Archive For The “The Wagon Magazine” Category
கடலில் படகு கவிழ்ந்ததும் அப்பூப்பனுக்கு தன் படைப்பாற்றல் பற்றிய கர்வம் அகன்றது. நைஜீரியாவில் அப்பூப்பன் படகு ஏதும் கட்டவில்லை. கிழக்கு ஆற்றின் அக்கரையிலுள்ள வடுதலையில் இருக்கும் தச்சர்கள் போல மேஜை, நாற்காலி போன்ற வீட்டு உபயோகத்துக்கான பொருள்களை ஈபோ இனத்தவர்களுக்காகச் செய்து கொடுத்தார். அப்பூப்பனின் இடது கண்ணில் பார்வை குறைந்து வர, அவர் சிறிய மரச் சிலுவைகள் மட்டும் செய்து கொடுக்கத் தொடங்கினார். பார்வை முழுக்க இழந்தபோது அவரை ஏசுசபைக்காரர்கள் முதியோர் இல்லத்தில் சேர்த்தார்கள். அங்கே இருந்துகொண்டு,…
நான் மொழிபெயர்த்து வரும், திரு என் எஸ் மாதவனின் மலையாள நாவல் – இன்று மொழியாக்கியதில் ஒரு சிறு பகுதி : 1961-ல் லந்தன்பத்தேரியில் முதல் குழாய்க்கிணறை கோமஸ் வீட்டில் தோண்டினார்கள். முக்காலியும், மண்ணில் துளையிட்டுத் தோண்டும் யந்திரங்களும் எடுத்துக்கொண்டு எரணாகுளத்திலிருந்து வந்து சேர்ந்த கிணறு தோண்டுகிறவர்களைப் பார்க்க அண்டை அயலார்கள் கோமஸின் வீட்டு வராந்தாவிலும் முற்றத்திலும் கூடி நின்றார்கள். நான் கோமஸ் வீட்டிற்குள், ரோஸிசேச்சியோடும், டெய்ஸியோடும், நடாஷாவோடும் கூட, ஜன்னல் கம்பிகளில் முகத்தை வைத்துப் பார்த்தபடி…
நான் மொழிபெயர்த்து வரும், திரு என் எஸ் மாதவனின் மலையாள நாவல் – இன்று மொழியாக்கியதில் ஒரு சிறு பகுதி “மட்டில்டா, நான் உன்னை பயமுறுத்திட்டேனா? நீயும் மத்தேவுஸும், மகளும் நிம்மதியா வாழ்க்கை நடத்திட்டிருக்கற போது திடீர்னு வந்து தொந்தரவு கொடுத்திட்டேனா? நம்ம சர்ச்சிலே திருப்பலியும், பிரார்த்தனையும் எல்லாம் லத்தீன் மொழியிலே இருந்தாலும், இறுதிக் கருணை செய்யறது மலையாளத்திலே தான். நாற்பது வருஷமா நான் மலையாளம் பேசவே இல்லை. ஆனா, அந்த நாற்பது வருஷமும் சொப்பனம் கண்டது…
லந்தன்பத்தேரியிலெ லுத்தினியகள் (என்.எஸ்.மாதவன்) மலையாள நாவல் தமிழில் மொழிபெயர்ப்பு (இரா.முருகன்) – இன்று மொழியாக்கிய ஒரு சிறு பகுதி ”மரியா, வா. உன்னைப் பலதடவை தொட்ட இந்தக் கை இன்னொரு முறை உன்னைத் தொடட்டும்”. “நீங்க யாரு?”, அப்பன் கேட்டார். அப்போது சந்தியாகுசேட்டனும், அவர் கூட டாட்டா கம்பெனியில் வேலை பார்க்கும் நண்பர்களும், சேவியரும் வந்து சேர்ந்தார்கள். “கோட்டும், பாபாஸ் ஷூவும் மாட்டி, கையிலே வெள்ளைப் பிரம்போட வந்திருக்கற பேண்ட் மாஸ்டர் யார், வல்ய ஆசாரி?”. “எங்களுக்கு…
இரா. முருகனின் புதிய சிறுகதைத் தொகுப்பு / நண்டு மரம் இரா.முருகன், சிற்றிதழ்களின் பொற்காலத்தில் எழுத வந்தவர். சிற்றிதழோ பேரிதழோ கதைகளை நிர்ணயிப்பதில்லை என்று நிரூபித்த சில தீவிர இலக்கியவாதிகளுள் ஒருவர். இவரது சிறுகதைகளுக்குள் நிகழும் உரையாடல்கள் தனித்துவமான சிறிய உலகை உருவாக்கும் தன்மை கொண்டவை. ஒவ்வொரு சிறுகதைக்கும் இரா.முருகன் கையாளும் நடை தேர்ந்த எழுத்தாளருக்குரியது. சிறந்த வாசகனைக் கோரி நிற்பது. இத்தொகுப்பில் உள்ள சிறுகதைகள் ஒவ்வொன்றும் தனித்துவமானது. சில கதைகள் ஓர் எழுத்தாளன் சோதனை செய்து…
லந்தன்பத்தேரிக்கு போர்த்துகீஸ் கக்கூஸ் வந்து ஏறக்குறைய இரண்டரை நூற்றாண்டு கடந்திருந்தது என்றாலும் லந்தன்பத்தேரிவாசிகள் அண்மைக்காலம் வரை, அதிகாலையில், கிழக்கே ஆற்றில் முதல் படகு ஓடுவதற்கு முன்பு, பரங்கி ஜபக்கூடத்தின் அருகில் சர்ச்சுக்கு சொந்தமான நிலத்தில் தான் காலைக்கடன் கழித்து வந்தார்கள். சுகாதாரத்தில் அக்கறை கொண்டவரும், தண்ணீர்ப் பிசாசு பிடித்து அடிக்கடி கை கழுவுகிறவருமான பிலாத்தோஸ் பாதிரியார் போஞ்ஞிக்கரை திருச்சபைக்கு உத்தியோக மாற்றத்தில் வந்ததும் அந்த நிலத்தில் ஒரு அறிவிப்பு வைக்கப்பட்டது : “இங்கே சிறுநீர், மலம் கழிக்கக்…