Archive For The “பொது” Category
பக்லவா ஆசை ——————– நோபல் பரிசு பெற்ற எகிப்திய எழுத்தாளர் நக்யுப் மஹ்ஃபுஸின் ’கெய்ரோ மூன்று நாவல் தொகுதி’ படித்தேன். எகிப்திய தி.ஜானகிராமன் என்று அவரை நான் சொல்லத் தயார். சிதறிக் கொண்டிருக்கும் குடும்பங்கள், சின்னச்சின்ன சோரங்கள், மனக் குமைச்சல், இசை மேல் விருப்பம் என்று பொதுவான நகாசும், கதை முடிச்சுகளும் தட்டுப்படுகின்றன. மாமியார் மருமகள் சண்டை மருமகளின் அப்பாவை வரவழைத்து நீதி கேட்பதில் நிற்கிறது. சிக்கலான பிரச்சனை. சிர்கேஸிய பாணி கோழிக்கறியை அவர்களில் யார் யாருக்குச்…
குறுநாவல் பகல் பத்து ராப்பத்து அத்தியாயம் 3 ப்ரீதி குளித்துக் கொண்டிருந்த பொழுது டெலிபோன் ஒலித்தது. விக்ரம்… கோகுல் .. டெல்லியிலிருந்து பல்பீர் .. சீனாக்காரி அண்ணி.. பாத்டப்பிலிருந்து ஒரு கையை உயர்த்தி எடுக்க, ரிசீவர் தண்ணீரில் மிதந்தது. ‘மாதம் ஆறாயிரம் வாடகை… ஃப்ளாட்டில் ஃபோன், கீஸர் பாத்டப், மைக்ரோ அவன் என்று சகலமானதும் ரொப்பியிருக்கிறேன்.. ரெண்டு மாதத்துக்கு ஒரு தடவை வந்து பார்ப்பேன் .. ஏதாவது ஒண்ணு நோக்காட்டில்…
அத்தியாயம் 2 ’பாஞ்ச் ரூப்யோ கோ தோ .. பாஞ்ச் கோ தோ ..’ சாந்தாபாய் யந்திரமாகக் கூவிக் கொண்டிருந்தாள். அவளுக்கு முன்னால் தவழும் கிருஷ்ணன். பொடிப்பொடியாகத் தரையில் விழுந்து கொண்டிருந்த கிருஷ்ணன் கோலத்தைச் சுற்றி விரையும் கால்கள். இது ஆபீஸ் போகிற கூட்டம். கொலாபாவும், நாரிமன் பாயிண்டும் இன்னும் சமுத்திரக் கரையை ஒட்டிய மகா உயரக் கட்டிடங்களுமே இவர்களின் காலை நேர லட்சியம். சாந்தாபாயும், கோலக் குழல் கிருஷ்ணனும், விக்டோரியா…
விடிந்து கொண்டிருந்தது. கனவான்க்ள் அரை டிராயர் அணிந்து காலில் சராய்களோடு ரிங் ரோடில் ஓடிக் கொண்டிருந்தார்கள். அல்லது தலையில் கம்பளி முண்டாசும், கையில் கோலுமாகப் பால் வாங்கப் போய்க் கொண்டிருந்தார்கள். காக்கி நிக்கரும், கையில் குண்டாந்தடியுமாக மளிகைக் கடைக்காரர்களும் மற்றவர்களும் உடன்படாதவர்களை அடக்க வலிமை பெற உடற்பயிற்சி.செய்யப் போனார்கள். சௌத் எக்ஸ்டென்ஷன் வரை நடந்து வந்த பிறகு தான் கார் ஞாபகம் வந்தது. போக வேண்டும். போனால், திரும்பவும் சந்தேகமான போலீஸ்காரர்கள். கண்டிப்பான ஆஸ்பத்திரிப் பணியாளர்கள், பேரழகும்…
‘இந்தப் பாவாடை உங்கள் வீட்டிலிருந்து கீழே விழுந்து கிடந்தது’. பீகாரி உள்பாவாடையைச் செல்லமாகக் கையில் எடுத்துத் தவழ விட்டுக் கொண்டு படியேறி வருகிறான். ‘உங்களுடையதா?’ ‘பார்த்தால் அப்படித்தான் தெரிகிறது’ அவள் ஆமோதித்தாள். ‘எனக்கும் தான்’ என்கிறான் அவன். ரெண்டு பேரும் சிரிக்கிறார்கள். ‘குடிக்கத் தண்ணீர் கிடைக்குமா?’ ‘உள்ளே வா’. படபடவென்று மோட்டார் சைக்கிள் பேயாக வந்து நிற்கப் போத்தி உள்ளே நுழைகிறான். ரயில் போகிற தாளத்தில்…
அத்தியாயம் 7 கடைசி இதழையும் உதிர்த்தாகி விட்டது. ஜவ்வந்திப் பூவின் காம்பு டியூப்லைட் வெளிச்சம் அப்பிய தெருவில் தெறித்து விழுந்தது. கொஞ்சம் தள்ளி இன்னும் நிறையப் பூ இரைந்து கிடந்தது. சேகரன் வருவதற்குள் அதையும் எடுத்து வந்து உதிர்த்துக் கொண்டிருக்கலாம். எதிரே சப் ஸ்டேஷனில் கூழாங்கல் பரப்பில் கம்பீரமாக நின்று டிரான்ஸ்பார்மர்கள் ஹூம்ம்ம் என்று பாடிக் கொண்டிருக்க, ஓடைப் பாலத்துச் சுவரில் போத்தி தனியாக உட்கார்ந்திருந்தான். வழியெல்லாம் பூ. அலங்காரமாக அணிந்து கொண்டு போனவன்…