Archive For The “பொது” Category
மிளகு – இரா.முருகன்: இரா.முருகன் தொழில்நுட்பத் துறையில் பணிபுரிந்தவர். வெளிநாட்டில் வசித்தவர். 1977ல் கணையாழியில் ஆரம்பித்த இலக்கியப் பயணம் ஐம்பதாண்டுகளை நெருங்கிக் கொண்டிருக்கிறது. முப்பதுக்கும் மேல் நூல்கள், புனைவின் எல்லா வகைமைகளிலும் எழுதியவர். எல்லாவற்றுக்கும் மேல் முகமில்லாதவரையும் சமமாக நடத்தும் அந்த Humbleness தமிழில் ரொம்ப அரிதான சரக்கு. பதினாறாம் நூற்றாண்டின் இறுதியில் மிர்ஜான் கோட்டையில் சென்னபைராதேவியின் அறுபதாமாண்டு பிறந்தநாள் கொண்டாட்டங்களுடன் ஆரம்பிக்கும் நாவல், இருபதாம் நூற்றாண்டிற்கு ஒரே தாவலாகத் தாவி, கடவுள் தேசத்தின் அம்பலப்புழையில், அகல்யாவின்…
பகவதியின் டயரியில் இருந்து ———————— அரசூர் பொங்கல் கழிந்து நாலாவது சனிக்கிழமை இங்கிலீஷ் வருஷம் 1877 நான் பகவதி. பகவதிக் குட்டியாக்கும் முழுப் பெயர். அம்பலப்புழக்காரி. அங்கே பகவதிக் குட்டி என்றால் வெகு சகஜமான பெயர். இங்கே தமிழ் பேசுகிற பூமியில் குட்டி என்றால் கேலியும் கிண்டலும் பண்ணுவார்களாமே. அம்பலப்புழையிலிருந்து கல்யாணம் கழித்து இங்கே வந்தபோது என் புருஷன் அப்படித்தான் சொன்னார். அவர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும். மலையாளம் மட்டும் தெரிந்த எனக்கு தமிழ் சுமாராக…
புரவி கலை இலக்கிய இதழ் மே 2022- இரா.முருகன் நேர்காணலில் இருந்து (நேர் கண்டவர் – காளிப்ரசாத்) கேள்வி வணிகமும் சமணமும் கலந்த ஒரு முரணாக ஒரு இழையை காட்சியமைக்கிறீர்கள்.. இது ஒருபக்கம் பொருள் ஈட்டும் பற்று மறுபக்கம் துறக்கும் திகம்பரம் என சமணத்தின் இரு பிரிவுகளை கூறுகிறது. சமண பஸதிக்குள் புத்திர பாசத்தில் சென்று விழும் பரமன் என இந்த duality பாத்திரங்கள் வரை நீளுகிறது. சமணம் மீதான உங்களுடைய பார்வைகளை கூற இயலுமா..? அது…
என் வாசகர்களும் நானும் என் புத்தக வெளியீட்டு விழாவில் சந்தித்த ஒரு வாசகர் சொன்னார், ‘ரெண்டு நாளா இந்த புத்தக வேலையிலே தான் இருந்தேன்’. பதிப்பாளரின் அலுவலகத்தில் அவரைப் பார்த்த நினைவு இல்லாததால், ‘என்ன மாதிரி வேலை?” என்று கேட்டேன். ‘இது வாராவாரம் திண்ணை பத்திரிகையோட இண்டர்நெட் தளத்திலே வந்துச்சு இல்லே? நூற்று நாலு அத்தியாயமும் தேடி எடுத்து அதே ஆர்டர்லே கட் அண்ட் பேஸ்ட் செஞ்சு எம்.எஸ் வேர்ட் ஃபைல் ஓப்பன் பண்ணி சேர்த்து வச்சுக்கிட்டேன்….
மே 2022 அந்திமழை மாத இதழில் பிரசுரமாகியுள்ளது கர்லா இரா.முருகன் போன வாரம் கர்லாக்கட்டை கந்தசாமி வாத்தியார் கைலாசம் புகுந்தார் என்று கலிபோர்னியா சான் ஒசே நகரத்தில் இருந்து செய்தி வந்தது. அனுப்பியவன் வெங்கி. எழுபது வயதில் என்னைப் போல செய்திகளுக்காகக் காத்திருந்து வந்ததும் இன்னும் பத்து பேருக்கு ஒலிபரப்பி, பேசி, சமூக ஊடகத்தில் பகிர்ந்து ஒரு நாள் முழுக்க வாட்ஸ் அப் அரட்டை அடித்து உறங்கி அடுத்த நாளுக்குக் கடந்து போகிறதைச்…
’புரவி’ இலக்கிய மாத இதழ் இரா.முருகன் நேர்காணலில் இருந்து – (மே 2022 இதழ் -நேர்கண்டவர் காளிபிரசாத்) : இன்றைய இலக்கிய போக்கு குறித்த உங்கள் பார்வை / விமர்சனம் என்ன? உங்களுக்கு அடுத்த தலைமுறையில் நீங்கள் வாசிக்கும் எழுத்தாளர்கள் யார் யார்? இரா.முருகன் எழுபதுகளில் தமிழ்ச் சிறுகதையின் இரண்டாம் பொற்காலம் வந்த பிறகு (1940களின் மணிக்கொடிக்காலம் முதல் பொற்காலம்) இந்த நூற்றாண்டுத் தொடக்கத்தில் சிறுகதைகள் வரவு குறைந்திருந்தது. இப்போது மறுபடி…