Archive For The “பொது” Category
‘இந்தக் கட்டுரைக்குத் தலைப்பு ஜெயமோகனம் அல்ல’ என்ற தலைப்பில் நான் எழுதிய கட்டுரை jeyamohan60 blog-இல் பிரசுரமாக இருக்கிறது. இந்தக் கட்டுரைக்குத் தலைப்பு ஜெயமோகனம் அல்ல
இன்று சுஜாதா சார் பிறந்தநாள். சாஹித்ய அகாதமிக்காக நான் எழுதிய ‘இந்திய இலக்கியச் சிற்பிகள்’ வரிசையில் ‘சுஜாதா’ நூலுக்கான முதல் வடிவத்திலிருந்து – ——————————————- சந்திப்பு – சென்னை 1995 அவர் பைபாஸ் இதய அறுவை சிகிச்சை முடிந்து வந்திருந்த நேரம். காலில் நீளமாக வடு. அறுவை சிகிச்சைக்காக அவரைக் குத்திக் கிழித்திருந்ததைப் பார்க்க கஷ்டமாக இருந்தது. ரெண்டாம் பைபாஸ் வெற்றிகரமாக முடிந்து அதற்கப்புறம் ரகளையாக இருபது வருடத்துக்கு மேல் அட்டகாசம்…
வேற்றுமொழிப் படைப்புகளுக்கு அறிமுகமும் விமர்சனமும் எழுதுவது எளிது. யாரையும் புருவத்தை உயர்த்த வைக்காமல், ‘This rambling novel by a defrocked gay French black priest about the intimacy of a bisexual revolutionary with his wife’s lover who happens to be the mistress of the Spanish dictator and his lust for Achilles, the Greek warrior revived from the pages of an…
மலையாள இலக்கியத்தில் ஆறு பத்தாண்டுகளாக மிகப் பெரும் ஆளுமையாக விளங்கி வரும் திரு. எம்.டி.வாசுதேவன் நாயர் அவர்கள் டிசம்பர் 2009-இல் சென்னை வந்திருந்தபோது நான் சந்தித்தேன். குமுதம் தீராநதி, அமுதசுரபி (குறுகிய வடிவம்) மற்றும் என் மின்நூல் ‘இதுவும் அதுவும் உதுவும்’ ஆகியவற்றில் இடம் பெற்ற நேர்காணலில் இருந்து – ——————————————————————— எம்.டி.வாசுதேவன் நாயரோடு ஒரு நேர்காணல் இரா.முருகன் எம்.டி.வாசுதேவன் நாயர். மலையாளிகளின் மனம் கவர்ந்த கதைக்காரர். நீட்டி முழக்கி அவர் பெயரை முழுமையாகச் சொல்லாமல்…
மிளகு பெருநாவலில் இருந்து – காவாலிப்பய மீன் ————————————– லூசியா விடிந்து கொண்டிருக்கும்போதே போஜன சாலைக்கு வந்து விட்டிருந்தாள். வழக்கமாக பகல் பனிரெண்டுக்கு வாடிக்கையாளர்கள் உணவருந்த வர ஆரம்பிப்பார்கள். இன்றைக்கு காலை பத்து மணிக்கே ஒரு பெரிய கூட்டமாக பட்டாளத்துக்காரர்கள் வருகிறார்களாம். சாயந்திரம் சூரத்துக்கும், அங்கிருந்து லிஸ்பனுக்கும் கப்பல் பயணம் போகிறவர்கள் என்பதால் காலைச் சாப்பாடாகவும் இல்லாமல், பகல் உணவாகவும் இல்லாமல், ரெண்டுங்கெட்டான் நேரத்தில் உண்டுவிட்டுக் கப்பலேறுவார்கள். இவர்கள் அவசரத்துக்குக் கோழிகள் தாமே ஓடிவந்து…
குமுதம் நிறுவன ஆசிரியர் எஸ்.ஏ.பி. அண்ணாமலை மகன் மருத்துவர் ஜவஹர் பழனியப்பன் தொடங்கியுள்ள இணையத்தளம் ‘வாவ் தமிழா’. அங்கே பணிபுரியும் நண்பர் தளவாய் சுந்தரம் கேட்டதால் நான் எழுதிய சிறுகதை ’ஆனைச் சத்தம்’. https://wowtamizhaa.com