாவல் : 1975 : ”25.6.1975 புதன்கிழமை திரு.ஜனார்த்தனம் அவர்களின் மகன் நாயகம் மறைந்தார். ஜன.நாயகம் இறப்புக்கு அஞ்சலி செலுத்தும் நண்பர்கள், உறவினர்கள்”

By |

மெழுகுவர்த்தி சுடர் காற்றில் அலைந்து சீக்கிரம் பேசி முடிங்க. நான் உறங்கப் போகணும் என்றது. “என்ன விஷயம்?” என்று குருநாதனைக் கேட்டேன். “நானும் எமர்ஜென்சி எதிர்ப்பு ஆள்தான் சார். ஆனா பத்திரிகை நடத்தறவங்க நம்மளைக் கூப்பிட்டு வேலை கொடுத்திருக்காங்க. அதுவும் நந்தனம் பத்திரிகை நின்னு திண்டாடிட்டு இருந்த ஒரு கூட்டத்துக்கே காலோ அரையோ குறைவாகவாவது சம்பளம் கொடுத்து ஒரு கஷ்டமான காலத்துலே கடந்து போக வழி செஞ்சிருக்காங்க. அவங்க எமெர்ஜென்ஸி சப்போர்ட்னா பத்திரிகையும் அப்படித்தான். பிடிக்குதோ பிடிக்கலியோ…




Read more »

புது நாவல் : 1975 : போங்க தம்பி. சிரிக்க வக்காதீங்க. உங்களுக்கு இந்த ஊர் மனுசங்களையும் தெரியாது, மரக்கதவையும் தெரியாது

By |

Excerpt from the novel ‘1975’ being written உள்ளே மாஜி கவுன்சிலர் மேனேஜரிடம் சத்தம் போட்டுக் கொண்டிருந்தார். “அதென்ன பாரதப் பிரதமர் பெயர் வச்சிருந்தா லோன் கொடுத்திடுவீங்களா? அதுவும் எப்படி? லேபில் நம்ம பிரஸ்ஸிலே தானே அச்சுப்போட வந்தாங்க. இந்திரா நல்லெண்ண, அதுவாவது பரவாயில்லே, சஞ்சய் விளக்கெண்ண. நம்ம தேசத் தலைவர்களை, சுதந்திரம் கிடைக்க செக்கிழுத்த மக்கள் தலைவர்களை அவமதிக்கிறது இது. ஒரு பெட்டிஷன் போட்டேன்னா நீங்க கூண்டோட ட்ரான்ஸ்பர் ஆகிடுவீக. நல்ல வேள, புரூப்பு…




Read more »

புது நாவல்: 1975: அது ஒண்டிப்புலி இல்லே. ஒண்டிப்பிலி. நூறு புலி வலிமை அதுக்கு உண்டு

By |

மினி லோன்மேளாவில் மொத்தம் பத்து கடனாளர்கள். எட்டு பெண்களுக்கு தக்ளி, ராட்டை வைத்து நூல் நூற்க ஆளுக்கு ஆயிரம் ரூபாய். மீதி இரண்டு பேர் சுபாஷ் பஜாரில் கடை வைத்திருக்கிறவர்கள். ஒருவர் ஒண்டிப்பிலி வரதராஜநாயுடு. காலை முதல் ராத்திரி வரை இவர் கடையில் சர்பத் பிரசித்தமானது. ஊற வைத்த சப்ஜா விதை, கடல்பாசி, வேகவைத்த சேமியா, கடையில் ஊர்கிற எறும்பு, தெருவோடு போகிற யானை என்று சகலமானதையும் போட்டு மேலே ஒரிஜினல் ஒண்டிப்பிலி சர்பத் ஊற்றி அவர்…




Read more »

புது நாவல்: 1975: சார் உங்களுக்கும் எனக்கும் பேங்கு வேலை தவிர வேறெதுவும் தெரியாது என்றேன். வாஸ்தவம் தாண்டா போத்தி என்றார்

By |

”ஆமா, உனக்கு என்ன எல்லாம் மீன் வகை இருக்கு, எவ்வளவுக்கு போகும் ஒவ்வொண்ணும்னு தெரியுமோ? நாளைக்கு மீன்பிடிக்க லோன் கொடுத்தா என்ன பண்ணுவே வசூல் பண்ண”? ஜெனரல் மேனேஜர் விசாரித்தார். ”ஒரு கவலையும் இல்லே சார், கடன் வசூலைப் பத்தி எதுக்கு கவலைப் படணும்? கொடுக்கறதுதான் முக்கியம்”. அவர் என்னை நிமிர்ந்து பார்த்துச் சிரித்தார். “நீ ஜி.எம் என்ன, மேனேஜிங் டைரக்டராகத்தான் ரிடையர் ஆகப் போறே” என்றார். “நீங்க தான் சார், உன்னதமான பொசிஷன்லே ரிடையர் ஆவீங்க”…




Read more »

புது நாவல் : 1975:உங்க பிராஞ்சிலே என்ன விசேஷம்? ஏன் சார், பிள்ளையாண்டு இருக்கறமா என்ன விசேஷம்ன்னு சொல்ல?

By |

அடுத்த நாள் செண்ட்ரல் மினிஸ்டர் பங்கேற்கும் லோன் மேளாவுக்கு முன் எங்கள் ஜெனரல் மேனேஜரை நன்றாகக் குழைந்து வெந்த அரிசி பதத்துக்கு ஆக்கிவிட்டேன். சட்டை கலர் என்னவாக இருக்க வேண்டும் என்பதிலிருந்து நான் தான் முடிவு செய்தேன். ‘என்ன பேசப் போறீங்கன்னு என் முன்னாலே ஒத்திகை பார்த்திடுங்க, அங்கே போய் ஏதாவது ஒண்ணுக்கு ரெண்டா சொல்லிடக்கூடாது’ என்று ஹோட்டல் அறை மத்தியில் நின்று பேசச்சொல்லி ட்யூஷன் எடுத்தேன். “சார், கொடவயிறு அதிகமா தெரியறது. தொந்தி குறைய தினம்…




Read more »