Archive For The “பொது” Category

பாம்பு மொழி

By |

  Kungumam Column அற்ப விஷயம் -13 அரச கட்டளை பிறப்பித்துக் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டிக் கட்டாயப்படுத்தாமல் இருந்தால், எந்த மொழியையும் கொஞ்சம்போல தெரிந்து கொள்ளலாம் தான். அதில் ஒரு சுவாரசியம் உண்டு. இந்தக் ‘கொஞ்சம் போல்’ விருப்பத்தை நிறைவேற்ற எத்தனை வழிகள். க்ராஷ் கோர்ஸ் என்ற அவசர வகுப்பு இதில் ஒன்று. உலகத்தில் பேசப்படும் முக்காலே மூணுவீசம் மொழிகளைப் படிக்க நல்ல மனசுக்காரர்களால் இந்த வகுப்புகள் அங்கங்கே நடத்தப்பட்டு, அவர்கள் மாதாந்திர வருமானத்தைக் கணிசமாகக்…




Read more »

24 * 7(இருபத்துநாலு பெருக்கல் ஏழு )

By |

  விகடன் சிறுகதைத் தொகுப்பு சிறுகதை இருபத்துநாலு பெருக்கல் ஏழு *********************** ரெட்டி எனக்கு ஈ-மெயில் அனுப்பியிருந்தான். ‘நடுராத்திரியில் டெலிவிஷன் பெட்டிக்குள் இருந்து நாலைந்து பேர் இறங்கி வருகிறார்கள். உடனே அறையைக் காலி செய்துவிட்டு வெளியேறாவிட்டால் நாளைக்கு என் சாவு தலைப்புச் செய்தியாகப் படிக்கப்படும் என்று மிரட்டுகிறார்கள். ‘ நான் என் கண்ணாடிக் கூண்டிலிருந்து வெளியே பார்த்தேன். அடுக்கடுக்காக விரிந்த புரோகிராமர்களின் கம்ப்யூட்டர் வரிசைக்கு ரொம்பவும் பின்னால் நாலாவது சுற்றில் ரெட்டியின் தலை தெரிந்தது. மேல் கூரையை…




Read more »

ஆறு மடிப்பு அம்சா

By |

  Kungumam Column – அற்ப விஷயம் 16 பழைய கருப்பு வெளுப்பு சினிமாக்களை, அதுவும் தென்னிந்திய மொழித் திரைப்படங்களை டி.வியில் பார்க்கும்போது இதயம் கனக்கிறது. கனக்காமல் என்ன செய்யும்? வஞ்சனையில்லாத வாளிப்பும் பூரிப்புமாக, இடுப்பில் டயர் வைத்த மாதிரி சதை போட்ட அந்தக் காலக் கதாநாயகியர் சிரமத்தைப் பார்க்காமல் ஓடுகிறார்கள். மேட்டூர், கல்லணை என்று ஒரு அணைக்கட்டு விடாமல் ஏறி இறங்குகிறார்கள். ஆடுகிறார்கள். இடைவேளைக்கு முன் அழ ஆரம்பிக்கிறார்கள். கதாநாயகர்கள் பற்றிச் சொல்வது தற்போதைக்கு ஒத்தி…




Read more »

அரையர் தேசம்

By |

  குங்குமம் ‘அற்ப விஷயம்’ பத்தி தினசரி டிராபிக் சிக்னலில் திரும்பி வண்டி இடது புறத் தெருவில் நுழையும்போது இது தட்டுப்படத் தவறுவதே இல்லை. ஏழெட்டு பேர். வற்புறுத்தி எழுப்பி டிரஸ் செய்துவிட்டு நர்சரி பள்ளிக்கு இழுத்துப் போகப்படும் பெரிய சைஸ் குழந்தைகள் போல் அரை நிஜார். காலில் கான்வாஸ் ஷூ. வஞ்சனையில்லாத தொப்பையை மறைக்கும் டீ ஷர்ட், அறுபது சொச்சம் வயசுப் பெரிசுகள் எல்லோரும். இதில் ரெண்டு பேர் தரையில் விழுந்து விழுந்து கும்பிட்டு எழுந்து…




Read more »

செல், சத்தமாகச் சொல்

By |

  குங்குமம் பத்தி – அற்ப விஷயம்-9 ‘ஏதாச்சும் ப்ராப்ளம்னா உடனே கூப்பிடுங்க சார். என் செல்ஃபோன் நம்பரை நோட் பண்ணிக்குங்க’ இப்படிச் சொன்னவர் மத்திய அரசு தொலைபேசித் துறை ஊழியர். நீண்ட காலமாகப் பரிச்சயமானவர். தீபாவளி, பொங்கல், கையிருப்பு, பையிருப்பு குறைகிற நேரங்களில் அவருக்கு என் நினைவு வரும். டெலிபோன் இல்லாமல் ரிசீவரை மாத்திரம் பிய்த்து எடுத்துத் தோளில் தொங்கவிட்டுக் கொண்டு சர்ரியலிச ஓவியத்திலிருந்து இறங்கி வந்த மாதிரி வீட்டுப் படியேறுவார். அறைக் கோடியில் சின்ன…




Read more »

பாட்டுக்குப் பாட்டெடுத்து

By |

  குங்குமம் புதிய பத்தி – அற்ப விஷயம் ‘தொட்டால் பூ மலரும்’. கோவளம் கடற்கரை ஓரமாக ஓர் அழகான மாலைப் பொழுதில் எம்.ஜி.ஆர் பாடிக் கொண்டே வருவார். எதிர்த் திசையிலிருந்து சரோஜாதேவி மெல்ல நடந்தபடி ‘தொடாமல் நான் மலர்வேன்’ என்று எசப்பாட்டு பாடுவது அதே நிதானத்தோடு இருக்கும். அந்த நிதானத்துக்கு ஒரு அழகு உண்டு. ஒரு கம்பீரம் உண்டு. ஒவ்வொரு அடி முடிவிலும் ஒலிக்கும் கை தட்டும் சத்தம் எப்போது வரும் என்று ஏக்கத்தோடு எதிர்பார்க்க…




Read more »