Archive For The “பொது” Category

நாக்கு மூக்கு

By |

  குங்குமம் பத்தி – அற்ப விஷயம் -11 காப்பி சாப்பாட்டு ரசனை இன்னும் பிடி கிட்டாத ஒரு சங்கதி. காலை காப்பியில் ஆரம்பிக்கலாம். சில பல பேருக்கு வீட்டில் ரதியாக பெண்டாட்டி இருக்கக் கூடும். அந்தம்மா பின் தூங்கி முன் எழுந்து வாசலில் பத்திரிகையோடு வந்து விழும் ஆவின் பால் பாக்கெட்டை எடுப்பார். கள்ளிச் சொட்டாக காப்பி கலந்து கொண்டு வந்து ஐயாவை எழுப்புவார். இவர் அதைக் கடனே என்று குடித்து விட்டு செருப்பில் காலை…




Read more »

பயணிகள் கவனத்திற்கு

By |

  அற்ப விஷயம் -12 ஆலப்புழை எக்ஸ்பிரஸ் முக்கி முனகியபடி ஊடல் கொண்ட புதுப் பெண்டாட்டி மாதிரி ஊர்கிறது. மேற்கே சூலம், தென்மேற்கில் ஈட்டி, வடக்கே பிச்சுவா என்று ஜோசியர்கள் காலை நேர பண்பலை ஒலிபரப்பில் சொன்னதாலோ என்னமோ ரயில்பெட்டியில் கூட்டமே இல்லை. நடுராத்திரியில் கம்பளிப் போர்வையை பிடித்திழுத்து உலுக்கி எழுப்பி என்னை யாரோ விசாரிக்கிறார்கள் – ‘சேட்டா ஆலப்புழைக்கா?’ இல்லே, அமெரிக்கா போறேன் என்று சொல்லலாமா? வேணாம். இந்த ஆள் அதை ‘ஆ மரிக்கப் போறேன்’…




Read more »

பூச்சிகளின் சொர்க்கம்

By |

  Kungumam column – அற்ப விஷயம் -15 பண்டிகை காலத்தில் வெளிப்பட்ட பட்டணத்தின் முகம் நிச்சயமாக அழகாக இல்லை. தினசரி ஒரு மணி நேரம் மின்சார வெட்டு வந்தபோது ‘என்னய்யா பெரிய தொந்தரவாகப் போச்சு’ என்று அலுத்துக் கொண்ட அந்த முகம் மின்சாரத்தைப் பயன்படுத்த வரம்பு என்று பேச்சு எழுந்தபோது உருட்டி விழிக்க ஆரம்பித்தது. இதோடு கூட சில கோர லட்சணங்களும் அங்கங்கே தட்டுப்படத் தொடங்கின. ஆங்கிலப் பத்திரிகை ஒன்றில் ஒரு நடுத்தர வர்க்கத்துக் குடும்பத்…




Read more »

கச்சேரிக்குப் போனவன் கதை

By |

  குங்குமம் ‘அற்ப விஷயம்’ பத்தி திரும்பிப் பார்த்தால் தீபாவளி முடிந்து, ஓசைப்படாமல் கார்த்திகையும் கடந்து போகும். அப்புறம் குளிரக் குளிர இன்னொரு மார்கழி பிறந்துவிடும். பொதுவாக மார்கழி-டிசம்பரில் நம்ம சென்னை ரெண்டு விதமான குழுக்களாகப் பிரிவு செய்யப்படுகிறது. ஒரு கோஷ்டி கருப்பு வேட்டி, சட்டை, கழுத்தில் துளசிமாலையோடு ‘சரணம் அய்யப்பா’ என்று உரக்க விளித்து ஆலப்புழை எக்ஸ்பிரஸ் அல்லது யாத்ரா டிராவல்ஸ் பஸ்ஸில் மலையாள பூமிக்கு விசிட் அடிக்கக் காத்திருப்பது. இது கிட்டத்தட்ட ஆம்பளைங்க சமாசாரம்….




Read more »

எஞ்சினியரும் எலும்பும்

By |

  கல்கி பத்தி – டிஜிட்டல் கேண்டீன்-28 ஆட்டோ ரிக்ஷாவும் தொழில்நுட்பமும் புகுந்து புறப்படாத இடம் இல்லை. தெக்கத்தி பூமியில் நுட வைத்தியசாலையும் வடக்குத் தமிழகத்தில் புத்தூர் மாவுக் கட்டுமாக பரம்பரை எலும்பு முறிவு சிகிச்சை சக்கைப்போடு போடுகிறது. இதற்கு சவால் விடும் அலோபதியின் ஆர்த்தோபீடிக் சிகிச்சை முறைக்குத் தற்போது டெக்னானஜியின் துணையும் கிடைத்திருக்கிறது. ஒண்ணும் பெரிய விஷயம் இல்லை. எஞ்சினியர்கள் செயற்கையாக எலும்பை உருவாக்கி விட்டார்கள். முழுக்கப் பழுதடைந்து போனது, புற்று நோயால பாதிக்கப்பட்டது, இயல்பிலேயே…




Read more »

மின்சாரக் கண்ணா

By |

  கல்கி ‘டிஜிட்டல் கேண்டீன்’ பத்தி (29) புதுமைப் பெண்ணுக்கு வெகு முன்னாடியே தோன்றியது ஈல் மீன். தொட்டால் எக்கச்சக்கமாக ஷாக் அடிக்கும். கொஞ்ச நஞ்சமில்லை. அறுநூறு வோல்ட். நெருங்கி வந்தவர்களை உடனடியாக வைகுந்த பதவி அடைய வைக்கும் ஹை வோல்டேஜ் மின்சாரத்தை ஈலுக்குத் தருவது இயற்கை அன்னை. ஈல் மீனுடைய உடலின் மூல ஆதாரமான நுண்ணிய செல்களில் உற்பத்தியாவது இந்த மீன்சாரம். எலக்ட்ரோசைட் என்ற இப்படியான சிறப்பு செல்கள் ஆயிரக் கணக்கில் ஈல் மீன் உடலில்…




Read more »