Archive For The “பொது” Category

காலர் வைத்த சட்டை

By |

குங்குமம் ‘அற்ப விஷயம்’ பத்தி “சட்டை போட்டிருக்கீங்களா சார்?” நான் கேட்டேன். தொலைபேசியில் எதிர்முனையில் ஒரு வினாடி மௌனம். ‘புரியலையே’. மும்பையிலிருந்து வாரக் கடைசியில் சென்னை வந்திருக்கும் பிரபல இயக்குனர் அவர். சர்வதேச அளவில் அவருடைய கலைப்படங்கள் விருதுகளை வாரிக் குவித்தவை. ‘ஓய்வாக உட்கார்ந்து சாப்பிட்டபடியே இலக்கியம், சினிமா பற்றி எல்லாம் பேசலாம்’ என்று அவரிடம் யோசனை சொன்னது நான் தான். எங்கே உட்கார்ந்து பேசுவது? பத்திரிகையாளரும் நேற்றைய விளையாட்டு நட்சத்திரமுமான இன்னொரு நண்பர் உதவிக்கு வந்தார்….




Read more »

டிஜிட்டல் நாவசைந்தால்

By |

கல்கி டிஜிட்டல் கேண்டீன் பத்தியில் அண்மையில் வெளியானது டிஜிட்டல் கேண்டீன்-20 பழைய கருப்பு வெள்ளை சரித்திரப் படங்களில் பக்கம் பக்கமாகப் பேசும் வசனத்தில் தவறாமல் ஒரு வரி இடம் பெற்றிருக்கும். ‘மன்னரின் நாவசைந்தால் நாடே அசையும்’. ராஜாவின் கூஜா யாரும் இப்படிக் கூறாமல் சாமானியனும் நாவை அசைக்கலாம். கம்ப்யூட்டர் நாட்டை அசைக்காது. நடமாட உதவி செய்யும். பெரிய விபத்துகளில் சிக்கினால் முதுகுத் தண்டு பாதிக்கப்பட வாய்ப்பு உண்டு. உடல் உறுப்புகளை அசைத்து இயக்க மூளை கட்டளையிட முதுகுத்…




Read more »

ஓசிக் கடுதாசி

By |

  குங்குமம் பத்தி – அற்ப விஷயங்கள் கம்ப்யூட்டரும் இண்டர்நெட்டும் வந்தாலும் வந்தது. மின்னஞ்சல் என்ற ஈ-மெயில் விலாசம் இருக்கிற சிநேகிதர்கள் அதிகமாகி விட்டார்கள். தபால் அட்டை, இண்லெண்ட் லெட்டர் வாங்க அஞ்சல் அலுவலகப் படியேறியே வருடக் கணக்கில் ஆகிவிட்டது. மரக் கதவு, கம்பி கிராதி அடைத்த கதவு, அதில் கதவு இலக்கம், தெருப்பெயர், ஊர், பின்கோடு என்று இருக்கப்பட்ட பழைய நாள் நண்பர்களோடு தொடர்பு போயே போச்சு. கல்யாணம், காது குத்தல், சாவு, பிறப்பு போன்ற…




Read more »

ஈ மசி

By |

  கல்கி ‘டிஜிட்டல் காண்டீன்’ பத்தி சின்ன வயசில் பெரிய வீட்டில் இருந்துவிட்டுப் பெரிய வயசில் சின்ன வீட்டில் குடி போவது போல் துயரம் எதுவுமில்லை. அட, பல மாடிக் குடியிருப்பு அபார்ட்மெண்டைச் சொல்றேன் சார். ரெண்டு பெட்ரூம், எலிப் பொறி மாதிரி சமையல் அறை, ஹாலில் சோபா, நாலு நாற்காலி, டைனிங் டேபிள் என்று நாலாவது மாடியில் எண்ணூறு சதுர அடி ஃப்ளாட்டின் வசிக்கும் பலருக்கும் புத்தகம் படிக்க ஆசையிருந்தாலும் வாங்கிச் சேர்த்து வைக்க இடம்…




Read more »

வெர்ச்சுவல் ரியலிட்டி – இன்று

By |

  கல்கி ‘டிஜிட்டல் கேண்டீன்’ பத்தி கல்கியில் பொய்-மெய் (வெர்ச்சுவல் ரியலிட்டி) பற்றி 1995-லேயே எழுதியிருக்கிறேன். (பார்க்க – என் புத்தகம் ‘கொறிக்கக் கொஞ்சம் கம்ப்யூட்டர் சிப்ஸ்’ – ஸ்நேகா பதிப்பக வெளியீடு). பதிமூன்று வருடம் கழித்து கல்கியில் திரும்பப் பத்தி எழுதும்போது வெர்ச்சுவல் ரியலிட்டியோ, பத்தி எழுதி வரும் சன்மானத் தொகையோ அன்று கண்ட மேனிக்கு அப்படியே இருப்பதைக் கண்டு வியக்காமல் இருக்க முடியவில்லை!) *************************************** கண்ணபிரானும் நாரதரும் பூமியில் நடந்து போகிறார்கள். தாகம் என்று…




Read more »

எட்டு பெட்டிகள்

By |

  குங்குமம் பத்தி – ‘அற்ப விஷயங்கள்’ வேற்றுமொழிப் பத்திரிகையைப் புரட்டிக் கொண்டிருந்தபோது படத்தோடு செய்தி. ஒரு ரசிகர் ஆரவத்தோடு ஆல்பம் போட்டு வருடக் கணக்காக சேகரித்துக் கொண்டிருக்கிறாராம். எதை? நடிக நடிகையர், டைரக்டர் இசை அமைப்பாளர்கள், பின்னணிப் பாடகர்கள், பாடகிகள் பற்றிய தகவலை. அதிலும் ஒரு விசேஷம். இவர் சேகரிப்பது இந்தப் பிரபலங்களின் ‘காலமானார்’ செய்திகள். மேல் நாட்டுப் பத்திரிகைகளில் இரங்கல் குறிப்பு எழுதுவதற்கு என்றே தனியாக சிறப்புச் செய்தியாளர்கள் உண்டு. ஆபிசுவரி எடிட்டர் வேலைக்கு…




Read more »