Archive For The “பொது” Category
இங்கேல்லாம் நிக்கக் கூடாது. மந்திரி சாப் வீடு. ஹட் ஜா. மலபார் ஹில்ஸ் மந்திரி பங்களா வாசலில் துப்பாக்கி ஊன்றி நின்ற போலீஸ் சேவகன் சொன்னான். சொன்னதோடு மட்டுமில்லை. திலீப் தோளில் கை வைத்து ஓரமாகத் தள்ளினான் அவன். மதராஸி மந்திரி. உள்ளூரில் மந்திரி இல்லை தான். ஆனால், டில்லியில் மத்திய சர்க்காரில் சகல சக்தியோடும் இருக்கப் பட்டவர். மதராஸில் இருந்து இங்கே எப்போதோ குடி பெயர்ந்து, யூனியனில் பிரபலமாகி, கணிசமாக ஓட்டு வாங்கி லோக்சபா, ராஜ்யசபா…
அச்சுதம் கேசவம் – அத்தியாயம் பதினாறு இரா.முருகன் கடுதாசி வந்தாச்சு. அமேயர் பாதிரியார் வந்தபடிக்கே, மூச்சு வாங்கிக் கொண்டு அறிவித்தார். போப்பரசர் உத்தரவு. குட்டி ஆடுகளைக் வழிப்படுத்தும் மேய்ப்பன் எழுத்து. கையில் பிடித்திருந்த கடிதாசை உயர்த்திப் பிடித்து அவர் அன்போடு சிரித்தார். உலகெங்கும் வெள்ளமாகக் கருணை பொழிந்து இன்னும் மிச்சம் உள்ளதை வீட்டில் இருக்கப்பட்ட பீப்பாய், தண்ணீர் வாளி, பால் பாத்திரம், மேசைக் கரண்டி, மர ஸ்பூன் என்று எல்லாவற்றிலும் வழிய வழியப் பிடித்து அதுவுமெல்லாம் நிறைய,…
அச்சுதம் கேசவம் – அத்தியாயம் பதினைந்து இரா.முருகன் கொச்சு தெரிசாவுக்கு விழிப்பு வந்தபோது கட்டிலில் புரண்டு படுத்து மெட்காபே, ஒரு முத்தம் தா என்றாள். எடி தெரிசாளே அவன், அந்தக் கேடுகெட்ட மெட்காப் தடியன் கல்லறையில் இருந்து இனியும் திரும்பி வந்து உனக்கு முத்தமும் மற்றதும் அனுபவப்படுத்துவானென்று தோணவில்லை. வந்தாலும் அந்நிய புருஷன் யாரும் அதையொண்ணும் உனக்குத் தரவேணாம். நானே தருகிறேன். வாங்கிக்கொள். முசாபர் புகையிலை மணக்க, ஒழுங்கில்லாமல் கோரைப் புல்லாக வளர்ந்த மீசை தெரிசாவின் மேலுதட்டில்…
இன்றைய (ஃபெப்ரவரி 10, 2015) ’தி இந்து’ நாளிதழில் வெளியாகியுள்ள என் கட்டுரை இது 4ஜி இரா.முருகன் முக்காலி போட்டு வீட்டுக் கூடத்திலே வைத்த லேண்ட் லைன் தொலைபேசி தான் முப்பது ஆண்டு முன்பு வரை உலகம் முழுக்க இருந்தது. காரில் வைத்து நகரும் தொலைபேசியை அமெரிக்கக் கம்பெனியான மோட்டரோலா 1984-ல் விற்பனைக்கு வெளியிட்டது. அதுதான் முதல் தலைமுறை மொபைல் தொலைபேசி. தொடர்ந்து 1991-ல், முன்னேறிய தொழில்நுட்பத்தோடு, பின்லாந்தில் அறிமுகமானது ரெண்டாம் தலைமுறை தொலைபேசி. பேச்சையும், குறுஞ்செய்திகளையும்(SMS)…
டிஜிட்டல் கேண்டீன்-5 நானோ நானா யாரோ தானா இரா.முருகன் கடுகு சிறுத்தால் ஏன் காரம் போகாது? தொழில்நுட்பம் கைகொடுத்தால், சிறுத்த கடுகு இனிக்கவும் கூடும். நானோ டெக்னாலஜி செய்யும் ஜித்து வேலை இது. கடுகு, கட்டித் தங்கம், கம்ப்யூட்டர், கார் இப்படி சகலமானதும் இயற்கையாகவோ அல்லது மனித முயற்சியால் உருவாக்கப்பட்டோ அமைந்த பொருட்கள். ஒரு பொருளின் வடிவத்தை அதன் சகல குணாதிசயங்களோடும், செயல்பாடுகளோடும் மிக மிகச் சிறியதாகக் குறுக்க முடிந்தால் சில அற்புத விளைவுகள் ஏற்படக்கூடும் என்கிறது…
அச்சுதம் கேசவம் – அத்தியாயம் பதினான்கு இரா.முருகன் நீல நிறம் தவிர வேறொன்றும் இல்லை. நீலம் வானம் இறங்கி வருகிறது. நீலம் நிலம்பட நிற்கிறது. செங்குத்தாக நீல இறகு கூம்பிப் பறந்து வருகிறது. தரை தொட்டதும் வெடித்துச் சிதறிய தோகைக் கண்களின் அடுக்காக நீலம் உயர்கிறது. நீலம் காலடி எடுத்து மெல்ல வைத்து ஆடுகிறது. நீலம் சூனியக்காரியின் இச்சையூட்டும் அழைப்பாக, அந்தரங்க ரகசியம் சொல்ல அகவுகிறது. ஒரு நீலம், நீலமாக இன்னொன்று, நீலமே வடிவாக மற்றுமொன்று, புதிதாக…