Archive For The “The Wagon Magazine” Category

My new short story in English – The Polymorph : The Wagon Magazine March 2018

By |

My new short story in English – The Polymorph : The Wagon Magazine March 2018

The Polymorph Era.Murukan When we reached the library, we saw the corridor leading to the doors strewn with wrinkled wet feathers, like a rain soaked trail of a debilitated eagle on its swan song flight. A small crowd of inquisitive bystanders stood bolt upright at the street corner where the road takes a turn to…




Read more »

புதிது: நாவல் 1975 முன்னுரை:வாழ்க்கையை ஓரளவு பிரதிபலித்து அதில் வண்ணம் கலக்க ஒரு முயற்சி இந்தச் சிதறுண்ட கதை கூறுதல்.

By |

1975 நாவல் -முன்னுரையிலிருந்து ஒரு பகுதி தன் வரலாறும் புனைவும் கலந்த பயோபிக்ஷன் நெம்பர் 40, ரெட்டைத்தெரு, தியூப்ளே வீதி என்ற இரு நாவல்களாக வெளிவந்ததும் அந்த உத்தியை இன்னும் சற்று நீட்சி அடைய வைத்து, புனைவின் சுதந்திரமும், வரலாற்றின் நிகழ்ந்ததை நிகழ்ந்ததாகக் காட்டும் தகவல் துல்லியமும், ஒருங்கமைதியும், செறிவுமாக ஒரு படைப்பு எழுதிப் பார்க்கத் தோன்றியது. வழக்கம் போல் சிறுகதைப் பொறியைக் கற்பனை ஊதிப் பற்ற வைக்க அது, படர்ந்து பரவிய நாவல் நெருப்பானது. 1970-களில்…




Read more »

புதிது : நாவல் 1975 எடிட்டிங் : நடை முரண் திருத்துதல், தொனியொழுங்கு சேர்த்தல், விரித்தெழுதுதல், பத்தி பிரித்தல் – இந்தத் திசைகளிலும் எடிட்டிங்க் நீள்கிறது.

By |

எழுதி நிறைவு செய்த என் அடுத்த நாவலான ‘1975’, எடிட்டிங்கில் இருக்கிறது. மூன்றாம் முறையாக முழுக்கப் படித்து, கதைப்போக்கு, எழுத்து, சொல், வாக்கிய அமைப்பு போன்றவற்றை சரிபார்த்துக் கொண்டிருக்கிறேன். நடை முரண் திருத்துதல், தொனியொழுங்கு சேர்த்தல், நீக்கம், விரித்தெழுதுதல், பத்தி பிரித்தல், இணைத்தல் – இந்தத் திசைகளிலும் எடிட்டிங்க் நீள்கிறது. என் ஆருயிர் நண்பர் கிரேசி மோகன் வழக்கம் போல் நாவலின் முதல் பி.டி.எஃப் பிரதியைப் படித்து முதல் விமர்சகராக தினசரி தொலைபேசி, கருத்தும், மேம்படுத்த யோசனையும்,…




Read more »

புதிது: நாவல் 1975: ‘எமர்ஜென்சி கீதங்களுக்கு என்னவெல்லாம் உபயோகம்!

By |

வெளிவர இருக்கும் என் நாவல் ‘1975’ – ஒரு சிறு பகுதி ஆகஸ்டில் பின்னணிப் பாடகர் முகேஷ் இறந்ததற்காகத் துக்கம் அனுஷ்டித்தார்கள். செப்டம்பரில், மராத்திய எழுத்தாளரும், மொழிபெயர்ப்பில் தமிழர்களிடையே பிரபலமானவருமான வி.எஸ்,கண்டேகர் மறைவுக்கு அடுத்த துக்கம் காத்தார்கள். இதெல்லாம் ஒரு சாக்கு தான் என்றும் அவர்கள் துக்கம் கொண்டாடியது இன்னும் எங்கும் நீக்கமற நிறைந்து நிற்கும் எமர்ஜென்சிக்காகத்தான் என்றும் அவர்கள் அவ்வப்போது அக்கம் பக்கம் பார்த்துக்கொண்டு காதில் கிசுகிசுப்பார்கள். காண்டேகர் துக்க தினக் கூட்டம் என்று அறிவித்து…




Read more »

New: நாவல் ‘1975’ எழுதி நிறைவு செய்தேன்

By |

பின்கதையில் இருந்து சங்கரன் போத்தி 1990 டிசம்பர் வரை டெல்லியில் வங்கி அதிகாரியாகப் பதவி வகித்தான். மே 1977-ல் சிகரெட் புகைப்பதை விட்டுவிட்டான். பாயல் மேல் அவன் வைத்த பொருந்தாத மையல் சற்றே அடங்க, அவனுடைய கல்யாணம் ஜூன் 1977-ல் நடந்தேறியது. அதன் பிறகு உலகம் எப்படிப் போகிறது என்பதில் அவ்வளவாகச் சிரத்தை இல்லாத இல்லறத்தானாக புதுடில்லி லாஜ்பத் நகரிலும், கிரேட்டர் கைலாஷிலும் யமுனா நதிக்கரையில் மயூர் விஹாரிலும் இரண்டு அறை அபார்ட்மெண்ட்களில் அடுத்த பதின்மூன்று வருடம்…




Read more »

அஞ்சலி – மேனாள் அமைச்சர் திரு செ.மாதவன்

By |

அஞ்சலி – மேனாள் அமைச்சர் திரு செ.மாதவன்

ஊரில் ரெட்டைத் தெருவுக்கு ஒரு முகம் உண்டு. கிழடு தட்டிக் கொண்டிருக்கும் அந்த முகம் தலையில் டர்பன் கட்டியிருக்கும். கொஞ்சம் சிடுசிடுவென்று இருக்கும். இங்கிலீஷ் சரளமாகப் புரண்டு வரும் நாக்கு. லா பாயிண்ட்களைத் தூக்கத்தில் எழுப்பிக் கேட்டாலும் சொல்லக்கூடிய மூளையும் டர்பனுக்கு உள்ளே உண்டு. ஊர்ப் பிரமுகர்களில் முக்கால்வாசிப்பேர் டர்பன் கட்டிய ரெட்டைத் தெரு வக்கீல்கள். சமயத்தில் பந்து வக்கீல் ஆபீசுக்குள் புகுந்துவிடும். டர்பன் கட்டிய வக்கீல்களின் ஆபீசில் படியேறிப் பந்தைக் கேட்டால் இங்கிலீஷில் பாய்ந்து வரும்…




Read more »