Archive For The “The Wagon Magazine” Category
மலாக்கா ஹௌஸின் முதல் மாடியில் இருக்கும் முதலாவது அறையைத் திறந்துகொண்டு ராகவன் சொன்னார்: “இது தான் ஜனநாயக வாலிபர் கூட்டமைப்பு ஆபீஸ். தோழர் இங்கே படுத்து உறங்கலாம்”. சொல்லியபடி, அவர் ஒரு மெழுகு வர்த்தியை ஏற்றினார். “ஏன் இங்கே முழுக்க மர பெஞ்சு போட்டு வச்சிருக்கு?” என்று ஷெனாய் கேட்டார். “சமயத்துலே மூணு நாலு பேருக்குப் புகலிடம் கொடுக்க வேண்டிப் போகும். அதனாலே தான்” ”இங்கே உள்ளூர்க்காரங்க யாரும் வரமாட்டாங்களா?” “வர்ற வழக்கமில்லே. கட்சியை தடை செஞ்சதாலே…
மொழிபெயர்த்துக் கொண்டிருக்கும், திரு.என்.எஸ்.மாதவன் எழுதிய ‘லந்தன் பத்தேரியிலெ லுத்தினியகள்’ நாவலில் இருந்து ஒரு சின்னஞ்சிறு பகுதி மசாலாப்பொடியை எட்வின்சேட்டன் நகமுனையால் அளந்து, வெந்த இறைச்சி மேல் தூவினார். அதன் மேல் மூன்றில் ஒருபாகம் சோற்றைப் பரப்பினார். தண்ணீர் விட்டுக் கரைத்திருந்த மஞ்சள்பொடியை அவர் சோற்றின் மேல் தெளித்தார். அதன் மேல் எட்வின்சேட்டன் இன்னொரு மெல்லிய அடுக்கு சோற்றைப் பரப்பினார். அதன்மேல், வறுத்த முந்திரிப் பருப்பும், உலர்ந்த திராட்சையும், வெங்காயமும். இன்னொரு நகக்கண் அளவு மசாலாப்பொடி. மேலே, இன்னொரு…
மொழிபெயர்த்துக் கொண்டிருக்கும் நூலில் இருந்து ஒரு சின்னஞ்சிறு பகுதி எட்வின்சேட்டன் சற்றுநேரம் ஏதும் பேசாமலிருந்தார். பிரியாணி அவர் மனதை விட்டு வெளியே போகவில்லை. மூன்று விரல்கடை ரம் கிளாஸ்களில் ஊற்றிக் கொண்டு அப்பன் கேட்டார் : “எட்வினே, நீர் பிரியாணி செய்ய எங்கே கத்துக்கிட்டீர்?” “எங்க அப்பன்கிட்டே தான். இல்லாம வேறே எங்கே? சாட்சாத் வெடியிறைச்சி விந்தாலு தோபியாஸ் பக்கத்திலேயே இருந்துதான். அப்பனுக்கு பிரியாணி செய்யறதோட தியரியும் தெரியாது. பிராக்டிகலும் தெரியாது. ஒரு பாரசீகத்தான் அவருக்கு அதை…
A snippet from the Malayalam novel “Lanthan Batheriyile Luthiniyakal” of Shri M.S.Madhavan I’m currently translatig வேலிக்கு அப்புறம் அவர்கள் மூவரையும் பார்த்து வலிய மத்தேவுஸ் ஆசாரி ஓடி வந்தார். “வரணும், வரணும் சந்தியாகு மேஸ்திரி. பிராஞ்சி, மிக்கூ நீங்களும் வாங்க. உள்ளே வாங்க எல்லோரும்”. ”வலிய மத்தேவுஸ் ஆசாரியாரே, நீங்க நினைக்கற ஆளுங்க இல்லே நாங்க. நான் பிரான்ஸ் நாட்டு சக்கரவர்த்தி காரல்மான். இந்த இளையவர் ரோமாபுரியிலே டயோக்ளீஷன் சக்கரவர்த்தி”. சந்தியாகு…
A snippet from the Malayalam novel I’m currently translating கொட்டாரம் படகுத்துறையை அடைந்தபோது தூண்டில்காரர்களின் வரிசை முடிந்திருந்தது. பந்தம் கொளுத்திப் பிடித்துக்கொண்டு ஒருத்தன் தூரத்தில் வருவதை அவர்கள் பார்த்தார்கள். “நம்ம முதல் குடிமகன்”, என்றான் சந்தியாகு “அது பென்ஹர்சேட்டன். ரொம்ப கோபக்காரன்”, பிரான்சிஸ் சொன்னான். பென்ஹரைத் தடுத்து நிறுத்தி சந்தியாகு சொன்னான்: “நான் காரல்மான் ச்க்கரவர்த்தி. இது துருக்கி சுல்தான் அல்பிராந்த்”. “மேஸ்திரி, குறுக்கே நின்னு வழி மரிக்காம, விஷயம் என்னன்னு சொல்லு”, பென்ஹர்…
(மொழிபெயர்த்துக் கொண்டிருக்கும் லந்தன்பத்தேரி நாவலில் இருந்து ஒரு சின்னஞ்சிறு பகுதி) “எல்லாரும் ஒரு கை கொடுங்க. இந்தப் பொண்ணை வீட்டுக்குள்ளே கொண்டு போகலாம்”, நர்ஸ் ஆனியம்மா சொன்னாள். “என்னை கொல்லாதீங்க. நான் இங்கே கிடந்தே பிரசவிச்சுக்கறேன்”, அம்மா கூவினாள். “பாத்துக்கிட்டு நிக்காதீங்க. ஆளுக்கொரு கை கொடுங்க”, என்றாள் நர்ஸ் ஆனியம்மா. “எனக்கு பாதி பிரசவம் ஆகிடுச்சு”, அம்மா உச்சத்தில் சத்தம் போட்டது லந்தன்பத்தேரி முழுக்கக் கேட்டது. அப்பன் லிசிப் பசுவைக் கட்டவிழ்த்து, தோட்டத்துக்கு இட்டுப்போய்க் கட்டினார். தொழுவத்தைச்…