Archive For The “The Wagon Magazine” Category
நான் எழுதி வரும் (நிறைவு செய்து கொண்டிருக்கும்) நாவல் 1975-இல் இருந்து சில பகுதிகள் ஹோலியும் ஞாயிற்றுக்கிழமையும் சேர்ந்து வந்திருக்கிறது. மார்ச் மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை இது. தெருவில் தெரிந்தவர்களும் பரிச்சயமில்லாதவர்களும் வண்ணப்பொடி கலந்த தண்ணீரை எதிர்ப்படுகிறவர்கள் மேலெல்லாம் அடித்து விளையாடும் நாள். குளிர் இந்தத் தினத்தோடு விடைபெறும். #1975_நாவல் குளிரோடு எமர்ஜென்சியும் கூடவே இந்திரா காந்தி அரசும் விடைபெற்றுப் போகப்போவதன் அறிகுறிகள் தெரிய ஆரம்பித்து விட்டன. எமர்ஜென்சி ஒழிந்து போகிறது என்ற மகிழ்ச்சி அத்தனை முகங்களிலும்…
தினமும் நான் நண்பர் கிரேசி மோகனுக்கு ஒரு வெண்பா அனுப்புவேன். அவர் அதற்குப் பதில் வெண்பா அனுப்புவார். அவர் அனுப்பி நான் பதில் அனுப்புவதும் உண்டு. வெண்பாவை அனுப்பும்போது வழக்கமாக முடிப்பது, ‘The ball is in your court’. கடந்த சில நாட்களில் அனுப்பிப் பெற்ற வெண்பாக்கள் இவை. பள்ளிக்கூடத்தில் உபாத்தியாயர் செய்விக்கும் தண்டனைகள் மிகவும் கடுமையானவை. அவரது பிரம்படி ஒன்றினாலேயே மாணாக்கர்கள் கதிகலங்குவார்கள். விட்டத்தில் கயிற்றைக் கட்டி அதைப் பிடித்துத் தொங்கிக் கொண்டு சில…
பரமண்டலத்தில் இருக்கும் பரமபிதாவே என்று தொடங்கும் பிரார்த்தனையையும் ஓதிய பிறகு, மண்டியிட்டிருந்த என் தலைதொட்டப்பனாகும் எட்வின்சேட்டனையும், தலைதொட்டம்மாவாகும் விக்டோரியா பெரியம்மாவையும் பிலாத்தோஸ் பாதிரியார் கேட்டார் : “குழந்தைக்கு என்ன பெயர் வைக்கணும்னு தீர்மானம் செஞ்சிருக்கீங்களா?” “ஜெசிக்கா”, என்றாள் விக்கி பெரியம்மா. “அந்தப் பெயர்லே ஒரு புனிதர் உண்டா?”, கோவில்பிள்ளை ஆண்டனி கேட்டார். எட்வின்சேட்டனும் விக்கி பெரியம்மாவும் என் அப்பனைப் பார்த்தார்கள். ஜெசிக்கா என்ற பெயருக்கு ஒரு நீண்ட சரித்திரம் இருக்கிறது. என் அம்மாவின் குழந்தைப் பருவத்தின்போது, அவளுடைய…
புது நாவல் : 1975 அவர் லுங்கியும் செருப்பும், மேலே யாரோ யாருக்கோ எப்போதோ போர்த்திக் களைந்த பொன்னாடையுமாக படி இறங்கிப் போனதைப் பார்த்தேன்
By Era Murukan |
எழுதிக் கொண்டிருக்கும் நாவலில் இருந்து ஒரு சிறிய பகுதி நான் யோசித்துவிட்டுச் சொன்னேன் – இங்கே ரயில்வே கேட் பக்கம் பொறம்போக்குலே குடிசை போட்டு சில தமிழ்க்காரங்க இருக்காங்க. முந்தியெல்லாம் சேலம் பக்கம் இருந்துதான் இப்படி புறப்பட்டு வருவாங்க. இப்போ தெற்கிலே எங்கெல்லாமோ இருந்து வர்றவங்க.. முக்கியமா பொம்பளை ஆளுங்க வீட்டு வேலை செய்வாங்க, ஆம்பிளைங்க ரயில்வே கேங்க் கூலி, இல்லே சின்னச் சின்னதா உதிரி வேலை. இந்தி சரளமா பேசுவாங்க. வந்து ஒரு வருஷத்திலே பேசக்…
புது நாவல் : 1975 :எமெர்ஜென்சி டைம். அதுவும் இது டில்லி. ஆபாசமா பேசினா செண்ட்ரல் மார்க்கெட்டை சுத்தி ஓட வச்சுடுவாங்க
By Era Murukan |
எழுதியதில் இருந்து ஒரு சிறிய பகுதி செண்ட்ரல் மார்கெட்டில் நுழைந்ததுமே இடது வசத்தில் பஞ்சாபி தாபா மற்ற எந்த நேரத்தையும் விட அதிகக் கூட்டத்தோடு காணப்பட்டது. ராத்திரி பத்தரை மணிக்கு விழுங்கிய விஸ்கி உடம்புக்குள் ஏதேதோ ரசாயனங்களைக் கட்டவிழ்த்து விட்டு என்னை முழுக்க ஆக்கிரமித்திருந்தது. மிகச்சிறந்த அழகியாக நான் கருதும் பாயல் அஹுஜாவைப் பற்றிய சீரிய சிந்தனை ஒன்றை எல்லோரும் அறிந்து கொள்ள ஏதுவாக சத்தமாகச் சொல்ல, ஜகதீஷ் அவசரமாக என் வாயைப் பொத்தினான். சீஃப் மேனேஜர்…
1975 என்ற தற்காலிகத் தலைப்போடு நான் எழுதிவரும் புதினம் தற்போது ‘சங்கரன் போத்தியின் எமர்ஜென்சி உலகம்’ என்று புதுத் தலைப்பு கொண்டிருக்கிறது. இன்னும் தகுந்த தலைப்பு கிடைத்தால் இதுவும் மாறலாம். கதை சென்னை, தெற்குச் சீமையில் சொந்த ஊர் என்று இதுவரை பயணித்து, தில்லியை அடைந்திருக்கிறது. தில்லி அத்தியாயங்களின் தொடக்கத்தில் இருந்து, ஒரு சிறு பகுதி : பிளாஸ்டிக் பூங்கிண்ணத்தில் எனக்கு விஸ்கி வார்த்தார்கள். கிண்ணத்தில் வைத்திருந்த ஒற்றை ரோஜாப்பூவை ஜகதீஷ் எடுத்ததையும், கொசு விழுந்து மிதந்த…