Archive For The “பொது” Category

Sujatha… more on Sujatha, stage plays and Taslimaசுஜாதா, சுஜாதா, சுஜாதா, நாடகங்கள், தஸ்லிமா…

By |

<!--:en-->Sujatha… more on Sujatha, stage plays and Taslima<!--:--><!--:ta-->சுஜாதா, சுஜாதா, சுஜாதா, நாடகங்கள், தஸ்லிமா…<!--:-->

எழுதிக் கொண்டிருக்கும் ‘சுஜாதா சிறுகதைகள் தொகுப்புரை’ யில் இருந்து. இறுதிப்பிரதியில் இது இருக்கலாம், உதிர்ந்திருக்கலாம். இந்த நிமிடத்து ஸ்னாப்ஷாட் – சுஜாதா மொழிநடை அவருக்கு அடுத்த தலைமுறையை வெகுவாக பாதித்த ஒன்று. அவர் கதையில் ஒரு இடத்திலாவது எழுவாய் இல்லாமல் சட்டென்று ஒரு சொற்றொடர் தொடங்கும் – ’காப்பி குடித்துக் கொண்டிருந்தார்கள்’ என்பது போல். யார் காப்பி குடித்துக் கொண்டிருந்தார்கள், எங்கே எப்போது என்பதெல்லாம் சாவகாசமாக வரும். வராமலும் போகலாம். இன்னொரு சுஜாதா பிரயோகம் ‘விரோதமாக’. ஜீவராசிகளுக்கு…




Read more »

Nonsense and non-sensible‘நான்சென்சு’ம் நாமும் நாடும்

By |

அமெரிக்க விஜயம் முடித்து வந்த பிரதமர் நாளைக் காலை ஜனாதிபதியைச் சந்தித்துப் பேசுவாராம். அவசரச் சட்டம் பற்றி ஜனாதிபதி கருத்துச் சொல்லியிருப்பதால் இது முக்கியமான சந்திப்பாக இருக்கும் என்று தெரிகிறது. நாளைக் காலையை விட்டால் இந்த சந்திப்பு இப்போதைக்கு நடக்க முடியாதாம். ஏனென்றால் நாளை மதியம் ஐந்து நாள் நல்லெண்ண சுற்றுப் பயணமாக துருக்கி, பெல்ஜியம் போறாராம் ஜனாதிபதி. ஒண்ணு மட்டும் புரியலை. சாப்ட்வேர் கம்பெனிகள்லே தான் க்ளையண்ட் மீட்டிங், ப்ரபோசல் டிபென்ஸ், தீயணைப்பு நடவடிக்கை இப்படிஅதிகாரிகள்…




Read more »

Corporate casuality – human dignityமனிதம் தொலைத்த கார்ப்பரேட்டுகள்

By |

கார்ப்பரேட் கலாச்சாரத்தில் காணாமல் போய்க் கொண்டிருக்கும் ஓர் அம்சம் மனிதம். காலை ஒன்பது மணிக்கு வாக்-இன் நேர்காணல் என்று கூப்பிடுவார்கள். உங்களுக்குத் தகுதி இருப்பதாக முன் வரிசை நேர் காணுகிறவர்கள் (பெரும்பாலும் கத்துக்குட்டிகள்) கருதினால், திருப்பதியில் அடுத்த கூடத்துக்கு அனுப்புவது போல் அனுப்பப் படுவீர்கள். அங்கே காத்திருந்து முதல் கட்ட நேர்காணல். அது முடிந்து அடுத்த கூடம். அதற்குள் மதியம் ஆகி விடும். நேர்காணுகிறவர்கள் உணவுக்குப் போக, நேர்கண்டு வேலை பெற வாய்ப்பை எதிர்பார்த்துக் காத்திருக்கும் கூட்டத்துக்கு…




Read more »

Mr.Tr.Santhanakrishnan on ‘Number 40, Rettai Theru’’நெம்பர் 40, ரெட்டைத் தெரு’ பற்றி நண்பர் டி.ஆர்.சந்தானகிருஷ்ணன்

By |

Tr Santhanakrishnan shared a link. 19 September நம்மைச் சுற்றி இருக்கும் மனிதர்களை ரசிப்பது ஒரு சுகம். நாற்பது ஆண்டுகளுக்கு முன் சாவி எழுதிய “இவர்கள் இப்படித்தான்” படித்ததுண்டா? பால்காரரிளிருந்து வீடு பேருக்கும் வேலைக்காரி வரை அனைவரின் குணாதிசயங்களையும் அழகுற எழுதி நம் மனதில் ஒரு நேசம் கலந்த புன்னகையை வளர்த்து விடுவார். இருபது ஆண்டுகளுக்கு முன் சுஜாதா எழுதிய “ஸ்ரீரங்கத்து தேவதைகள்” இதே வகையைச் சேர்ந்தது தான். பத்தணா அய்யங்காராக மருவிய பத்மநாப அய்யங்காரை…




Read more »

Kamal Hassan meets Neela.Padmanabhanநீல பத்மனாபனைச் சந்திக்க வந்த கமல்ஹாசன்

By |

நீல பத்மனாபன் – 75 23 செப்டம்பர் 2013 திங்கள் விழா அமைப்பு – சென்னை பல்கலைக்கழகம், தமிழ் இலக்கியத் துறை இடம் பல்கலைக்கழக பவளவிழா மணி மண்டப அரங்கு நேரம் மாலை 3 மணி நிகழ்ச்சி நிரல் ——————- பேச்சாளர்கள் – நிகழ்வு – ‘நீல பதமனாபனுடன் ஒரு நாள் – ஆவணப்படம் திரையிடல்’ கருத்தாக்கம், இயக்கம், உருவாக்கம் கமல்ஹாசன்; உதவி – இரா.முருகன் ‘கலாகௌமுதி’ வாரப் பத்திரிகையில் (மலையாளம்) இந்தச் சந்திப்பு – ஆவணப்படத்…




Read more »

Don’t bin itகளையாதே

By |

களையாதே —————– ஊடகங்கள் உருவாக்காத சில்லுண்டித் தனமில்லாத செய்திகளைச் செவிமடுப்பீர். தொழில்நுட்பம் உருவாக்கிய தகவல் குப்பை இல்லை அதெல்லாம். நிகழும்போதே கிடைப்பதால் வாஷிங்டன் துறைமுகத் தாக்குதல் நேற்று விழுந்த குப்பையில்லை. ஆர்புத்நாட் வங்கி விழுந்ததை கவிதைக்குக் கவைக்குதவாத சமாசாரம் என்று ஒதுக்கிவிட்டு மீசை முறுக்கி பாரதி இன்னொரு தேசபக்திப் பாட்டு படிக்கவில்லை. எங்கேயோ நடந்த அரசியல் குழப்பமென்று ரஷ்ய சக்கரவர்த்தி விழுந்ததை ஒதுக்காமல் யுகப் புரட்சி என்றான். தகவல் குப்பை என ஒதுக்கிக் கொண்டே போனால் யுகப்…




Read more »