Archive For The “பொது” Category

அச்சுதம் கேசவம் – சென்னை – அத்தியாயம் 7

By |

அச்சுதம் கேசவம் – சென்னை : அத்தியாயம் 7 திரும்பவும் போயாச்சா? பேஷ் கற்பகம் காட்டுக் கூச்சலாகச் சத்தம் போட்டாள். அடிக்காதேடி. அடிக்காதேடி. தெரியாமப் பண்ணிட்டேன். ஹாலில் பிரம்பு நாற்காலியைப் பிடித்துக் கொண்டு குனிந்து நின்றார் நீலகண்டன். பயத்தோடு அவளைப் பார்த்தார். அவசரமாக உள்ளே போனாள். அது உள் பக்கமா, வெளியே போகிற பாதையா? எதோ ஒன்று. அங்கே சுவரில் ஆணி அடித்து நீலகண்டனின் சட்டை தொங்கும். பக்கத்தில் நீளமாகக் கயிறு கட்டி பெயர் மறந்து போன…




Read more »

அச்சுதம் கேசவம் – ரயிலில் : அத்தியாயம் 6

By |

அச்சுதம் கேசவம் – ரயிலில் : அத்தியாயம் 6 இரா.முருகன் ஜனவரி 13, 1964 திங்கள்கிழமை நேற்று இந்த ரயிலின் சக்கரங்கள் உருள ஆரம்பித்தன. பழைய தில்லி பஹார் கஞ்ச் சந்திப்பில் இருந்து வண்டி கிளம்பிய போது, குளிர் கவிந்து இருட்டு கூடவே வந்து ஒண்டிக் கொண்ட அந்தி ஆறே முக்கால் மணி. கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் என்று பெயரை வெள்ளைக்காரன் வைத்து முப்பது வருஷத்துக்கு மேல் ஆகிறது. ரெண்டாயிரத்து எழுநூறு குதிரை இழுப்பு சக்தி கொண்ட…




Read more »

அச்சுதம் கேசவம் – புதுடெல்லி அத்தியாயம் 5

By |

அச்சுதம் கேசவம் – புதுடெல்லி அத்தியாயம் 5 இரா.முருகன் ஜனவரி 12, 1964 ஞாயிற்றுக்கிழமை பகல் நேரம் ஒரு பத்து நிமிடம் சர்வ வியாபகமான தூற்றலோடு வந்தது. தூறல் நின்றபோது பஞ்சுப் பொதியை அப்பினாற்போல் மூடுபனி கவிய ஆரம்பித்தது. சின்னச் சங்கரன் இரண்டு நூதன் ஸ்டவ், ஒரு மோடா, முக்காலி, ராஜகுமாரிக்கு உறக்கம் வர குந்தன்லால் சைகால் பாடிய பழைய கிராமபோன் ரெக்கார்ட், தாராசிங்க் உடுத்திக் கொண்டாலும் இன்னும் தாராளமாக இடம் இருக்கும் கதர் பைஜாமா, அதே…




Read more »

அச்சுதம் கேசவம் – அத்தியாயம் 4

By |

புது நாவல் அச்சுதம் கேசவம் – அத்தியாயம் 4 (வைத்தாஸ் எழுதும் நாவலில் இருந்து) குஞ்ஞம்மிணி என்றான் வைத்தாஸ். ஆராக்கும்? மேல்சாந்தி கேட்டார். வாசலில் யாராவது பெண்பிள்ளை இவனோடு வந்து காத்திருக்கலாம். ஸ்திரி. உறவு அதில்லாத பட்சத்தில் கரிசனமான அண்டை அயலாரோ, ஆப்பீஸில் கூட வேலை பார்க்கிறவர்களோ. கோவிலுக்குப் போகிறேன் என்றபோது கூடவே வந்திருப்பார்களாக இருக்கும். மழை நேரத்துக் குட்டநாடு பற்றி, ஈரமும், சேறும், தணுத்த காற்றும், சகல இடத்திலும் கவிந்திருக்கும் வலை வாடை, செம்மீன் வாடை…




Read more »

நீல.பத்மநாபனுடன் ஒரு நாள் – பகுதி 2

By |

நீல.பத்மநாபனுடன் ஒரு நாள் – பகுதி 2

நீல.பத்மநாபனுடன் ஒரு நாள் – பகுதி 2 (காவ்யா இலக்கியக் காலாண்டிதழ் அக்டோபர் – டிசம்பர் 2014) கமல்:நாடகம்னு சொல்லும்போது சுயநலமாக ஒரு கேள்வி.. ஷண்முகம் அண்ணாச்சி நாடகங்கள்லே என்னெல்லாம் பார்த்திருக்கீங்க? நான் அந்தக் குழுவிலே இருந்திருக்கேன் நீல:அப்படியா? ஔவையார், மனிதன்.. எல்லாம் பார்த்திருக்கேன்..நீங்க அதிலே எல்லாம் நடிச்சிருக்கீங்களா? கமல்: ஆமா, பஸ் டெர்மினஸுக்கு வர்றதுக்கு முன்னாடி, கடைசியாக ஒரு ஸ்டேஜ். பத்து பைசா டிக்கெட் வாங்கி எப்படியோ ஏறிட்டேன் .. நீல:களத்தூர் கண்ணம்மா பார்த்திருக்கேன் கமல்:அதுக்கு…




Read more »

அச்சுதம் கேசவம் – அத்தியாயம் 2

By |

அச்சுதம் கேசவம்  – 2 படகுத் துறை. மழைக்கு முதுகு காட்டிக் கொண்டு நாலு பேர் நிற்கிறார்கள். துணிக்குடை பிடித்தவர்கள். கால் மாற்றி நின்று மழைக்கு நடுவே காயலில் படகுச் சத்தம் கேட்கக் காது கொடுத்து நின்று கொண்டிருக்கிறவர்களை லட்சியம் செய்யாமல் இடி முழக்கத்தோடு மழை நகர்ந்து கொண்டிருக்கிறது. மழை மறைத்த கோடியில் இருந்து நீர்ப் பரப்பில் சலனம். பூம் பூம் என்ற முழக்கம். கோட்டயத்திலிருந்து வரும் படகின் முழக்கம் அது.  திருவனந்தபுரம் போய்க் கொண்டிருப்பது. நீரில்…




Read more »